Neptune Recyclers அறிமுகப்படுத்தும் EduCycle: இலங்கையில் இளைஞர்களின் தலைமையிலான நிலைத்தன்மைமுன்னோடியான இயக்கம்

இலங்கை இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் Neptune Recyclers நிறுவனமானது, Neptune EduCycle எனும் பெயரில் தேசிய ரீதியிலான பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மையப்படுத்திய ஒரு தொலைநோக்குத் திட்டத்தை உத்தியோகாபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதிலான கலாசார மாற்றத்தை இளைஞர்களின் மூலம் உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட, செயல் ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முயற்சி ஆகும். PET பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வது தொடர்பான உற்சாகம் மிக்க மற்றும் கலந்துரையாடல் […]

Continue Reading

ஸ்கண்டினேவிய கல்விப் பாதைகள் மூலம் உலக எதிர்காலத்தை வடிவமைத்த 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Eduzone கல்வி ஆலோசனை நிறுவனம்

Eduzone Consultants (Pvt) Ltd நிறுவனம், தனது 15ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது. 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இலங்கையில் முதன்முதலாக ஊக்குவித்த கல்வி ஆலோசனை நிறுவனமாக தனது பயணத்தை ஆரம்பித்தது. கடந்த 15 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கான விண்ணப்பங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, அவர்கள் பலரும் தற்போது சுவீடன் மற்றும் பின்லாந்தின் குடியுரிமையாளர்களாக மாற உதவியுள்ளது. அத்துடன், Eduzone நிறுவனம் ரூ. […]

Continue Reading

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வட பிராந்தியத்தில் டிஜிட்டலை ஊக்குவிக்கும் வகையில் வணிக பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களுடனான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது

வட பிராந்தியத்தில் உள்ள வணிக பிரமுகர்கள் மத்தியில் டிஜிட்டல் புத்தாக்கங்களை ஊக்குவித்து, அவை குறித்த ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன், அவர்களுடன் பிரத்தியேகமான சந்திப்பொன்றை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி அண்மையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சந்திப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் இடம்பெற்றது. இப்பிராந்தியத்தில் வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவுவதில் இவ்வங்கி காண்பித்து வரும் அர்ப்பணிப்பில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வாக இம்முயற்சி அமைந்துள்ளது. வட பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட வணிக பிரமுகர்களும், தொழில் முயற்சியாளர்களும் இந்த […]

Continue Reading

பேலியகொடையில் அதி நவீன DATS கற்கை நிலையத்தின் மூலம் தொழிற்கல்வியை வலுப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான DIMO, அதன் DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தினை பேலியகொடைக்கு  இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவிக்கின்றது. இந்நடவடிக்கையானது  உலகத்தரத்தில் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இலங்கையில் உருவாக்குவதற்கும், தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும் அந்நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மாற்றகரமான படியைக் குறிக்கிறது. இப்புதிய கற்கை நிலையமானது  தொழில்துறையில் நிலவும் கேள்வி மற்றும் பயிற்சி மேன்மை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பும் முன்னோடியான தொழில்நுட்பக் கல்வியில் DATS இன் 35 ஆண்டுகளுக்கும் […]

Continue Reading

டெல்மேஜ் மற்றும் Shell Lubricants இணைந்து முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையை கொழும்பில் கொண்டாடின

இலங்கையின் நம்பிக்கையை வென்ற பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக டெல்மேஜ், உலகப் புகழ்பெற்ற வலு வர்த்தக நாமமான Shell உடன் கொண்டுள்ள பங்காண்மையின் மைல்கல் பூர்த்தியை குறிக்கும் வகையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் விசேட நிகழ்வொன்றை 2025 ஜுன் 11 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் Shell மற்றும் டெல்மேஜ் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, இந்த பங்காண்மையின் பலமான வெளிப்பாட்டையும், இலங்கையில் lubricants தீர்வுகளின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றமை பற்றியும் […]

Continue Reading

2024/25 நிதியாண்டில் First Capital சந்தை முன்னோடியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

First Capital Treasuries PLC இன் நிலையான பங்களிப்பு அடங்கலாக, முன்னணி முதன்மை விற்பனையாளர் எனும் நிலையை மீள உறுதி செய்திருந்தது முன்னணி நிதிசார் தீர்வுகள் வழங்குனரான First Capital Holdings PLC (குழுமம்), 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் மொத்தப் பரந்த வருமானமாக ரூ. 5.0 பில்லியனை பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 10.1 பில்லியனாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட்டி வீதங்கள் பெருமளவில் வீழ்ச்சியடைந்தமை […]

Continue Reading

Scale Up Sri Lanka 2025 இல் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்ட ஆலோசனை சேவைகளை First Capital அறிமுகம் செய்தது

First Capital Holdings PLC யின் துணை நிறுவனமான First Capital Advisory Services (Pvt) Ltd, Scale Up 2025 தேசிய சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் அமர்வின் உத்தியோகபூர்வ ஆலோசனை பங்காளராக பெருமையுடன் இணைந்திருந்தது. இந்நிகழ்வை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், First Capital தனது புதிய துணை நிறுவனமான First Capital Advisory Services நிறுவனத்தை அறிமுகம் செய்திருந்தது. மூலதன சந்தைகள் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க ஆலோசனை […]

Continue Reading

இலங்கையின் வாய்ச் சுகாதார மேம்பாட்டில் 25 வருட கூட்டாண்மையை கொண்டாடும் க்ளோகார்ட் மற்றும் இலங்கை பல் மருத்துவ சங்கம்

Hemas Consumer Brands நிறுவனத்தின் நம்பகமான வாய்ச் சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) 25 ஆண்டுகளுக்கும் மேலான அங்கீகாரத்தை பெற்று விளங்குகின்றது. இந்த நீண்ட கால ஒத்துழைப்பு, இலங்கையர்களின் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் குளோகார்டின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. உயர் தரத்துடன், புளோரைட் சேர்க்கப்பட்ட வாய்ச் சுகாதாரத் தயாரிப்புகளை வழங்கும் க்ளோகார்ட், தேசிய அளவிலும், உலகளாவிய ரீதியிலுமான உரிய தரநிலைகளை பின்பற்றுகிறது என்பதற்கான சான்றாகவும் […]

Continue Reading

கடல்சார் குற்றங்களை எதிர்கொள்ளும் முயற்சியில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை காட்டும் அர்ப்பணிப்பு தொடர்ந்து உறுதியாகவே உள்ளது

கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, பல்வேறு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பிராந்திய கடல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ‘Disi Rela’ கூட்டு கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் அறிமுகத்தின் மூலம் ஒரு வலுவான புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த வருடத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, எமது திறன்களில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் […]

Continue Reading

வெசாக் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடிய தீவா – “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” மூலம் கருணையும் தூய்மையும் வெளிப்படுத்தப்படுகிறது

இலங்கையின் நம்பகமான மற்றும் முன்னணி சலவைத் தூள் வர்த்தகநாமமான தீவா, வெசாக் காலத்தில் களனி ரஜ மஹா விகாரையில் “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில், பௌத்த மக்கள் புனிதமாக கருதும் இலங்கையின் தேசிய மலரான நீலத் தாமரை மலர்களை பக்தர்களுக்கு வழங்கியதன் மூலம், தெய்வீக நம்பிக்கையுடனும், நாட்டின் கலாசார மரபுகளுக்கும் ஏற்ற வகையிலும் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. நீலத் தாமரை மலரானது, அதன் அழகு, மணம் […]

Continue Reading