David Pieris Logistics இலங்கையின் வட பிராந்தியத்தில் முதலாவது பல்-பயனர்விநியோகத்தீர்வு (Multi-user Logistics) வளாகத்தைஆரம்பித்துள்ளது

David Pieris Group of Companies இன் விநியோகத்தீர்வுப் பிரிவான David Pieris Logistics (Private) Limited (முன்னர் D P Logistics (Pvt.) Limited என அறியப்பட்டது), தனது முதலாவது பல்-பயனர் விநியோகத்தீர்வு வளாகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்துள்ளது. இலங்கையின் வட மாகாணத்தில் நவீன விநியோகத்தீர்வு உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக இது அமைந்துள்ளது.

இல. 202/01, கட்டுவன் – மயிலிட்டி வீதி, மயிலிட்டி தெற்கு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த வளாகம், பலாலி சர்வதேச விமான நிலையத்தை அண்மித்ததாகவும் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ள முதலாவது நவீன வசதிகள் படைத்த, நிபுணத்துவ ரீதியில் நிர்வகிக்கப்படும் பல்-பயனர் விநியோகத்தீர்வு களஞ்சிய வளாகமாக இது அமைந்துள்ளது. இலங்கையின் வட பிராந்தியத்தில் பாரிய விநியோகத்தீர்வு உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் David Pieris Logistics கொண்டுள்ள ஈடுபாட்டை இந்த முதலீடு வெளிப்படுத்துவதுடன், பிராந்தியத்தின் யுத்த காலத்தின் பின்னரான பொருளாதார மீட்சியில் நீண்ட கால தனியார் துறையின் நம்பிக்கையை மீள உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.

விரிவாக்கம் செய்யக்கூடிய, பல்-பயனர் மூன்றாம் தரப்பு விநியோகத்தீர்வு (3PL) மையமாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வளாகம், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறுபட்ட தொழில்துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது களஞ்சியப்படுத்தல், சேமிப்பு, மூலப்பொருள் கையாளுதல், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் மற்றும் பிராந்திய விநியோகம் போன்ற முழுமையான சேவைகளை வழங்குகின்றது. இதன் மூலம், பல்வேறு அளவிலான வணிக நிறுவனங்கள்,நம்பகமான மற்றும் செலவு குறைந்த விநியோகத்தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை புகையிரத நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு மிக அருகாமையில் இவ்வளாகம் மூலோபாய ரீதியாக அமையப்பெற்றுள்ளது. இதன் மூலம் வான், கடல் மற்றும் தரை வழி போக்குவரத்து வலையமைப்புகளுக்கு இடையிலான தடையற்ற இணைப்பை இது உறுதிப்படுத்துகின்றது. இந்த அமைவிடமானது, வட மாகாணத்தில் இயங்கும் அல்லது அங்கிருந்து சேவைகளை வழங்கும் வணிகங்களின் விநியோகச் சங்கிலி வினைத்திறனை (Supply chain efficiency) கணிசமாக அதிகரிப்பதுடன், விநியோக நேரத்தை குறைக்கவும் மற்றும் விநியோகச் செலவுகளைச் சேமிக்கவும் உதவுகின்றது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளுடனான வர்த்தகத் தொடர்புகளையும் இது மேலும் வலுப்படுத்துகின்றது.

இப்பிராந்தியத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டில் இவ்வளாகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது களஞ்சியசாலை செயற்பாடுகள், நிர்வாகம், போக்குவரத்து ஒருங்கிணைப்பு மற்றும் வளாக முகாமைத்துவம் ஆகிய துறைகளில் உள்ளூர் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றது. அதேவேளை, போக்குவரத்து வழங்குநர்கள், விநியோகஸ்தர்கள், பராமரிப்புச் சேவைகள் மற்றும் ஏனைய துணை விநியோகத்தீர்வுச் சேவைகள் மூலம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் இது தோற்றுவிக்கின்றது. மிக முக்கியமாக, நவீன களஞ்சியசாலை முகாமைத்துவ முறைமைகள் மற்றும் உலகளாவிய 3PL சிறந்த நடைமுறைகளுடனான பரிச்சயமானது, வட மாகாணத்தின் திறன் பரிமாற்றத்திற்கும், ஆற்றல் மேம்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும்.

David Pieris Group இன் நிலைபேறான நற்பண்புகளுக்கு (Sustainability ethos) இணங்க, இக்களஞ்சியசாலையானது வலுச்சக்தி வினைத்திறன் மிக்க மற்றும் சுற்றாடல் ரீதியாகப் பொறுப்புணர்வுடன் கூடிய செயல்பாட்டு முறைகளை உள்ளடக்கியுள்ளது. இது நிலைபேறான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய விநியோகத்தீர்வுகளை வழங்குவதில் David Pieris Logistics இன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இந்த வளாகம் ஆரம்பித்தல்  தொடர்பில் David Pieris Logistics இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கெலும் கட்டிபேஆரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திலுள்ள இவ்வளாகமானது இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு வினையூக்கியாக (Catalyst) அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அபிவிருத்தி நடவடிக்கையானது உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்துவதுடன், தேசிய சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் இலங்கையின் பரந்த விநியோகச் சங்கிலி கட்டமைப்பிற்குள் (Supply chain ecosystem) வட மாகாணத்தின் வகிபாகத்தை உறுதிப்படுத்தவும் உதவும்.” என்றார்.

David Pieris Logistics, இலங்கை முழுவதும் முழுமையான ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலித் தீர்வுகளை (End-to-end integrated supply chain solutions) வழங்கி வருகின்றது. இத்துறையில் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம்; களஞ்சியப்படுத்தல், 3PL மற்றும் 4PL சேவைகள், கொள்கலன் போக்குவரத்து, விநியோகம், சர்வதேச சரக்குக் கையாளுதல் (Freight forwarding) மற்றும் திட்ட விநியோகத்தீர்வு (Project logistics) ஆகியவற்றில் வலுவான தடயத்தைப் பதித்துள்ளது. 400-க்கும் மேற்பட்ட தொழில்முறை விநியோகத்தீர்வு நிபுணர்களின் ஒத்துழைப்புடன், மாறிவரும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட தீர்வுகளைப் பன்முகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகின்றது. இலங்கைக்கு அப்பால், துபாய், ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றிலும் விநியோகத்தீர்வு முயற்சிகளில் முதலீடு செய்துள்ள David Pieris Logistics, தனது சர்வதேச பிரசன்னத்தை மேலும் உறுதி செய்துள்ளது.

தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் பகிரப்பட்ட விநியோகத்தீர்வு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம், யாழ்ப்பாணத்திலுள்ள இவ்வளாகமானது சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பிராந்திய உற்பத்தியாளர்களுக்கான ஆரம்பத் தடைகளைக் குறைக்கின்றது. இது அவர்களை தேசிய மற்றும் பிராந்திய விநியோகச் சங்கிலிகளுடன் மிகவும் வினைத்திறனுடன் இணைய வழிவகுக்கின்றது. அத்துடன், மேல் மாகாணத்திற்கு அப்பால் சமநிலையான பிராந்திய வளர்ச்சி மற்றும் தனியார் துறையினரின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான தேசிய இலக்குகளுடன் இந்த அபிவிருத்தி நடவடிக்கை பொருந்துவதாக அமைந்துள்ளது.

இந்த மைல்கல் திட்டத்தின் அங்குரார்ப்பணமானது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி மற்றும் இலங்கையின் விநியோகத்தீர்வு மற்றும் வர்த்தக உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் David Pieris Logistics நிறுவனத்திற்குள்ள நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *