Ninewells Eye மையத்திற்கு சர்வதேச தரத்திலான ZEISS கண் மருத்துவ தொழில்நுட்பத் தீர்வுகளை கொண்டு வந்த DIMO Healthcare நிறுவனம்

Ninewells மருத்துவமனை, நவீன கண் பராமரிப்புச் சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ‘Ninewells Eye’ எனும் அதிநவீன கண் மருத்துவ சிகிச்சை மையத்தை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய மையத்தில், உலகப்புகழ் பெற்ற ZEISS வர்த்தகநாமத்தின் பல்வேறு புதிய கண் மருத்துவ தொழில்நுட்பத் தீர்வுகளை DIMO Healthcare நிறுவனம் நிறுவியுள்ளது. இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு, சர்வதேச தரத்திலான கண் பராமரிப்பு வசதிகளை கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் ZEISS நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயற்படும் DIMO Healthcare, இந்த முழுமையான கண் பராமரிப்பு மையத்திற்காக நோய்களைக் கண்டறியும் துல்லியம், அறுவை சிகிச்சைகளின் துல்லியம் மற்றும் சுகாதார சேவைத் திறனை மேம்படுத்த உதவும் முழுமையான தீர்வுகளை வழங்கியுள்ளது.

இங்கு நிறுவப்பட்டுள்ள உபகரணங்களில், கண் அறுவை சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ZEISS OPMI LUMERA 700 அறுவை சிகிச்சை நுணுக்குக்காட்டி, கண்புரை (Cataract) அறுவை சிகிச்சைகளைத் திட்டமிடப் பயன்படும் ZEISS IOLMaster 700, மிகவும் விரிவான கண் பரிசோதனைகளுக்காக பயன்படும் AngioPlex தொகுதி உடனான ZEISS CIRRUS 6000, குளோக்கோமா (Glaucoma) நோயாளிகளின் பார்வை குறைபாட்டை மதிப்பீடு செய்யப் பயன்படும் ZEISS Humphrey Field Analyzer 3 தொகுதி ஆகியவையும் உள்ளடங்கும். அத்துடன், குளோக்கோமா மற்றும் கண் நரம்பு சிகிச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடிய SLT வசதியுடன் கூடிய ZEISS VISULAS green yag combi மூலம் சிகிச்சைத் திறன்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் குறித்து Ninewells மருத்துவமனையின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் விபாஷ் விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில், ZEISS இன் சர்வதேச தரத்திலான கண் மருத்துவ தொழில்நுட்பத்தை, வலுவான உள்ளூர் நிபுணத்துவத்துடன் இணைத்து வழங்கும் திறன் காரணமாகவே DIMO Healthcare நிறுவனத்தை இத்திட்டத்திற்காக தெரிவு செய்ததாக குறிப்பிட்டார். பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், நிறுவல், பயிற்சி மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவற்றுக்கு மேலதிகமாக சுகாதாரத் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மற்றும் ZEISS உடனான நீண்டகாலப் பங்காளித்துவம் ஆகியவை DIMO Healthcare மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல தெரிவிக்கையில், Ninewells Eye மையத்திற்கு அதிநவீன கண் மருத்துவத் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவது, இலங்கைக்கு சர்வதேச தரத்திலான மருத்துவத் தீர்வுகளைக் கொண்டுவருவதில் DIMO கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றார். உபகரணங்களை வழங்குவதற்கு அப்பால், நம்பிக்கையான விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் உற்பத்தியாளர்களால் பயிற்சியளிக்கப்பட்ட சேவை வழங்கும் பொறியியலாளர்களின் நிபுணத்துவம் மூலம், நோயாளிகளுக்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கத் தேவையான சூழலை மருத்துவர்கள் உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சுகாதாரத் துறையில் 60 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள DIMO Healthcare, சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தையும் நம்பகமான உள்ளூர் சேவையையும் ஒன்றிணைப்பதன் மூலம், நாடு முழுவதும் சுகாதார சேவைத் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *