டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி (பிரைவட்) லிமிடெட், (DPMC) நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும், இலங்கையின் நம்பிக்கையை வென்ற முச்சக்கர வண்டி வர்த்தக நாமமான பஜாஜ், தனது பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக சிக்கனமான போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய நாட்டின் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல் பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான அக்கறைகள் போக்குவரத்துத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், குறைந்த இயக்கும் செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிக வாகனங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன் வினைத்திறன், நீடித்து உழைக்கும் தன்மை அல்லது நம்பகத்தன்மை ஆகியவற்றில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை.
பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டியை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 176 கிலோமீற்றர் வரை செல்லும் சான்றளிக்கப்பட்ட பயணத்தூரத்தை (Certified range) வழங்குகிறது. இது தற்போது சந்தையில் கிடைக்கும் மின்சார முச்சக்கர வாகனங்களில், மிக நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய வாகனமாக அமைந்துள்ளது. 9.2 kWh அதிக திறன் கொண்ட பற்றரியினால் இயங்கும் இந்த வாகனம், மணிக்கு 45 கி.மீ வேகத்தை எட்டக்கூடியது. இது நகரப்புற மற்றும் வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய தெரிவின் சிறப்பம்சங்களில் அதன் பயன்பாட்டு சௌகரியம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள on-board charger மூலம், பாவனையாளர்களுக்கு எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் வாகனத்தை சார்ஜ் செய்ய முடியும். இந்த வாகனம் முழுமையாக சார்ஜ் ஆவதற்கு சுமார் 4.5 மணிநேரங்கள் ஆகும். அத்துடன், 80% சார்ஜை மூன்று மணிநேரத்திற்குள் அடைந்துவிடலாம். இதன் பற்றரி அமைப்பு சவாலான சூழல்களையும் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, IP67-மதிப்பீடு பெற்ற நீர் எதிர்ப்புத் திறன் (water resistance) கொண்டிருப்பதால், அனைத்து வானிலை நிலைகளிலும் இது பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது.

மேலும், பஜாஜ் மின்சார முச்சக்கர வாகனம் தனது பிரிவிலேயே சிறந்த அம்சங்களை வழங்குகிறது. இதில் அனைத்தும் LED விளக்குகள், multiple drive modes, hill-hold assist, முழுமையான டிஜிட்டல் instrument cluster, நீடித்து உழைக்கக்கூடிய வலிமையான உலோக உடல் அமைப்பு மற்றும் நீண்ட நேர வணிக பயன்பாட்டிற்கு ஏற்ற வசதியான இருக்கை வசதி போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பல தசாப்த கால நம்பிக்கையைக் கொண்ட பஜாஜின் உறுதியான பொறியியல் நியமங்கள் மற்றும் DPMC இன் ஒப்பற்ற நாடளாவிய சேவை மற்றும் உதவி வலையமைப்பு சேவைகளினூடாக, பஜாஜ் மின் முச்சக்கர வண்டிகளால், வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனத் தெரிவுக்கு மாறுவதற்கான ஒப்பற்ற நம்பிக்கை வழங்கப்படுகிறது.

பஜாஜ் மின் முச்சக்கர வண்டிக்கு 011 4 700551 ஊடாக 24/7வீதியோர உதவிச் சேவை வழங்கப்படுவதால், பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டி பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற மனநிம்மதி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் டேவிட் பீரிஸ் E-Mobility ஹொட்லைன் இலக்கமான 011 470 0550 உடன் தொடர்பு கொண்டு பஜாஜ் மின் முச்சக்கர வண்டி பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். www.davidpierisemobility.lk/ ஐப் பார்வையிடவும்.