சொத்து உருவாக்கத்தில் நெறிமுறைமிக்க மற்றும் அனுபவம் சார்ந்த அணுகுமுறைக்கு பிரபலமான, உலகளாவிய ரியல் எஸ்டேட் மற்றும் வாழ்க்கைமுறை சொத்து நிர்மாணத் தளமான Fracspace, தனது சர்வதேச ரீதியிலான முதன்மையான செயற்றிட்டமான Altaira ஊடாக இலங்கையில் தனது மூலோபாய ரீதியிலான பிரவேசத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ‘Forbes India DGEMS 2024’ அமைப்பினால் உலகளாவிய ரீதியில் மிகவேகமாக வளர்ந்து வரும் முதல் 100 நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தனது சர்வதேச விரிவாக்கத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ரூ. 5 பில்லியன் (15 மில்லியன் அமெரிக்க டொலர்) முதலீட்டை இதில் முதலீடு செய்கிறது.
Altaira என்பது ஒரு வழக்கமான ரியல் எஸ்டேட் திட்டத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இது நவீன வாழ்வியல், வடிவமைப்பு, விருந்தோம்பல், இயற்கை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ‘இலக்கு சார்ந்த சொத்துகளை’ (Destination assets) உருவாக்குவதில் Fracspace கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. குறைந்த அடர்த்தி கொண்ட மற்றும் நிலத்திலிருந்தான உயரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மேம்பாட்டுத் திட்டம், வளர்ச்சியடைந்து வரும் உலகளாவிய முக்கிய இடங்களில் ஆடம்பரம், வாழ்க்கைமுறை, நீண்டகால மதிப்பு ஆகியவை எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதை முழுமையாக மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
Altaira ஆனது இலங்கையின் புளத்கொஹுபிட்டியவின் மூடுபனி சூழ்ந்த மலைக்குன்றுகளில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 அடி உயரத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டமானது 5 ஏக்கர் பரப்பளவிலான ஆடம்பர (hill resort) மலைவாசஸ்தல விடுதியாகும். 24 ஆடம்பர ரிட்ஜ் அறைகள் (ridge suites) மற்றும் 40 பிரத்தியேக முழுமையான பராமரிப்பு சேவை வழங்கப்படும் தனிப்பட்ட விலாக்களை கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் பள்ளத்தாக்கு காட்சிகளை சிறப்பாக வழங்குவதோடு, தனியுரிமைத் தன்மை, வெளியுல தோற்றம் மற்றும் இயற்கையின் தோற்றத்துடனான இணக்கத்தைப் பேணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் Fracspace இன் பிரவேசமானது ஒரு தற்செயலான நடவடிக்கை அல்ல. மாறாக இது ஒரு திட்டமிட்ட நகர்வாகும். இலங்கை எனும் தீவானது வெறுமனே சுற்றுலாத் தலமாக மட்டும் பார்க்கப்படாமல், உலகளாவிய மூலதனப் பங்களிப்பு மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒரு தகுதி வாய்ந்த இடமாக மாறிவரும் ஒரு திருப்புமுனையில் இருப்பதை இந்த விரிவாக்கம் பிரதிபலிக்கிறது. இலங்கையின் இயற்கையான அமைவிடம், காலநிலை, அதிகரித்து வரும் சர்வதேச முக்கியத்துவம் ஆகியன பொறுப்புணர்வு மற்றும் நிலையான பொருத்தப்பாட்டின் அடிப்படையில் புதிய வகையான ‘இட உருவாக்கத்திற்கு’ (place-making) தேவையான வாய்ப்புகளை வழங்குகின்றன.
Altaira என்பது ‘Above the Clouds’ (மேகங்களுக்கு மேலாக) எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே புவியியல் ரீதியிலான கருத்து மட்டுமல்ல, மாறாக புரிதல், தொலைநோக்குப் பார்வை, திட்டமிட்ட வளர்ச்சி ஆகியவற்றிற்கான ஒரு குறியீடாகவும் அமைகிறது. நெரிசலான உலகளாவிய ஆடம்பர சந்தைகளுக்கு ஒரு சிந்தனைமிக்க மாற்றாக இத்திட்டம் தன்னை நிலைநிறுத்துகிறது. இது அடர்த்தியை விட வெளிப்படைத்தன்மைக்கும், ஆடம்பரத்தை விட அனுபவத்திற்கும், குறுகிய கால இலாபத்தை விட நீண்டகால மதிப்பிற்கும் முன்னுரிமை அளிக்கிறது.
பாதிப்புகள் அற்ற மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடமாக வடிவமைக்கப்பட்டுள்ள Altaira, தேயிலை பள்ளத்தாக்கு நடைபயணங்கள், மழை காடுகளின் பாதைகள், முகில் கூட்டங்கள், நதிக்கரை (onsen) அனுபவங்கள், பள்ளத்தாக்கை நோக்கிய முடிவற்ற தடாகங்கள் (infinity pool) உள்ளிட்ட இயற்கையும் ஆரோக்கியமும் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. அத்துடன், இந்த இத்திட்டமானது விவசாய பண்ணையிலிருந்து உணவு மேசைக்கு (farm-to-table) உணவு வழங்கும் உணவகம், திறந்தவெளி உணவகம் பகுதிகள், பொழுதுபோக்கு வலயங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை அந்நிலப்பரப்புகளில் திணிக்கப்படாமல், அதனுடன் இயல்பாக இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து Fracspace நிறுவனத்தின் நிறுவுனர் Unnath Reddy தெரிவிக்கையில், “வேகத்துடனோ அல்லது அளவிடலுடனோ இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை. Altaira என்பது Fracspace இற்கான ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். இதில் நாம் பொறுமை, நோக்கம், வலுவான இடம் சார்ந்த பொறுப்புணர்வுடன் வளர்கிறோம். எமது இடம் சார்ந்த அபிவிருத்தி மூலோபாயத்துடன், இலங்கையின் புவியியல் அமைப்பு ஒத்துப்போவதை நாம் கவனித்தோம். Altaira என்பது விரைவாக விற்பனையாகும் ஒன்று என அல்லாமல், நிலைத்திருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
சந்தைப்படுத்தல் ரீதியிலான விடயங்களை விட, வெளிப்படைத்தன்மை, அளவிடப்பட்ட தொடர்பாடல் மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான Fracspace இன் எண்ணத்தை இந்த அறிவிப்பு எடுத்துக் காட்டுகிறது. இது நிறுவனத்தின் பாரிய அளவிலான பொதுமக்கள் அறிமுகம் மற்றும் எதிர்கால முதலீட்டாளர் ஈடுபாடுகளுக்கு முன்னோடியாக அமைகிறது. இந்தத் திட்டம் ஏற்கனவே காணி உரிமையைப் பாதுகாப்பதோடு, இடத்தின் யதார்த்த நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இது வெறுமனே ஒரு கருத்தியல் ரீதியிலான இலட்சியமாக அன்றி, செயற்பாட்டுத் திறன் கொண்ட ஒரு திட்டமாக Fracspace நிறுவனத்தின் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது.
Altaira வில் நிலைபேறான தன்மை என்பது, மேலோட்டமான அம்சமாக அன்றி, திட்டமிடல் மற்றும் அடர்த்தி தொடர்பான தீர்மானங்கள் மூலம் ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. இத்திட்டமானது குறைந்த அடர்த்தி கொண்ட கட்டுமானம், நிலப்பரப்புக்கு ஏற்ற வடிவமைப்பு, இயற்கையான காற்றோட்டம் மற்றும் நிலப்பரப்பு சார்ந்த சுழற்சி முறை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், தற்போதுள்ள சூழல் கட்டமைப்புகளுடன் கட்டட வடிவங்கள் இணைந்து வாழ வாய்ப்பை ஏற்படுத்துகிறது. குடியிருப்புகள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, உணவக சேவை கொண்ட ஸ்மார்ட் வீடுகளாக காணப்படுகின்றன. இவை நவீன வசதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் நீண்டகால செயல்பாட்டுத் திறனுடன் சமநிலைப்படுத்துகின்றன.
உலகளாவிய தரநிலைகளை உள்ளூர் சூழலுடன் சிந்தனைமிக்க முறையில் Altaira ஒருங்கிணைப்பதாக Fracspace Ceylon (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் தனுன திலகரத்ன தெரிவித்தார். இது குறித்து மேலும் குறிப்பிட்ட அவர், “கட்டடக்கலை அல்லது அனுபவத்தை வரையறுப்பதற்கு முன்பாக, நிலம், அதன் உயரம், சூழலின் தன்மை ஆகியவற்றை புரிந்துகொள்வதில் நாம் கவனம் செலுத்தினோம். Altaira அது அமைந்திருக்கும் சூழலை மதிக்கும் அதே வேளையில், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைமுறையை வழங்கும் இடமாக வளர்ந்து வருகிறது.” என்றார்.
Altaira இனை ஒரு சாதாரண பரிவர்த்தனை வாய்ப்பாக முன்வைப்பதற்குப் பதிலாக, இட உருவாக்கம், பாரம்பரியம், நீடித்து நிலைத்திருக்கும் தரம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கின்ற உலகளாவிய நுகர்வோர், விவேகமான முதலீட்டாளர்கள், நீண்டகால பங்காளர்களை ஈர்க்கும் ஒரு விரிவான தத்துவமாக Fracspace இதனை முன்வைக்கிறது.
ஒட்டுமொத்தமாக இந்த விடயங்கள் அனைத்தும் Altaira கட்டமைப்பை, சாதாரண கலப்பு பயன்பாட்டுடனான மேம்பாட்டுத் திட்டமாக அன்றி, மிக அவதானமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இடமாக நிலைநிறுத்துகின்றன. இங்கு விருந்தோம்பல், தனிப்பட்ட வாழ்க்கை, ஆரோக்கியம், இயற்கை ஆகியன ஒரே சீரான, நிலைபேறான சூழல் கட்மைப்பாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
Altaira மூலம், இலங்கையின் எதிர்காலத்தின் மீதான தனது நம்பிக்கையை Fracspace வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு உள்நாட்டு புத்தாக்க கண்டுபிடிப்பாளரிடமிருந்து உலகளாவிய ரீதியில் சிந்திக்கின்ற மற்றும் நெறிமுறையுடன் வளர்ச்சியடையும் ஒரு கட்டுமான திட்ட மேம்பாட்டாளர் எனும் தனது சொந்த வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.
Fracspace பற்றி
Fracspace ஆனது ரியல் எஸ்டேட், விருந்தோம்பல், பகுதியான உரிமை மாதிரிகளில் செயற்படும் ஒரு உலகளாவிய கட்டுமான திட்ட மேம்பாட்டு தளமாகும். அனுபவம், நீண்டகால மதிப்பு, பொறுப்பான திட்டம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கின்ற, இலக்கு சார்ந்த சொத்துகளை உருவாக்குவதில் இது கவனம் செலுத்தும் நிறுவனமாகும்.
மேலதிக விபரங்களுக்கு:
www.fracspace.com
www.altaira.lk
END