ஆடவர் ஆடைகளுக்கு ஆடம்பரம், பாரம்பரியம், புத்தாக்கத்தை மீள்வரையறை செய்யும் Emerald இன் ‘EVOLUXE’

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, ஆடம்பர மற்றும் ஸ்டைலின் சாராம்சத்தை மீள்மறுவரையறை செய்யும் ஒரு பிரம்மாண்டமான பேஷனை, அவர்களது சமீபத்திய AW23 (இலையுதிர்கால/குளிர்கால 2023) காட்சிப்படுத்தல் மூலம், “EVOLUXE” நிகழ்வை காட்சிப்படுத்தி, பேஷன் ஆர்வலர்களை மீண்டும் பிரம்மிக்க வைத்துள்ளது. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் கிராண்ட் போல்ரூமில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பேஷன் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் Emerald கொண்டுள்ள எல்லைகளைத் தாண்டிய அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

‘EVOLUXE’ எண்ணக்கருவானது, பரிணாமத்தையும், ஆடம்பரத்தையும் வசீகரிக்கின்ற இணைப்பாக அமைத்ததோடு, காலத்துடனான கண்ணோட்டம் பற்றிய கருத்து எவ்வாறு உருவாகியுள்ளது என்பதையும் காட்டுகிறது. இன்றைய உண்மையான ஆடம்பரமானது, களியாட்டத்தை மட்டுமல்லாது, நெறிமுறையை கருத்திலெடுத்தல், புத்தாக்கம் மற்றும் தனித்துவத்தையும் உள்ளடக்கியுள்ளது எனும் கருத்தை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. பாரம்பரிய கண்ணோட்டத்திலிருந்து சமகால அவசியம் வரை, நவீன உலகில் ஆடம்பரத்தின் மாறும் பயணத்தை ‘EVOLUXE’ கொண்டாடியது.

இந்த பேஷன் ஷோ குறித்து கருத்துத் தெரிவித்த Emerald நிறுவனத்தின் பிரதம வணிக அதிகாரி அஹ்மத் இக்ராம், “தையல் கலைச் சிறப்பின் அடையாளமான Emerald, ஆடம்பரத்தை மீள்வரையறை செய்கின்ற ‘EVOLUXE’ பேஷன் கொண்டாட்ட நிகழ்வை நடத்தியதில் பெருமை கொள்கிறது. எமது வடிவமைப்புக் குழுவினர் வெளிப்படுத்திய ஆர்வமும் படைப்பாற்றலும் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. பேஷனின் எல்லைகளைத் மேலும் விரிவாக நகர்த்திச் செல்வதற்கும், நேர்த்தியான மற்றும் நிலைபேறான தன்மைக்கான புதிய தரங்களை அமைப்பதற்குமான எமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டுகிறது. ‘EVOLUXE’ ஆனது ஆடம்பரத்தை மீள்வரையறை செய்வதற்கும், ஆடவர் ஆடைகளில் புத்தாக்கங்களை ஏற்படுத்துவதற்குமான எமது பயணத்தின் ஆரம்பமாகும். இந்த நிகழ்வை மகத்தான வெற்றியடையச் செய்தமைக்காக, எமது அர்ப்பணிப்பு மிக்க குழுவினர் முதல் மதிப்பிற்குரிய விருந்தினர்கள் மற்றும் பங்காளிகள் வரை அனைத்து பங்குதாரர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

இந்த பேஷன் ஷோ, 10 விறுவிறுப்பான பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் வாடிக்கையாளர்களின் பல்வேறு தெரிவுகளை பூர்த்தி செய்யும் வகையில் Emerald இனால் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ‘Fun in the Sun’ இன் கீழ் உள்ளடங்கும் ஆடைகள் விசேட இடத்தை பிடித்தது. இது இளைஞர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையிலான, மிடுக்கான வண்ணங்கள் மற்றும் ஒப்பிட முடியாத ஆறுதல் ஆகியவற்றின் கலவையாகும். 100% பருத்தியில் இருந்து வடிவமைக்கப்பட்ட இந்தத் ஆடைத் தொகுப்பில் ரீ-சேர்ட்கள் மற்றும் Polo ஆகியன இடம்பெற்றுள்ளன. இது சிறு வயது ஆண் பிள்ளைகள் வெளிப்புற சாகசங்களை ஸ்டைலாக செய்வதை உறுதி செய்கிறது. இந்த பேஷன் ஷோ ஆனது, ‘Tee-Style Sensation’ ஆடைகளையும் வெளியிட்டது. இது அணிவதற்கு ஆறுதலையும், நகர்ப்புற அதிநவீனத்தையும் இணைந்த கலவையை விரும்புவோருக்கான உயர் ரக தொகுப்பாகும். இந்த ஆடை வகைகளில் உள்ள Classic Polos, ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புகளையும் இயற்கையான நீளும் தன்மையையும் வழங்குவதோடு, குளிர்ச்சியான தோற்றத்திற்கும் உணர்விற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. ‘The Everday Tee’ ஆனது, அன்றாட நேர்த்திக்கான உங்களது இறுதித் தெரிவாக அமையும். ‘Authentic Denim’ ஆனது, இந்நிகழ்வின் மற்றுமொரு உயர்ந்த இடத்தை பிடித்திருந்தது. இது ஜப்பானிய டெனிம் துணிகளுடன் டெனிம் அனுபவத்தை மீள்வரையறை செய்தது. உண்மையான டெனிம் பாணியைப் பேணியவாறு, சிறப்பான பொருத்தம், அணிவதற்கு ஆறுதல், அணிந்து செல்ல இலகு ஆகிய அம்சங்களை அது வழங்குகிறது.

நிறுவனங்களுக்கு ஏற்ற வகையிலான, ‘Timeless Fil-a-Fils’ சேகரிப்புகள், இந்த நிகழ்வின் மையமாக அமைந்தது. இது 40 வண்ணங்களில் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்த சேர்ட்களின் வகைகளை காட்சிப்படுத்தியது. முதல் பார்வையில் அவை பாரம்பரியமான தோற்றத்தை வழங்கினாலும், இந்த சேர்ட்கள் பொதுவான தோற்றம் உடையவை அல்ல. பாரம்பரிய கொலர்கள் மற்றும் பட்டன்களின் தனித்துவமான வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட இவை, ஒவ்வொன்றும் வேறுபட்ட தன்மையை வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் காலத்தால் அழியாத வசீகரம் மற்றும் நவீன கவர்ச்சியுடன் உங்கள் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையிலான பாணியை மேம்படுத்துகின்றன. அழகிய பாணி மற்றும் வசதியைப் எதிர்பார்க்கும் இளம் ஆண்களுக்கு, ‘Emerald Junior – Shirts’ தொகுப்பிலிருந்து ‘Dapper Dudes’ வரை இளமையின் நுட்பமான பயணத்தை தொடர்ச்சியாக பின்பற்ற வழி வகுக்கிறது. நவீன போக்குகளை பாரம்பரிய ஸ்டைலுடன் தடையின்றி இணைப்பதன் மூலம், குடும்பக் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, பாடசாலை நிகழ்வாக இருந்தாலும் சரி, மிகச் சிறப்பாக இருப்பதை அவை உறுதி செய்கிறது.

துடிப்பாக உள்ள நபர்களுக்கு பயன்பாடு மற்றும் வசதி ஆகிய அம்சத்தை உள்ளடக்கிய ‘Utilitech – Functional Fashion’ சேகரிப்புகள் மூலம், பல்துறை பேஷனுக்கான Emerald இன் அர்ப்பணிப்பு விரிவடைந்துள்ளதை காண்பிக்கிறது. ‘Utilitech’ ஆடை வகைகளில், முன்னெப்போதும் இல்லாத வகையிலான செயற்பாட்டு ரீதியான நெகிழ்வுத்தன்மையை அனுபவிக்கலாம். நீர் வெறுப்புத் தன்மை கொண்ட, 4-திசையிலுமான நீட்சி கொண்ட மூலப்பொருளால் தயாரிக்கப்பட்டுள்ள இது, அணியும் போதான ஆறுதலையும் அணிவதற்கு இலகுவான தன்மையையும் உறுதி செய்கிறது. இது மூன்று வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதலாவது ‘Tech-chinos’, இவை tech-spin அம்சம் கொண்ட புத்தம் புதியதாக காட்சியளிக்கும் பல்வேறு வகையான காற்சட்டைகளாகும். இரண்டாவது ‘Active Jeans’, இவை உச்ச ஆறுதல் கொண்ட பாரம் குறைந்த இலகுரக ஜீன்ஸ்களாகும். இவை ஸ்டைலான அம்சத்துடன் மெலிதான தோற்றத்தை கொண்டுள்ளன. மூன்றாவது ‘Wind Walker’, நடைப் பயிற்சியின் போது அல்லது சுறுசுறுப்பான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதும் பல்வேறு வானிலை நிலைகளின் போதும் உங்களை வசதியாக உணர வைக்கும்.

அது மாத்திரமன்றி, சூழல் நட்பு மற்றும் ஒப்பிட முடியாத மென்யான தன்மைக்கு பெயர் பெற்ற ‘Stylized Bamboo’ வகைகள், தற்போது இலங்கைச் சந்தையில் ‘Emerald’ யிடமிருந்து கிடைக்கிறது. இத்தொகுப்பானது, அலுவலக ரீதியான சந்தர்ப்பங்கள் மற்றும் வணிக ரீதியான நிகழ்வுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. ஸ்டைலை வெளிப்படுத்தும் வகையில் ‘Emerald Active’ யிலிருந்து ‘Casual Communique’ வரையான தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை உயர்தர ஸ்மார்ட் கெஷுவல் உடைகளை chinos அல்லது denim உடன் இணைத்து, pop மற்றும் stand out அம்சங்களை வழங்குகின்றது.

‘Work-Pop’ தொகுப்பின் மூலம், ஆண்களுக்கான அலுவலக ரீதியான ஆடை வகைகளில் பிரிண்ட் அம்சத்தை Emerald முதன்முதலில் அறிமுகப்படுத்துகிறது. இது உறுதியான நூல்கள் மற்றும் dobby motifs மூலம் மாற்றத்தைச் சேர்த்து, அலுவலக தோற்றத்தில் நீங்கள் தனித்து தென்படுவதை உறுதிப்படுத்துகிறது. காலத்திற்கு ஏற்ற இந்த புதிய பிரிண்ட் வகைகள், உயர் வகை அம்சத்துடன் நுட்பமானதாக தயாரிக்கப்படுவதோடு, நீங்கள் வேலைத் தளத்தில் இருந்தாலும் சரி அல்லது வேலைக்குப் பின்னரான உற்சாகமான வேளையாக இருந்தாலும் சரி, உங்களை தனித்துவமாக காண்பிப்பதற்கான உத்தரவாதம் கொண்டவையாகும். இறுதியாக, ‘Morphing Forms’ ஆனது, கலைக்கான சுதந்திரத்தை பரந்த அளவிலான தனித்துவமான பிரிண்ட் மூலம் கொண்டாடுகிறது. இது தனிநபர்கள் தங்கள் தனித்துவத்தை தழுவியவாறு வேலைத்தளத்தில் கலைத்திறனுடன் தங்களை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.

‘EVOLUXE AW 23’ பேஷன் நிகழ்வானது, முதன்மையாக விற்பனை முகவர்களை கருத்தில் கொண்டு, எதிர்வரும் பருவகால கொண்டாட்டத்திற்கான ஆடை சேகரிப்புகளை வழங்கவும் கொண்டாட்டங்களுக்கான முன்பதிவு செய்வதற்குமான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது. பேஷன் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு, இந்நிகழ்விற்கான அழைப்பை Emerald விடுத்திருந்தது.

ஆண்களுக்கான புதிய பாணிகளை மீள் வரையறை செய்து, புத்தாக்கம், நிலைபேறான தன்மையுடன் பாரம்பரியத்தை இணைத்து, Emerald இலங்கையின் முன்னணி ஆடவருக்கான ஆடை வர்த்தகநாமமாக தனது இடத்தை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து வகை ஆடைகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்த வகையில் ‘EVOLUXE’ ஒரு மகத்தான வெற்றியை பதிவு செய்தது. அத்துடன், எப்போதும் மாறிவரும் பேஷன் உலகில் ஆடம்பரத்தின் அர்த்தத்தை உருவாக்குவதற்கும் அதனை மீள்வரையறை செய்வதற்கும் Emerald இன் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக அது விளங்கியது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *