தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்குவதற்காக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உடன் கூட்டுச் சேர்ந்த Quickee

Quickee இலங்கையில் உள்ள இணைய வர்த்தக கொள்வனவில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிப்பதற்குமான தனது முயற்சியின் அடிப்படையில், அண்மையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express) கடன் அட்டைகளை Quickee.com தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (Nations Trust Bank American Express) மற்றும் Quickee இடையேயான இந்த கூட்டாண்மையானது மேம்பட்ட வசதியை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மகத்தான பெறுமதியை சேர்க்கும்.

இலங்கையர்களின் விருப்பமான இணைய வர்த்தக சந்தையான Quickee.com, அதன் ஒருங்கிணைந்த விநியோக சேவையை பூர்த்தி செய்யவும், தனித்துவமான டிஜிட்டல் வர்த்தக தளத்தை உரிய முறையில் நடாத்திச் செல்லும் வகையிலும், தனது சொந்த விநியோக குழுவினரையும் சொந்த அழைப்பு மையத்தையும் கொண்ட அர்ப்பணிக்கப்பட்ட பௌதீக மையத்துடன் தனித்துவமாக செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் அதன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ‘Convenience Delivered’ (செளகரிகமாக கொண்டு சேர்க்கப்படும்) எனும் அதன் வாக்குறுதியுடன், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடனட்டையுடன் இணைந்து, புதிய சலுகைகளின் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வசதியை வழங்குவதற்கு உறுதி பூண்டுள்ளது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆனது, உயர் மட்ட வாடிக்கையாளர் சேவை வழங்கும் வங்கி அட்டைகள் துறையில் முன்னணியில் உள்ளதோடு, அதன் ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் வெகுமதிகள், நன்மைகள், அதன் வங்கி அட்டை வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை வழங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றது.

இந்த புதிய கூட்டாண்மை தொடர்பில் கருத்து வெளியிட்ட Quickee இன் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தியின் பொது முகாமையாளர் பந்துல டி சில்வா, “அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டை சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை எம்மால் மேலும் அதிகமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். ஒப்பற்ற மதிப்பு மற்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு அது வழங்கும் வசதி காரணமாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிரபலமாக விளங்குகின்றது. எமது புத்தாக்கமான சேவைகளுடன் இணைந்தவாறு வழங்கப்படுகின்ற, பரந்த அளவிலான தயாரிப்புகள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல சிறப்பம்சங்களை அனுபவிக்க உதவும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடனட்டைகளை எமது சேவைகளில் இணைப்பதன் மூலம், அதன் நன்மைகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். Quickee அதன் வாடிக்கையாளர் சேவை மையத்தின் உதவியுடன் உங்களுக்கு வசதியான சேவையை வழங்க எப்போதும் தயாராக உள்ளது. எமது சேவை மற்றும் நட்பு ரீதியான மும்மொழி வாடிக்கையாளர் உதவியை, வாரத்தின் 7 நாட்களும் காலை 9.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை பெறலாம். நீங்கள் எமது WhatsApp அழைப்பு அல்லது குறுஞ்செய்தி சேவை மூலமும் எம்மை தொடர்பு கொள்ளலாம். எமது முகவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்ற உதவுவார்கள்.

Quickee.com ஆனது, ‘Quickee Concierge’ மற்றும் Quickee SOS போன்ற பல புத்தாக்கமான சேவைகளையும் வழங்குகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Quickee Concierge’ சேவையானது, பணிபுரியும் பெற்றோர்களுக்கு மற்றும் பல்வேறு விடயங்களை சமாளிக்க வேண்டிய நபர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தீர்வாகும். Quickee Concierge ஆனது PPU (Personal Pick-Up) மற்றும் விநியோகத்துடன் ஒரு தனித்துவமான மெய்நிகரான மற்றும் நேரடியான ஷொப்பிங் உதவியாளர் ஆகியவற்றையும் வழங்குகிறது.  இங்கு, ஒரு Quickee சாரதி உங்கள் ஷொப்பிங் பட்டியலை பெற்று, உங்கள் சார்பில் பல்வேறு கடைகளுக்குச் சென்று, அவற்றை கொள்வனவு செய்வதுடன், அவற்றை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார். இந்த விரிவான சேவையானது, உங்களது மதிப்புமிக்க நேரத்தைச் சேமிக்கவும், அந்த நேரத்தை பிரயோசனமாக பயன்படுத்தவும், உங்களுக்கு உண்மையில் அவசியமான, முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. தற்போது இலங்கையில் இந்த ஒப்பற்ற சேவையை வழங்கும் மிகவும் பிரத்தியேகமான இணைய வர்த்தக சந்தையாக Quickee.com விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திடீரென ஒரு விருந்துக்கு திட்டமிட்டிருந்தாலோ அல்லது உங்கள் வீட்டுக்கு அவசரமாக மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டியிருந்தாலோ, Quickee யின் ‘Party SOS’ மற்றும் ‘Emergency SOS’ ஆகிய சேவைகள் மூலம் உங்களுக்கு அவசியமான சேவைகளை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில், பின்னிரவு வேளையிலும், நள்ளிரவின் பின்னரும் வழங்குவதனை அது உறுதி செய்கின்றது.

‘Quickee SOS’ ஆனது, உங்கள் வீட்டுத் தேவைக்கான கொள்வனவு தொடர்பான அவசர சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட மற்றொரு புதிய சேவையாகும். நள்ளிரவில் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் முதல் திடீர் விருந்து வரை, அதிகாலை 3.00 மணி வரை எந்தவொரு அவசர தேவையிலும் உங்களுக்கு சேவை செய்ய நாம் தயாராக உள்ளோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் Quickee Whatsapp இற்கு அழைப்பது அல்லது செய்தியை அனுப்புவது மாத்திரமே ஆகும்.

எமது நெகிழ்வான போக்குடைய கொண்டு சென்று சேர்க்கும் (Delivery) தெரிவுகளில் Rapid Express (30 நிமிடங்கள்), Express Delivery (30-90 நிமிடங்கள்), Normal Delivery (1-4 வேலை நாட்கள்) ஆகியன அடங்குகின்றன. நாம் ‘Late Night Dining’ இற்கான சேவையை வழங்குகிறோம். இதற்காக அதிகாலை 3.00 மணி வரை எமது விநியோக சேவை செயற்படுகிறது. கொண்டு வருபவரிடம் பணம் செலுத்துதல், கொண்டு வருபவரிடம் அட்டை மூலம் செலுத்துதல், வங்கி பணப்பரிமாற்றங்கள், ஒன்லைன் பரிமாற்றங்கள் மற்றும் QR கட்டண செலுத்தல்கள் உள்ளிட்ட பல விதமான கட்டண முறைகள் மற்றும் தெரிவுகளை Quickee கொண்டுள்ளது. எமது அதிவேக விநியோக சேவையானது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அச்சிடும் சேவைகளுடன், மருந்தக சேவை மற்றும் உதிரிப் பாக சேவைகள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Quickee.com ஆனது, Expolanka Holdings PLC நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாகும். இது சௌகரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் சில்லறை வர்த்தகம் மற்றும் விநியோக பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. Quickee.com ஆனது, பல வருடங்களாக, இலங்கையின் டிஜிட்டல் வர்த்தகத்தில் ஒரு புத்தாக்கமான மாபெரும் நிறுவனமாக மாற்றமடைந்து, ஒரு முன்னோடி சக்தியாக அதன் நிலையை உறுதிப்படுத்தி, குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. Quickee.com அதன் விரிவாக்கப்பட்ட திறன்களுடன், தற்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, தொழில்துறையில் ஒரு புத்தாக்கமான தலைவனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. SLIM Brand Excellence Awards 2022 விருதுகளில் Quickee, வருடத்தின் சிறந்த ஒன்லைன் வர்த்தகநாமத்திற்கான தங்க விருதை வென்றுள்ளது.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *