Hemas Consumer Brands வழங்கும் இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தனது நடமாடும் பல் கிளினிக்கை அண்மையில் ஆரம்பித்துள்ளது. இந்நடமாடும் பல் மருத்துவ கிளினிக்கானது சிறுவர்களுக்கு விழிப்புணர்வு அமர்வு, இலவச பல் சோதனை, பல் பரிசோதனை ஆகியவற்றை வழங்க ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ‘Clogard Mobile Dental Clinic’ பிரசாரமானது, இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் 11,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்களை சென்றடைந்துள்ளதன் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டு மாதங்களில், 6,500 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இலவச பல் சோதனை மற்றும் பரிசோதனை சேவைகளை பெற்றனர். க்ளோகார்ட் நடமாடும் பல் மருத்துவ கிளினிக்கின் மூன்றாவது மாதத்திற்கான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.
இந்த பிரசார திட்டமானது, உரிய வாய்ச் சுகாதார வசதிகள் குறைவாகவே காணப்படுகின்ற கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு சிறுவர்கள் பல் சிகிச்சை நிபுணரிடம் தங்கள் பற்களை பரிசோதித்துக் கொள்ளவும், அவசியம் ஏற்படும் நிலையில் அதனை சுத்தம் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சிறுவர்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் போது, அவர்களை பங்கேற்கச் செய்து வேடிக்கை மற்றும் விநோத கல்வி புதிர்கள் மற்றும் விளையாட்டுகளும் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் பல் பரிசோதனையின் முடிவில், சிறுவர்களுக்கு உற்சாகமூட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இது தவிர க்ளோகார்ட்டின் ஆளுருவ பொம்மையான, ‘சூட்டி லேனா’ அவர்களை மகிழ்விக்கவும், அவர்களை கிளினிக்கிற்குச் சென்று சோதனை செய்து கொள்ளவதற்கான ஊக்கத்தையம் வழங்கியது.
Hemas Consumer Brands நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் டெரிக் அன்டனி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “நடமாடும் பல் மருத்துவ கிளினிக்கிற்கு புத்துயிரளித்து, இந்த பிரசாரத்தை மீண்டும் ஆரம்பித்தமை தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். தற்போதுவரை, இப்பிரசாரமானது பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த கிளினிக் ஏற்கனவே ஏராளமான சிறுவர்களை சென்றடைந்துள்ளதோடு, இப்பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மேலும் அதிகமானோரை சென்றடைய எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
க்ளோகார்ட் இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமாகும். இலங்கையை பற்குழிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடமாடும் பல் கிளினிக் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அது எதிர்பார்க்கிறது.
END