இப்பண்டிகை பிரசாரம் பெப்சியின் SWAG தத்துவத்தை வலியுறுத்துவதோடு விடுமுறையை கொண்டாடுகிறது
கிறிஸ்மஸ் பண்டிகையின் விசேட பிரசாரத்துடன் பண்டிகைக் கொண்டாட்டத்தில் ரீங்காரம் செய்யம் Pepsi®, அதன் புதிய பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளது. Pepsi® அனைத்து பருவங்களிலும், குறிப்பாக கொண்டாட்டங்களிலும் பொதுவான ஒரு பானமாக இருக்கிறது என்பதை, கிறிஸ்மஸின் மகிழ்ச்சியான நேரத்தை மிகச்சரியாக எடுத்துக் காட்டும் வகையில் இது அமைந்துள்ளது. கிறிஸ்மஸின் உயர்ந்த சின்னமான நத்தார் தாத்தா மற்றும் மற்றும் அதன் வர்த்தகநாம உயர் மதிப்பைக் கொண்ட SWAG உடன் இணைந்து, பண்டிகையை உள்வாங்கி ஈர்க்கப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட வகையிலான PET போத்தல் தயாரிப்புகளையும் Pepsi® அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கலகலப்பான Pepsi® பிரசார வீடியோவானது, அனைவருக்கும் பிடித்த நத்தார் தாத்தா, Pepsi® Cool உடையில், விமான நிலையத்திற்கு நுழைவதில் இருந்து ஆரம்பிக்கிறது. அங்கு விமான நிலைய ஊழியர்கள் நத்தார் தாத்தாவின் உன்னதமான வட துருவத்திலுள்ள, வழக்கத்திற்கு மாற்றமான இல்லத்தை பற்றி அறிந்து திகைத்து நிற்கிறார்கள். இந்த ஆச்சரியமான முகங்களைக் கவனித்த நத்தார் தாத்தா, தனது வசீகரத்தையும் மந்திரத்தையும் பயன்படுத்தி, Pepsi® போத்தலுக்கு ஊடாக, அனைவரையும் மயக்கும் அதிசய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். நத்தார் தாத்தா மட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்பு கிறிஸ்மஸ் பொதியிலிருந்து Pepsi® போத்தலை பருகுவதைத் தொடர்ந்து, ஒவ்வொருவரும் தங்களுக்குத் தானே முந்திக் கொண்டு ஒரு போத்தலைப் பெறுவதற்கு ஓடி வருவதை அடுத்து இந்த வீடியோ நிறைவுக்கு வருகிறது.
இந்த வீடியோ பிரசாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட PepsiCo இலங்கை பிராந்தியத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அனூஜ் கோயல், “வருட இறுதியிலுள்ள பண்டிகை காலம் என்பது, நுகர்வோர் தங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒன்றாக இருக்கும் தருணங்களைக் கொண்டாடும் ஒரு நேரமாகும். பெப்சி ஆனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், அனைத்து பருவங்களிலும், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் எமது நுகர்வோருக்கு மிகவும் முக்கியமான ஒரு பானமாகும் என்பதை இந்த பிரசார திட்டத்தின் மூலம் நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். எமது உற்சாகமான பண்டிகை பிரசார வீடியோவானது, பாரம்பரிய நத்தார் தாத்தாவுக்கு SWAG இனை இணைப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதன் மூலம் விடுமுறையின் மகிழ்ச்சியை பரப்புகிறது.” என்றார்.
புதிய Pepsi® வீடியோ விளம்பரமானது, தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்கள், வெளி நிகழ்வுகள், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படவுள்ளது. இந்த புதிய போத்தலானது, இலங்கையில் உள்ள அனைத்து பாரம்பரிய மற்றும் நவீன சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட இணைய வர்த்தகத் தளங்களில் தனியாகவோ, ஒன்றிணைந்த பொதிகளாகவோ கிடைக்கும்.
ஆக்கபூர்வமான முகவர் நிறுவனமான LOOPS ஒருங்கிணைக்கப்பட்டது
வீடியோ இணைப்பு : https://youtu.be/CBiWP79HAto
END