இலங்கை மற்றும் மாலைதீவின் சர்வதேச றோட்டரி மாவட்டம் 3220 இல் உள்ள உறுப்பினர்கள், Fems Aya திட்டத்தை மிக அடிப்படை மட்ட சமூகங்களுக்கு மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையில் மாதவிடாய் வறுமையை ஒழிக்க உதவும் முகமாக, Hemas நிறுவனத்தின் முதன்மையான பெண்கள் சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான Fems உடன் கைகோர்த்துள்ளனர்.
இந்த ஒன்றிணைவு செயன்முறையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் வகையில், சர்வதேச றோட்டரி மாவட்டம் 3220 (RID 3220) மற்றும் Fems இடையே, Hemas நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது. 2021 மார்ச் முதல், Fems இலங்கையில் மாதவிடாய் வறுமையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன், Fems Aya இத்திட்டத்தின் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
2021 மார்ச் இல் ஆரம்பிக்கப்பட்ட Fems Aya திட்டமானது, நாட்டில் இவ்வகையான விடயத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தேசிய முயற்சியாகும். ஒரு நோக்கத்தை முன்னிலைப்படுத்திய இந்த முன்முயற்சியானது, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய கலந்துரையாடலை மக்களிடையே இயல்பாக்கவும், இது தொடர்பில் ஆண், பெண் இரு பாலினருக்கும் விழிப்பூட்டவும், பெண்களுக்குத் தேவையான நம்பிக்கையை அளிக்கவும் உதவியது. ARKA Initiative, Dilmah’s Merrill J. Fernando Charitable Foundation, Sarvodaya Women’s Movement, Sarvodaya-Fusion உள்ளிட்ட ஒரே எண்ணம் கொண்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஆதரவின் மூலம் வலுவூட்டப்பட்ட Fems ஆனது, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 15,000 இற்கும் மேற்பட்ட பெண்களுக்கு, சிறந்த மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான அதிகாரம் அளித்து அவர்களை ஊக்குவித்துள்ளது.
ENDS