வெல்வெட் பொடி லோஷன்கள் – மென்மையான மற்றும் மகிழ்வூட்டும் சருமத்திற்கு!!

ஈரப்பதனுடன், மென்மையாக வைத்திருக்கும் ஒரு லோஷன் உங்கள் சருமத்தை மகிழ்வடையச் செய்கிறது. உங்கள் சருமமானது, உங்களை வெளிப்படுத்தும் முதலாவது எடுத்துக் காட்டாக விளங்குகிறது! இது உங்களைப் பற்றிய ஒரு தோற்றத்தை ஏனையவர்களுக்கு தெளிவாக காண்பிக்கிறது. வரண்ட மற்றும் பொலிவிழந்த சருமம், உண்மையில் ஒருவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற அதேசமயத்தில், மென்மையான மற்றும் ஈரப்பதனுடனான சருமம் எப்போதும் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. தினசரி ஈரப்பதமூட்டும் சருமப் பராமரிப்பு தீர்வானது, மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பேணுவதற்கு மிக முக்கியமானதாகும். இது உங்கள் நாளை சிறந்த உணர்வுடன் ஆரம்பிப்பதோடு, அதனை நாள் முழுவதும் நீடிக்கவும் உதவுகிறது.

Velvet Body Lotion (வெல்வெட் பொடி லோஷன்) இயற்கையான மூலப்பொருட்கள் மூலம் சிறந்த சருமப் பராமரிப்பு நன்மைகளை வழங்குகிறது. சருமத்திலிருந்து ஈரப்பதன் வெளியேற்றம் மற்றும் சரும வரட்சி ஆகியவற்றை நீக்கத் தேவையான ஈரப்பதனை வெல்வெட் பொடி லோஷன் உறுதி செய்கிறது. ஒவ்வொரு பொடி லோஷன் வகையும் ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளதோடு, இது நீண்ட நேரத்திற்கு நீடித்து நிலைக்கும். இது மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, உச்ச சருமப் பராமரிப்பு நன்மைகளை வழங்கும் நோக்கில் விஞ்ஞான ரீதியாகவும் இயற்கையான கலவையுடனும் கவனமாக தெரிவு செய்யப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்பட்ட இயற்கையான மூலப்பொருட்கள் இவற்றினுள் உட்செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூன்று வகைகளும், மேம்பட்ட சருமப் பராமரிப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சருமத்திற்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. குங்குமப்பூ மற்றும் மரமஞ்சள் சாறு உட்செலுத்தப்பட்ட Velvet Glow Perfect  வகையானது, சருமத்திற்கு தங்க நிறத்தை சேர்ப்பதோடு, பளிச்சென தெரியும் பளபளப்பான சருமத்தையும் வழங்குகிறது. Velvet Glow Perfect ஆனது, புற ஊதா கதிர் (UV) பாதுகாப்பையும், 360 பாகை ஒளிரும் தொழில்நுட்பம் மற்றும் BB கிரீம் விளைவையும் வழங்குகிறது. Velvet All Day Fresh வகையானது செர்ரி (Sakura) மலர்ச்சாறு மற்றும் உடனடி குளிர்விக்கும் புத்துணர்ச்சியைக் கொண்டுவரும் ஒளிரூட்டும் விற்றமின்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த தயாரிப்பிலுள்ள மேலதிக நன்மை யாதெனில், ஒளிரூட்டும் விற்றமின்கள் மற்றும் மிக மெல்லிய கலவை (ultra-light formula) ஆகியன இதில் அடங்குகின்றமையாகும். ஆனைக்கொய்யா, ஒலிவ், விற்றமின் E மணிகள் கொண்ட Velvet Intense Nourish வகையானது, உலர்ந்த சருமத்திற்கு ஆழமான ஈரப்பதனையும், போஷணையையும் வழங்குகிறது.

Velvet ஆனது, பல வருட நம்பிக்கை மற்றும் சிறந்து விளங்கும் ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் கொண்டுள்ள ஒரு வர்த்தகநாமமாகும். பல வருடங்களாக இந்த வர்த்தகநாமம் இலங்கைப் பெண்களுக்கு தனிப்பட்ட தூய்மையாக்கம் மற்றும் சருமப் பராமரிப்புத் தயாரிப்புகள் போன்ற சிறந்த தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளை வழங்கி வந்துள்ளது. அதன் மிகவும் நம்பகமான சருமப் பராமரிப்பு வகைகளில் வெல்வெட் பொடி லோஷன் தயாரிப்பு உள்ளது. இது ஒவ்வொரு பெண்ணும் விரும்பும், மென்மையான சருமத்தை வழங்குவதில் புகழ்பெற்று விளங்குவதோடு, hydrosoft தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதன் மூலம், ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மென்மையான மற்றும் மகிழ்வூட்டும் சருமத்தை உறுதி செய்கிறது!

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *