‘Powerfully You’: பெண்களுக்கு அதிகாரமளிப்பதை மேலும் வலுப்படுத்த DIMO அறிமுகப்படுத்தும் திட்டம்

இலங்கையில் முன்னணியிலுள்ள பன்முகத்துறை நிறுவனமான DIMO, பெண்களை வலுவூட்டுவது தொடர்பான தனது கவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு புத்தாக்கமான முயற்சியான ‘Powerful You’ (சக்திவாய்ந்த நீங்கள்) என்பதை அண்மையில் அறிமுகப்படுத்தியது. DIMO நிறுவனத்தில் கனிஷ்ட மற்றும் நடுத்தர நிர்வாக மட்டத்தில் உள்ள பெண்களை இலக்காகக் கொண்டு, பெண்களின் தலைமைத்துவ மேம்பாட்டில் இந்த திட்டம் கவனம் செலுத்துகின்றது. விருது பெற்ற நிலைமாற்ற பயிற்சியாளரான (Transformation Coach) திருமதி செனலா ஜயசூர்யவுடன் இணைந்து இந்த முயற்சி செயற்படுத்தப்பட்டுள்ளது.

DIMO நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளரும் குழுமத்தின் பிரதம மனிதவள அதிகாரியுமான திருமதி தில்ருக்ஷி குருகுலசூரிய இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இது பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், பாதுகாப்பின்மையை போக்குவதனை கற்றுக்கொள்ளவும், நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் சந்தை சவால்களை உறுதியுடனும், சுறுசுறுப்பாகவும் எதிர்கொள்வதற்கு உதவுகின்ற, அனைவரினதும் பங்குபற்றலுடன் கூடிய மற்றும் சிந்தனையைத் தூண்டுகின்ற திட்டமாகும். DIMO நிறுவனத்தின் ஊழியர்களான பெண்களின் உண்மையான திறனை உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையையும் இலக்குகளையும் பேணியவாறு, எமது ஊழியர்களுக்கான மதிப்பு முன்மொழிவை பேணியவாறு, நிறுவன பணிகளை சுவாரஸ்யமாகவும் பலன் கொண்டதாகவும் மேற்கொள்கின்றனர்.” என்றார்.

2025 ஆம் ஆண்டளவில், முடிவெடுக்கும் பாத்திரங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 10% இலிருந்து 40% ஆக உயர்த்துவதற்கான நிறுவனத்தின் விருப்பத்தை ஆதரிக்கும் வகையில் ‘Powerfully You’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் சவாலான நிலையை எதிர்கொள்ளத் தயாராக உள்ள பெண் ஊழியர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தெளிவின்மையான சவாலுக்கு முன்னால் நெகிழ்ச்சியாகவும், வேலை வாழ்க்கை சமநிலையின் செயற்பாட்டை திறனாக வழிநடத்தும் திறனை இது கொண்டுள்ளது. மிக முக்கியமாக, அவர்களின் தொழில்முறை முன்னேற்றத்திற்கான, அர்ப்பணிப்புடன் கூடிய பெண் பணியாளர்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், அவர்களின் முழு திறனை அடையவும் வழிவகுக்கும்.

2022 ஒக்டோபர் முதல் 2023 மார்ச் வரையிலான 6 மாத காலத்திற்கு இத்திட்டம் நடத்தப்படவுள்ளது. மேம்பாட்டு பட்டறைகள் மற்றும் சுயபரிசோதனை அமர்வுகளை உள்ளடக்கிய நவீன தலைமைத்துவத்திற்கு அதிகாரமளிக்கும் கட்டமைப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிலரங்குகளுடன் இணைந்தவாறு ஒரு வழிகாட்டல் திட்டமும் நடத்தப்படவுள்ளதோடு, இது ஒரு பிரதிபலிப்பு திட்டமாகவும் செயல்படும். இதில் கலந்துரையாடப்படும் விடயங்களின் நடைமுறை பயன்பாட்டை பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்ள முடியும். தொழில்முறை ரீதியாக வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்த சிரேஷ்ட ஊழியர்களிடமிருந்து, பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்ளவும், அவர்களை பின்பற்றி முன்னேறவும் இத்திட்டம் ஒரு வாய்ப்பை வழங்கும்.

DIMO நிறுவனத்தின் முற்போக்கான தன்மையையும் நிறுவனத்திற்குள் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் அதன் இலட்சியத்துடனும் ஒத்துப் போகின்ற திட்டமாக, ‘Powerfully You’ திட்டம் அமைகின்றது. DIMO பழங்குடியினராக கருதப்படும் அதன் ஊழியர்களில், அதன் பெண் ஊழியர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்கான DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இத்திட்டம் அடையாளப்படுத்துகிறது.

Image Caption:

‘Powerfully You’ திட்ட அங்குரார்ப்பாண விழாவில், DIMO நிறுவனத்தின் முகாமைத்துவ பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள்…

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *