சிங்கர் ஸ்ரீலங்கா, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களின் உள்ளூர் உற்பத்தியை முன்னெடுத்து உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் முயற்சிகளை தொடர்கிறது

சிங்கர் (ஸ்ரீலங்கா) தனது பரந்த அளவிலான நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களுக்கு அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாக நன்கு அறியப்பட்டதாகும். அவற்றில் சில 100% சிங்கரின் சொந்த உற்பத்தி தொழிற்சாலைகளில் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. சிங்கரின் உள்ளூர் உற்பத்தியானது, தற்போதுள்ள சந்தை இடைவெளிகளைப் பூர்த்தி செய்வதற்கும், நியாயமான விலையில் உயர்தர தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் வெளியிடுவதற்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். 6 தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கர் தையல் இயந்திரங்களில் இருந்து தொடங்கி, சிங்கர் அதன் உள்ளூர் உற்பத்தியை வலுப்படுத்தியுள்ளதுடன், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களின் அறிமுகம் அதன் உள்ளூர் உற்பத்தி அடிச்சுவட்டை மேலும் ஆணித்தரமாக்கியுள்ளது.

ரெக்னிஸ் லங்கா (Regnis Lanka) உயர்தர சிங்கர்/சிசில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாகும். 1988 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட, ரெக்னிஸ் உற்பத்தி தொழிற்சாலையானது ஆரம்பத்திலிருந்தே சமீபத்திய தொழில்நுட்பத்திற்கு இணையாக திகழ்ந்து வந்துள்ளதுடன், பல்வேறு கட்டங்களில் சந்தையில் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திர தயாரிப்பு வடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உற்பத்தி தொழிற்சாலையானது ஒட்டுமொத்த உற்பத்தி செயல்முறையிலும் உயர் தரத்தை தொடர்ந்து பேணி வருவதுடன், தற்போதைய நுகர்வோர் போக்குகளுக்குத் தொடர்ந்து புத்தாக்கங்களை உருவாக்க உயர் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடைமுறை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

சிங்கர் எப்போதும் குளிர்சாதனப் பெட்டி தயாரிப்பில் உயர் தரத்தை முன்னிறுத்தி வருகிறது. சமீபத்திய தொழில்நுட்பத்தின் பயன்பாடு, உயர்தர மூலப்பொருட்கள் மற்றும் 100% சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துதல் ஆகியவை குளிர்சாதனப் பெட்டி உற்பத்தி செயல்முறையின் முக்கிய பண்புகளாகும். குளிர்பதனப் பொருட்கள் தொடர்பான CFC இரசாயனம் பற்றி அதிக விவாதங்கள் இடம்பெற்ற நேரத்தில், தென்னாசியாவிற்கு CFC அற்ற குளிர்பதனப் பொருட்களை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக சிங்கர் மாறியதுடன், இது இலங்கைக்கு ஒரு சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் உள்ளூர் உற்பத்தி செயல்முறையை வலுப்படுத்தும் வகையில், சிங்கர் இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான குளிர்சாதனப்பெட்டிகளை அதன் மூன்று வகையான முறையே, பனிப்பொழிவு இல்லாத (frost-free), நேரடி குளிரூட்டல் (direct cool) மற்றும் இன்வேர்ட்டர் (inverter) ஆகிய வகைகளில் தயாரித்துள்ளது. குளிர்சாதனப் பெட்டிப் பிரிவைப் போலவே, சிங்கர் சலவை இயந்திரங்களும் உள்ளூரில் வீடுகளில் நன்கு அறியப்பட்ட நாமமாக காட்சியளிக்கின்றது. அவை அரை தன்னியக்கம் (semi auto) மற்றும் முழு தன்னியக்கம் (fully auto) போன்ற பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. கடந்த தசாப்தத்தில் சிங்கர் 0.6 மில்லியன் சலவை இயந்திரங்களை தயாரித்துள்ளது. ரெக்னிஸ் உற்பத்தி தொழிற்சாலை, இலங்கையின் மொத்த குளிர்சாதனப் பெட்டித் தேவையில் 45% மற்றும் மொத்த சலவை இயந்திரத் தேவையில் 33% ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வருகிறது.

ரெக்னிஸ் லங்கா நிறுவனத்தின் தொழிற்சாலைப் பணிப்பாளரான திரு. கெலும் கொஸ்பெலவத்த அவர்கள் தமது உள்ளூர் உற்பத்திப் பலம் குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது உள்ளூர்ப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி செலுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திக்கு ஆற்றல் உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். உள்ளூர் உற்பத்தி செயல்முறையை மேலும் ஊக்குவிப்போம். அதன் மூலமாக, சிறு வணிகங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எங்களுடன் சேர்ந்து வளர்ச்சி பெற உதவுவோம். உள்ளூர் உற்பத்தி விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான பயிற்சி வசதிகள் மற்றும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

சிங்கர் உள்ளூர் உற்பத்தியில் மிகவும் சிறந்து விளங்கினாலும், இது ஒரு நிறுவனத்தால் மட்டும் கையாள முடியாத வகையில் ஒரு சிக்கலான செயல்முறையாகும். இது பல்வேறு வட்டாரங்களில் இருந்து வழங்கல் சங்கிலிகள், மூலப்பொருள் வழங்குநர்கள், தொழிற்சாலை செயல்பாடுகளுக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள், விநியோகம் மற்றும் பொதியிடல் செயல்முறைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. உள்ளூர் உற்பத்தியானது சிங்கருக்கு உற்பத்தி செயல்முறையை விரைவுபடுத்தவும் புதிய தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் உதவியுள்ளது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்கள் தங்கள் சொந்த தொழில்களை நிறுவுவதற்கான வாய்ப்புகள் பலவற்றுக்கும் வழிகோலியுள்ளது. குளிர்சாதன பெட்டி மற்றும் சலவை இயந்திரம் தயாரிக்கும் வணிகம் மட்டும் 400 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன் மற்றும் ஒட்டுமொத்தமாக சுமார் 1000 குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ளன.

சிங்கர், வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு உள்ளூர் உற்பத்தியின் திறனைக் கண்டறிந்துள்ளதுடன், சிறு வணிக உரிமையாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சியளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பயிற்சி வசதிகள் வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கும் நம்பகமான வருமானத்தை உருவாக்கும் வாய்ப்பைப் பெறுவதற்கும் வலுவான அத்திவாரத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது. சிங்கர் அணி உள்ளூர் வணிக உரிமையாளர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் அளித்து, மேலும் பலரைச் சொந்தமாகத் தொழில்களை முன்னெடுக்க ஊக்குவிக்கிறது. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, பலரும் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நேரத்தில் இந்த சமிக்ஞையை ஒட்டுமொத்த சிங்கர் அணியும் வெகுவாகப் பாராட்டியுள்ளது. வேலை வாய்ப்புகளை வழங்குவதைத் தவிர, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் மிகவும் திறமையான தொழிற்படையை உருவாக்க சிங்கர் நிறுவனத்தால் முடிந்துள்ளது.

மறுபுறம், சிங்கர் அதன் புத்தாக்கத்தின் வழிநடாத்தலுடனான அணுகுமுறையால் ஆதரிக்கப்படும் உள்ளூர் பெறுமதி அதிகரிப்பு செயல்முறையில் ஆர்வமாக உள்ளது. இது உயர்தர முடிவுத் தயாரிப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. உள்ளூர் உற்பத்தியின் வாடிக்கையாளர் நன்மைகளைப் பொறுத்தவரை, உற்பத்தியில் செலவுகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி, நியாயமான விலையில் உள்ளூர் சந்தையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த சிங்கருக்கு உதவுகிறது. வாடிக்கையாளர் திருப்தி, வாடிக்கையாளர் நன்மைகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவுகளை கட்டியெழுப்புதல் ஆகியவை ஆரம்ப காலத்திலிருந்தே சிங்கர் நிறுவனத்தின் முதன்மை இலக்குகளாகத் திகழ்ந்து வருகின்றன. சிங்கர் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குவதுடன், உள்ளூர் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உயர்தர தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது.

முற்றும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *