Kalmar உடன் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு கொள்கலன் முனைய செயற்பாடுகளை மேம்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO நிறுவனமானது, துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு கொள்கலன் முனைய இயந்திரமயமாக்கல் மற்றும் வலுசக்தி-திறனுள்ள கொள்கலன் கையாளுகை தீர்வுகள் ஆகியவற்றில் உலகளாவிய தொழில்துறை முன்னோடியான Kalmar நிறுவனத்துடன் இணைந்து, உள்ளூர் கொள்கலன் முனைய நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றவும் மேம்படுத்தவும் தயாராகியுள்ளது. இந்த கூட்டாண்மையானது, தாங்கள் சேவையாற்றும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தொடர்ச்சியாக ஊக்குவிப்பதற்கான DIMO நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும், நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

2018 ஆம் ஆண்டு முதல் Kalmar நிறுவனத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட முகவராக உள்ள DIMO, தனது பெறுமதி சேர் சேவைகள் மற்றும் இணையற்ற விற்பனைக்குப் பின்னரான ஆதரவுகள் ஆகியவற்றுடன், Kalmar இன் பரந்துபட்ட தயாரிப்பு வகைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் கொள்கலன் செயற்பாடுகளுக்கு DIMO தனது ஆதரவை வழங்கி வருகிறது. Kalmar நிறுவனம், துறைமுகங்கள், முனையங்கள், விநியோக மையங்கள் மற்றும் கனரக தொழில்துறைகளுக்கான சரக்கு கையாளுகை தொடர்பான தீர்வுகளை வழங்குகிறது. உலகிலுள்ள நான்கு கொள்கலன்களில் ஒன்றின் கையாளுகை, Kalmar Solution நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. அதன் விரிவான தயாரிப்பு வகைகள், பரந்த உலகளாவிய வலையமைப்பு மற்றும் வெவ்வேறு முனைய செயன்முறைகளின் ஒருங்கிணைப்பை செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் மூலம், Kalmar அதன் ஒவ்வொரு கொள்கலன் நடவடிக்கையிலும் அது தொடர்பான செயற்றிறனை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

DIMO குழுமத்தின் பொருள் கையாளுகை வணிகத்தை மேற்பார்வை செய்யும் DIMO நிறைவேற்றுப் பணிப்பாளர் சமிந்த ரணவன இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “Kalmar உடன் நாம் ஏற்படுத்திய கூட்டாண்மையானது, துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு கொள்கலன் முனைய நடவடிக்கைகளை அதிவேகமாக மேம்படுத்துவதற்கு உத்தரவாதமளிக்கிறது. வர்த்தக நடவடிக்கைகளின் அளவுகள் அதிகரித்து, சூழல் தொடர்பான கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதால், துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு கொள்கலன் முனைய சேவை வழங்குனர்கள் தங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், தங்களது செயற்றிறன் மற்றும் நிலைபேறான தன்மையை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காகவும், முனைய சேவை வழங்குனர்கள் தங்களது செயல்பாடுகளை தன்னியக்கப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன், Kalmar உடனான எமது கூட்டாண்மையானது, இச்செயன்முறைக்கு பெரிதும் உதவியாக அமைகின்றது.” என்றார்.

DIMO அண்மையில் இரண்டு Kalmar இயந்திரங்களை, Logistics International Limited (LIL) மற்றும் South Asia Gateway Terminals (PVT) Ltd (SAGT) ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியது.

DIMO ஆனது, சமீபத்திய Kalmar Double Container Handler DCG100-45 ED65 இயந்திரத்தை LIL இற்கு கையளித்திருந்தது. இந்த இயந்திரம் அதிக செயற்றிறன் கொண்ட எஞ்சின் மற்றும் பரிமாற்றத்தை கொண்டுள்ளது. அத்துடன். இரண்டு வெற்று கொள்கலன்களின் எடையை ஒரே நேரத்தில் தூக்கும் திறனையும் இது கொண்டுள்ளது. இந்த அம்சமானது, நேரத்தை மீதப்படுத்துவதுடன், கொள்கலன் டிப்போவின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. இது செயற்பாட்டு செலவுகளை சேமிக்க உதவுகிறது. இது ஒற்றை அல்லது இரட்டை வெற்றுக் கொள்கலன்களின் 10 தொன் எடையை தூக்கும் திறனைக் கொண்டுள்ளதுடன், மீளமைக்கக்கூடிய (resettable) கொள்கலன் கவுண்டரை கொண்டுள்ளது, அதே நேரத்தில் 600mm உயரத்தில் ஏற்றப்பட்ட கெப் வண்டியையும் கொண்டுள்ளது.

Kalmar Double Container Handler இலுள்ள இரு பக்க அணுகலைக் கொண்ட படிக்கட்டுகள், இடருவதை தடுக்கும் பிளட்பார்ம்கள், ஹேண்ட்ரெயில்கள், ஒளிரும் LED விளக்குகள் ஆகியன அதனை இயக்குபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சிறந்த நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. உள்ளமைந்துள்ள ‘Kalmar Insight’ Remote Monitoring System ஆனது, ஒரு வருட அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்படுகிறது. சாய்வான டிரெய்லர்களுக்கு இடமளிக்கும் வகையில் Hydraulic Pile Slope உடன், பூட்டக்கூடிய எரிபொருள் மூடியையும் இந்த இயந்திரம் கொண்டுள்ளது.

SAGT இல், DIMO ஆனது Kalmar Essential Reachstacker DRU45 யினை இயக்குவதை மேற்கொள்கின்றது. இது ISO 20’/40′ கொண்ட மிக உயர்ந்த கனசதுர கொள்கலன்களை 5 அடி உயர மற்றும் 3 அடி ஆழமான அடுக்குகளில் கையாளும் திறன் கொண்டுள்ளது. spreader இற்கு அடியில் இயந்திரத்தின் தூக்கும் திறன் 45 தொன்கள் எனபதுடன் இது =/- 800mm பக்க மாற்றத்துடன் Kalmar இன் மாற்றயமைக்கக் கூடிய 20’ – 40’ spreader உடன் பொருத்தப்பட்டுள்ளது.

Kalmar Essential Reachstacker DRU45 ஆனது, சக்திவாய்ந்த, திறமையான மற்றும் சூழலுக்கு உகந்த தொழில்துறை எஞ்சினுடன் வருகிறது. இது இயக்குபவரின் பாதுகாப்பிற்காக, தீயை கட்டுப்படுத்தும் தொகுதியைக் கொண்டுள்ளது. இது அதிகளவான விசிறும் முனைகளைக் கொண்டுள்ளதோடு, தீ கண்டறியப்படும் நிலையில், மீள்நிரப்பக் கூடிய தொட்டியில் இருந்து உயர் அழுத்தத்த்தில் நீரை விசுறுகிறது. Kalmar Essential Reachstacker DRU45 ஆனது, பயனர் நட்புடனானது என்பதுடன், அதன் இயக்கம் முழுவதும், இயக்கத்திற்கான குறைந்த செலவையும் அதிக ஆற்றல் திறனுடன் உயர் செயற்றிறனையும் வழங்குகிறது.

Kalmar தயாரிப்புகள் அவற்றின் ஒப்பிட முடியாத தரத்தின் அடிப்படையில் நன்கு அறியப்பட்டவையாகும். வணிக நிறுவனங்கள் தங்களது புதிய மட்டத்திலான செயற்பாட்டு உற்பத்தித் திறனை அடைய உதவும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. Kalmar இன் பரந்த அனுபவம், DIMO இன் பொறியியல் விசேடத்துவத்துடன் இணைந்து, நாட்டின் துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு முனையங்கள், கொள்கலன் செயல்பாடுகளின் மேம்பாட்டுச் செயன்முறைக்கு உதவுவதில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குகிறது. வழங்கப்படும் அனைத்து Kalmar உபகரணங்களும், DIMO வின் பொறியியல் விசேடத்துவம் மற்றும் அதன் ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான சேவைகளின் நிபுணத்துவத்துடன் நிர்வகிக்கப்படுவதோடு, உரிய ஆதரவும் வழங்கப்படுகின்றது. இவற்றின் மூலம் வேலைத் தளத்திலுள்ள தொழிலாளர்களுக்கு ஒப்பிட முடியாத உதவிகளை வழங்குவது உறுதியளிக்கப்படுவதோடு, இலங்கையிலுள்ள துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டுக் கொள்கலன் நடவடிக்கைகளில் உற்பத்தித்திறனை பாரிய அளவில் மேம்படுத்தவும் உதவுகின்றது.

END

Image Captions:

பிரதான புகைப்படம் – Kalmar Essential Reachstacker DRU45 இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்வில் DIMO மற்றும் SAGT அதிகாரிகள்

படம் 2 – Kalmar Double Container Handler DCG100-45 ED65 இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்வில் DIMO மற்றும் LIL அதிகாரிகள்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *