ஆசியா பசுபிக் பொருளாதார வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்காக தொழில்துறை பங்காளர்களுடன் இணையும் Huawei புதிய ஒத்துழைப்புகள் தொடர்பில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்து

Huawei Asia Pacific Digital Innovation Congress மாநட்டின் இரண்டாவது நாளில், “Diving into Digital in Industries” (தொழில்துறைகளில் டிஜிட்டலில் பாய்ச்சல்) எனும் தொனிப்பொருளின் அடிப்படையிலான முக்கிய கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த 1,000 இற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு, டிஜிட்டல் மாற்றத்தில் உள்ள சவால்களைச் சமாளிக்க புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பான சவால்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Huawei Asia Pacific Enterprise Business இன் தலைவர் நிக்கொலஸ் மா (Nicholas Ma) ஆரம்ப உரையை நிகழ்த்தினார். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக விரிவடைந்து வருவதாக தெரிவித்த அவர், அரசாங்கத்தின் தொலைநோக்கு ரீதியான டிஜிட்டல் மூலோபாயம் மற்றும் பரந்த அளவிலான தொழில்துறைகளில் உள்ள பங்கேற்பாளர்களின் கூட்டு முயற்சிகளால் அது பயனடைவதாகவும் தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் அனைத்து தொழில்துறைகளிலும் உற்பத்தி முறைகளை மாற்றுமென Huawei எதிர்வுகூறுகின்றது. இது 27 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பை உருவாக்கும். “எமது கூட்டாளர்களுடன் சேர்ந்து, தொழில்துறைகளை சரியாகப் புரிந்துகொள்வதற்கு நேரம் ஒதுக்குவதோடு, அதன் பின்னர் அதற்கேற்றாற் போல் உதவுவதற்குத் தேவையான தீர்வுகளை உருவாக்குகின்றறோம். திறந்த தொழில்துறை சூழலை உருவாக்குவதற்கும், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கும் எமது கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இந்நிகழ்ச்சியில், பங்களாதேஷ் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவின் இராஜாங்க அமைச்சர் ஸுனைட் அஹமட் பலக் (Zunaid Ahmed Palak) உரை நிகழ்த்தியபோது, “ICT புரட்சியில் பங்களாதேஷ் வேகமாக வளர்ந்து வருகிறது. புத்தாக்கமான மற்றும் புதுமையான சிந்தனை மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது. டெவலப்பர்கள், தொழில்துறையில் முன்னணியில் உள்ளவர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் இணைந்து சமூகத்திற்கு மேலும் பெறுமதியானவற்றை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி மேலும் ஆலோசனை செய்ய முன்வர வேண்டும். புத்தாக்கம் என்பது வெறுமனே பிரித்தொதுக்கப்பட்ட ஒரு விடயம் அல்ல. அது அனைத்தையும் ஒருங்கிணைத்து மிகவும் சிறந்த முடிவுகளைக் கொண்டுவருகிறது. அதன் சக்தியாலும், Huawei போன்ற புத்தாக்கம் கொண்ட நிறுவனங்களின் உதவியாலும், பங்களாதேஷ் மலர்ச்சியடையும். டிஜிட்டலாக சிந்தியுங்கள், டிஜிட்டலாக இருங்கள், டிஜிட்டலை உருவாக்குங்கள்” என அவர் தெரிவித்தார்.

Siam Commercial Bank வங்கியின் SEVP, பிரதம டிஜிட்டல் வங்கி அதிகாரியான Dr. Chalee Asavathiratham கருத்து வெளியிடுகையில், “தரவு மற்றும் பகுப்பாய்வுகளின் ஆற்றல் மூலம், இதற்கு முன்னர் பின்தங்கியிருந்த மற்றும் குறைந்த மட்டத்திலிருந்த வங்கிகளுக்கு வங்கிச் சேவையை வழங்குவோம். வங்கிச் சேவையானது சிரமமற்றதாகவும், உலகளாவியதாகவும், உணர்வு ரீதியானதாகவும் இருக்க வேண்டும். போத்தலில் இருந்து வரும் பூதத்தைப் போல, உங்களுக்குத் தேவைப்படும் வேளையில் வங்கிச் சேவையானது உங்கள் முன் நிற்க வேண்டும்.” என்றார்.

Chulalongkorn பல்கலைக்கழகத்தின் Sasin Graduate Institute of Business Administration பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் Jeffrey Towson (ஜெப்ரி டோசன்), “சீனாவில் அல்லது ஆசியாவில் உள்ள சிறந்த டிஜிட்டல் வணிகங்களிலிருந்து 3 பாடங்கள்” எனும் கருப்பொருளின் கீழ் ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். இதன்போது அவர், “டிஜிட்டல் ஆசியாவில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் கடைசி விடயம் யாதெனில், எவ்வித நன்மைகளுமின்றி போட்டியிடுவதாகும். உயிர்வாழவும் மீட்சியடையவும், உங்களைச் சுற்றி ஒரு அகழி இருக்க வேண்டும். ” என்றார்.

இரண்டு நாட்களுக்கு மேலாக இடம்பெற்ற, Huawei APAC Digital Innovation Congress மாநாட்டில்,  Smart Campus, Data Center, Digital Power, HUAWEI CLOUD ஆகிய விடயங்கள் தொடர்பில், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை வாடிக்கையாளர்களுடன், Huawei 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவது தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்பிற்கான அடிப்படையை வழங்குவதோடு, APAC டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்பான அளவுகோலையும் அமைக்கின்றன. தொழில்துறைகளுக்கும் Huawei இற்கும் இடையிலான ஒத்துழைப்பானது, புத்தாக்க பாதையின் இன்றியமையாத பகுதியாகும்.

“In Asia-Pacific, for Asia-Pacific” (ஆசியா-பசுபிக்கில், ஆசியா-பசுபிக்கிற்காக) எனும் எண்ணக்கருவுடன், தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம், Huawei ஆனது, ஆசியா-பசுபிக் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாளராக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறைகளின் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவதுடன், அனைத்து தொழில்துறை கூட்டாளர்களுடனும் இணைந்து டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகளையும் பெறுகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *