2026 கொழும்பு வாகன கண்காட்சியில் ‘Yamaha XSR-155’, ‘NMAX-155’ வாகனங்களை அறிமுகப்படுத்திய AMW

இலங்கையில் Yamaha நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், உள்ளூர் சந்தைக்காக இரண்டு புதிய 155cc இரு சக்கர வாகனங்களை, ரெட்ரோ பாணியிலான Yamaha XSR-155 மோட்டார் சைக்கிள் மற்றும் Yamaha NMAX-155 ஸ்கூட்டர் ஆகியவற்றை BMICH இல் இடம்பெற்ற 2026 கொழும்பு வாகன கண்காட்சியில் (Colombo Motor Show 2026) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரு வாகனங்களின் அறிமுகத்தின் மூலம், தற்போது பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட மெனுவல் நிலை மோட்டார் சைக்கிள் மற்றும் நகர்ப்புறப் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒட்டோமெட்டிக் ஸ்கூட்டர் ஆகிய இரண்டு தனித்துவமான பயண பாணிகள் Yamaha வர்த்தகநாமத்தின் இலங்கை வாகன வரிசையில் இடம்பிடித்துள்ளன. நவம்பர் 20 முதல் நவம்பர் 23 வரை 4 நாட்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில் AMW Yamaha கூடத்தில் இந்த இரு மாதிரிகளும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து, AMW நிறுவனத்தின் குழும முகாமைத்துவ பணிப்பாளர் ஜவஹர் கணேஷ் தெரிவிக்கையில், “கொழும்பின் அன்றாடப் போக்குவரத்தில் மன அழுத்தமில்லாத தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி அல்லது வார இறுதியிலான இயந்திரத் தன்மையாக இருந்தாலும் சரி, இலங்கை வாகன செலுத்துநர்கள் தங்களது வாழ்க்கை முறைக்கு ஏற்ப மோட்டார் சைக்கிள்களை அதிகமாக தெரிவு செய்கின்றனர். Yamaha வர்த்தகநாமத்தின் உலகளாவிய ஜப்பானிய பொறியியல் மற்றும் AMW இன் நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பின் ஆதரவுடன், கொழும்பு வாகன கண்காட்சியில் XSR-155 மற்றும் NMAX-155 ஆகியவற்றை ஒன்றாக அறிமுகப்படுத்தியமையானது, உலக இணைப்புடனான ஸ்கூட்டரின் நடைமுறைத் தன்மை மற்றும் வழக்கமான மோட்டார் சைக்கிள் வடிவமைப்பு ஆகியவற்றுக்கு இடையே அந்தந்த வகைகளை விரும்புவோருக்கு, தெளிவான தெரிவை வழங்குகிறது.” என்றார்.

நவீன வன்பொருளின் ஆதரவுடன் கூடிய கிளசிக் மோட்டார் சைக்கிள்களை விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்ட Yamaha XSR-155 ஆனது, 155cc, air-cooled, 4-stroke, SOHC, 4-valve fuel-injected எஞ்சினுடன், வட்ட வடிவ LED முகப்பு மின்விளக்கு, LED பின்புற மின்விளக்கு, digital instrument cluster மற்றும் 10 லீற்றர் எரிபொருள் தாங்கியை கொண்டிருக்கிறது. 6 வேக constant mesh கியர்பொக்ஸ் மற்றும் wet multiple-disc கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ள இது, 10,000 rpm இல் 13.5 kW (18.4 PS) திறனையும், 7,500 rpm இல் 14.2 Nm முறுக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. 134 கிலோ கிராம் நிறை கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் Deltabox சட்டகத்துடன் கூடிய டெலஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், லிங்க்-வகை ஸ்விங்ஆர்ம் பின்புற சஸ்பென்ஷன், 17 அங்குல டியூப்லெஸ் டயர்கள், 810 மி.மீ. ஆசன உயரம், 170 மி.மீ. தரையிலிருந்தான உயர் dual-channel ABS உடன் கூடிய முன் மற்றும் பின்புற ஹைட்ரோலிக் ஒற்றை டிஸ்க் பிரேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

செளகரியம் மற்றும் வாகனத்திற்குள்ளேயே அமைக்கப்பட்ட இணைப்பைத் தேடும் அன்றாட நகரப் பயணிகளை இலக்காகக் கொண்ட Yamaha NMAX-155 ஸ்கூட்டரானது, 8,000 rpm இல் 11.1 kW திறனையும், 6,500 rpm இல் 14.0 Nm முறுக்கத்தையும் வழங்கும் 155cc திரவ குளிராக்கம் (liquid-cooled), 4-stroke, SOHC, 4-valve fuel-injected எஞ்சினால் இயக்கப்படுகிறது. 7.1 லீற்றர் எரிபொருள் தாங்கி, மற்றும் 57 கிராம்/கி.மீ. எனும் அளவிலான குறைந்த CO2 வெளியீடு ஆகிய அம்சங்களை கொண்டுள்ள இது, தெரிவு செய்யும் சவாரி முறைகளுடன் கூடிய Yamaha வர்த்தகநாமத்தின் ‘Electric Continuously Variable Transmission’ (YECVT) வசதியை அறிமுகப்படுத்துகிறது. 135 கிலோ கிராம் நிறை கொண்ட இந்த ஸ்கூட்டர், 770 மி.மீ. இருக்கை உயரம், 125 மி.மீ. தரையிலிருந்தான உயரம், டெலஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், யூனிட் ஸ்விங் பின்புற சஸ்பென்ஷன், 13-அங்குல டயர்கள், முன் மற்றும் பின்புற ஹைட்ரோலிக் ஒற்றை டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன் திரையிலேயே Garmin StreetCross பாதை வழிகாட்டல், MyRide ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் திறப்பு அற்ற ஸ்மார்ட் இக்னிஷன் தொகுதி ஆகியவற்றுடன் கூடிய 4.2 அங்குல திரையையும் கொண்டுள்ளது.

Yamaha XSR-155 மற்றும் NMAX-155 ஆகிய இரு மாதிரிகளும் நவம்பர் 20 – 23 வரை BMICH இல் இடம்பெற்ற வாகன கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் முழுமையான விபரங்கள் மற்றும் முகவர்கள் குறித்து அறிய yamaha.lk இணையத்தளத்தை அணுகவும்.

ஒரே 155cc எஞ்சின் திறன், சவாரி செய்வதற்கான முற்றிலும் வித்தியாசமான இரண்டு வழிகள்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *