ரூ. 6,750,000 இலிருந்து ஆரம்பிக்கும் 3 மின்சார வாகனங்கள் உள்ளிட்ட 4 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் Unimo Enterprises

United Motors Lanka PLC நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான Unimo Enterprises Limited சார்பில், மூன்று வாகன வர்த்தகநாமங்ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு புதிய வாகன மாதிரிகள் 2026 கொழும்பு வாகன கண்காட்சியில் (Colombo Motor Show 2026) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்படியான விலையில், நடைமுறைக்கு ஏற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போக்குவரத்துத் தீர்வுகளை இலங்கை வாகன உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை இது வலுப்படுத்துகிறது. இதில் JMEV EV2 மற்றும் EV3 மின்சார ஹேட்ச்பேக் (electric hatchbacks) வாகனங்கள், JMC Grand Avenue டீசல் டபள் கெப், E5 Plus ஏழு இருக்கைகள் கொண்ட Range Extended Electric Vehicle (REEV) ஆகியன உள்ளடங்குகின்றன.

இலங்கையின் வாகனச் சந்தையானது மின்சாரப் போக்குவரத்தை நோக்கி மாறி வரும் நிலையிலும், கட்டுப்படியான விலையிலான போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து வரும் சூழலிலும், JMC குழுமத்தின் JMEV EV2 மற்றும் EV3 மின்சார ஹேட்ச்பேக் (hatchbacks) வாகனங்களை வெறுமனே ரூ. 6,750,000 இலிருந்து ஆரம்பிக்கும் விலைகளில் Unimo Enterprises அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையர்களுக்கு மின்சாரப் போக்குவரத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரிகள், ஒவ்வொரு மாதிரியின் வகையைப் பொறுத்து வயர்லெஸ் சார்ஜிங், மாறும் மின்விளக்குகள் (ambient lighting), அதிவேக சார்ஜிங் வசதி மற்றும் 360 பாகை கெமரா கட்டமைப்பு போன்ற நவீன அம்சங்களை கொண்டிருக்கின்றன. EV2 மற்றும் EV3 ஆகியன அன்றாடப் போக்குவரத்திற்கு ஏற்ற, நடைமுறைக்கேற்ற மற்றும் சிக்கனமான தீர்வுகளை வழங்குகின்றன.

தனது டபள் கெப் வகைகளை விரிவுபடுத்தும் வகையில், தனிப்பட்ட மற்றும் வணிகப் பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் உறுதியான செயல்திறன், நவீன வடிவமைப்பு மற்றும் நடைமுறைத் தன்மையை ஒன்றிணைக்கும் சக்திவாய்ந்த 2.5L டீசல் டபள் கெப் வாகனமான JMC Grand Avenue வாகனத்தையும் Unimo அறிமுகப்படுத்தியுள்ளது.

Forthing REEV வாகனத்தின் வெற்றிகரமான அறிமுகத்தைத் தொடர்ந்து, தனது SUV வரிசையை மேலும் வலுப்படுத்தும் வகையில், மற்றுமொரு ரேஞ்ச் எக்ஸ்டெண்டட் எலெக்ட்ரிக் வாகனமான (REEV) E5 Plus மாதிரியை Unimo அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் ஒரேயொரு ஏழு இருக்கைகள் கொண்ட ரேஞ்ச் எக்ஸ்டெண்டட் மின்சார வாகனமாக (REEV) நிலைநிறுத்தப்பட்டுள்ள E5 Plus, உச்சபட்சமாக 1,200 கி.மீ. வரையிலான ஒருங்கிணைந்த பயண எல்லையை வழங்குகிறது. இந்த மாதிரியானது மின்சாரப் போக்குவரத்துடன் பெற்றோல் மூலம் இயங்கும் ரேஞ்ச் எக்ஸ்டெண்டரின் வசதியையும் இணைக்கிறது, இது வசதி, செயல்திறன் மற்றும் நீண்ட தூரப் பயணத் திறனைத் தேடும் குடும்பங்களுக்கு ஒரு சிறந்த தெரிவாக அமைகிறது.

2026 கொழும்பு மோட்டார் ஷோ நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட இந்த நான்கு அறிமுகங்கள் மூலம், மின்சார வகை, நீடிக்கப்பட்ட மின்சார வகை  (extended-range electric) மற்றும் டீசல் வாகனப் பிரிவுகளில் கட்டுப்படியான விலையிலான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, நடைமுறைக்கு ஏற்ற போக்குவரத்துத் தீர்வுகளை இலங்கையர்களுக்கு வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை Unimo Enterprises மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *