டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான அசட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடட் (AIBL), மீள் காப்புறுதி முகவர் அனுமதியை இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடமிருந்து (IRCSL) பெற்றுள்ளது. அதனூடாக, சந்தையில் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளதுடன், டேவிட் பீரிஸ் குழுமத்தின் நிதி வலிமை, ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் நிறுவன நம்பகத்தன்மை ஆகியவற்றின் பின்புலத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் இம்மைல்கல்லினூடாக, முழு அளவிலான காப்புறுதி மற்றும் இடர் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகத் திகழும் தொடர்ச்சியான முன்னோக்கிய பயணத்தில் முக்கிய அங்கமாகவும் அமைந்துள்ளது.
இந்த அங்கீகாரத்துடன், AIBL தற்போது காப்புறுதி மற்றும் மீள்காப்புறுதி வைப்புகளை கையாளும் அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, அதிகரித்துச் செல்லும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சிக்கல்கள் நிறைந்த இடர் சூழல்களில் end-to-end அடிப்படையிலான இடர் பரிமாற்றங்களை காப்புறுதி வழங்குனர்கள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி ஆதரவளிக்கும் நிறுவனத்தின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
டேவிட் பீரிஸ் குழுமத்தின் காப்புறுதிப் பிரிவு என்ற வகையில், உறுதியான நிறுவனசார் பின்புலத்துடன், உள்நாட்டு சந்தை நிபுணத்துவத்தையும் AIBL இணைத்து வழங்குகிறது. 20 வருடங்களுக்கு மேலாக, பொது மற்றும் ஆயுள் காப்புறுதி முகவர் சேவைகளை வழங்குவதில் நம்பிக்கையை வென்ற நாமமாக திகழ்வதுடன், நாட்டிலுள்ள சிறந்த மூன்று காப்புறுதி முகவர் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒன்றிணைக்கப்பட்ட வழிமுறையினூடாக, காப்புறுதி முகவர், மீள் காப்புறுதி வைப்புகள் மற்றும் இடர் ஆலோசனை சேவைகள் போன்றன ஒரே கட்டமைப்பில் பேணுவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட, மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ரீதியில் உறுதியான இடர் ஆதரவை வழங்கவும் முடிந்துள்ளது.
மீள் காப்புறுதி முகவர் சேவைகளுக்கு மேலாக, சுயாதீனமான உடன்படிக்கை மறுகாப்பீடு மற்றும் விருப்பத்தெரிவு திட்டங்களை (treaty and facultative programmes) வடிவமைத்து பேணுவதற்கும், உள்நாட்டு காப்புறுதியாளர்கள் மற்றும் பாரியளவு வியாபாரங்களுக்கு சர்வதேச மீள்காப்புறுதித் திறன் அணுகலை மேம்படுத்தவும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மைல்கல் சாதனை தொடர்பில் AIBL இன் முகாமைத்துவ பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முதன்மை அதிகாரி திரு. நிஹால் ஹந்துன்கே கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரத்தினூடாக, தொழில்நுட்ப ரீதியில் சிறந்த மற்றும் வணிக ரீதியில் வினைத்திறனான தீர்வுகளை வழங்கும் AIBL ஆற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், உறுதியான ஒழுங்குமுறை இணக்கத்தையும் பேணக்கூடியதாகவும் இருக்கும். முன்னணி சர்வதேச மற்றும் பிராந்திய மீள்காப்புறுதி சேவைகள் வழங்குனர்களுடன் உறவுகளை கட்டியெழுப்புவதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு உயர்-பெறுமதி வாய்ந்த மற்றும் சிக்கல்கள் நிறைந்த இடர்களை அதிக நம்பிக்கை, மீள்தன்மை மற்றும் உறுதித் தன்மையுடன் பேணுவதற்கு உதவ நிறுவனம் எதிர்பார்க்கிறது.” என்றார்.
காப்புறுதி வழங்குனர்கள் மற்றும் உட்கட்டமைப்பு, பொறியியல், மெரைன் (marine), உற்பத்தி மற்றும் இதர விசேடத்துவ துறைகளைச் சேர்ந்த பாரியளவு கூட்டாண்மை நிறுவனங்களுக்கு மீள் காப்புறுதி என்பது முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய சாதனமாக அமைந்துள்ளதுடன், உள்நாட்டிலுள்ள திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தனது விரிவாக்கமான கட்டமைப்பினூடாக, தற்போது வினைத்திறனான உடன்படிக்கை மறுகாப்பீடு மற்றும் விருப்பத்தெரிவு திட்டங்களை (treaty and facultative programmes) கட்டமைப்பது, கீர்த்தி நாமமிக்க சர்வதேச மீள்காப்புறுதி சந்தைகளுடன் வாடிக்கையாளர்களை இணைப்பது, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் உரிமைகோரல் ஆதரவுகளை வழங்குவது மற்றும் நிலைபேறான மற்றும் போட்டிகரமான விலையிடல் இடர் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய நிலையில் AIBL காணப்படுகிறது.
இந்த மைல்கல்லினூடாக, பாரம்பரிய முகவர் எனும் நிலையிலிருந்து, பரந்த இடர் தீர்வுகள் பங்காளராக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் சேவையாற்றும் நிலையை எய்துவது எனும் AIBL இன் பரந்த நோக்கு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
படம்
திரு. நிஹால் ஹந்துன்கே, முகாமைத்துவ பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முதன்மை அதிகாரி, AIBL