சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்ற Xiaomi உலகளாவிய பங்காளர் மாநாட்டில் (Xiaomi Global Partner Conference), GNEXT Sri Lanka நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்தின் சிறந்த விநியோகஸ்தர் (Best Distributor in the South Asian Region) எனும் மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளது. உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் மற்றும் தொழில்நுட்ப வர்த்தகநாமங்களில் ஒன்றான Xiaomi Global நிறுவனத்திடமிருந்து பெற்ற இந்த அங்கீகாரமானது, GNEXT நிறுவனத்தின் சிறந்த செயல்திறன், விநியோக விசேடத்துவம் மற்றும் பிராந்தியத்தில் வலுவான மூலோபாய பங்காண்மைக்கு சான்றாக அமைகிறது.
இந்த சாதனை குறித்துக் கருத்துத் தெரிவித்த GNEXT Sri Lanka நிறுவனத்தின் பொது முகாமையாளர் Steffan De Rosario, “Xiaomi Global நிறுவனத்திடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றமை தொடர்பில் நாம் உண்மையில் பெருமை அடைகிறோம். இந்த மைல்கல்லானது, எமது முழு அணியினரின் அர்ப்பணிப்பையும், எமது கூட்டாளர்களின் அசைக்க முடியாத ஆதரவையும் எடுத்துக் காட்டுகிறது. ஒரு உலகளாவிய மேடையில் எமது திறனை வெளிப்படுத்தவும், தலைமை தாங்கவும் முடியும் என்பதை நிரூபிக்கும் இந்நிகழ்வானது, இலங்கைக்கான ஒரு பெருமைக்குரிய தருணம் ஆகும்.” என்றார்.
இந்த விருதின் மூலம், வலுவான விற்பனையாளர் வலையமைப்பு, ஒப்பிட முடியாத செயற்பாட்டுத் தரங்கள் மற்றும் சந்தை வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு நம்பகமான விநியோகஸ்தர் எனும் தமது பங்கை GNEXT வலுப்படுத்துகிறது.

இது குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்த GNEXT Sri Lanka நிறுவனத்தின் அன்ட்ரொயிட் விற்பனைப் பிரிவுத் தலைவர் வித்யா சாகர், “இலங்கை இந்த உலகளாவிய அங்கீகாரத்தை பெற உதவிய எமது அனைத்துப் பங்காளர்களின் பங்களிப்புகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என மேலும் தெரிவித்தார்.
இந்த விருது GNEXT Sri Lanka நிறுவனத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைகிறது. இது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மூலோபாயப் பங்காளி எனும் அதன் பரிணாம வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன், பிராந்திய தொழில்நுட்பக் களத்தில் இலங்கை நிறுவனங்களின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் இது எடுத்துக்காட்டுகிறது.