நிலைபேறானதலைமைத்துவத்திற்காககௌரவிக்கப்பட்டஹேமாஸ்

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Hemas Holdings PLC) நிறுவனமானது ‘Best Corporate Citizen Sustainability (BCCS) Awards 2025’ (சிறந்த நிறுவன ரீதியான பிரஜைக்கான நிலைபேறான விருதுகள் 2025) விருது விழாவில் இலங்கையின் முன்னணி நிறுவன பிரஜைகளில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இது, நெறிமுறைசார்ந்த ஆளுகை, நிலைபேறான செயல் திறன் மற்றும் தேசிய ரீதியான பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் வலுவான வரலாற்றைக் கொண்ட ஒரு நோக்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு நிறுவனம் எனும் வகையில் இக்குழுமம் கொண்டுள்ள நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் BCCS விருதுகள், சூழல் தொடர்பான நிர்வாகம், சமூகப் பொறுப்பு, பங்குதாரருக்கான பெறுமதி உருவாக்கம் மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகியவற்றில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களை கௌரவிக்கின்றன. பத்து சிறந்த நிறுவன ரீதியான பிரஜைகளில் இடம்பிடித்த ஹேமாஸ் குழுமம், பல்வகைத் துறை நிறுவன பிரிவிற்கான விருதை வென்றதோடு, ஒட்டுமொத்த 3ஆம் இடத்தையும் பிடித்தது. அத்துடன், சிறந்த விநியோகஸ்தர் உறவுகளுக்கான விருதையும், அச்சுறுத்தலுக்குள்ளான உள்ளூர் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அதன் நிலைபேறான முயற்சிகளுக்காக மெரிட் திட்ட விருதையும் (Merit Project Award) வென்றது. இலங்கையிலுள்ள முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இங்கு அங்கீகரிக்கப்பட்டமையானது, குறித்த துறைகள் முழுவதும் ஹேமாஸ் நிறுவனத்தின் சீரான தலைமைத்துவத்தையும், அளவிடக்கூடிய தாக்கத்தை வழங்கக்கூடிய அதன் திறனையும் பிரதிபலிக்கிறது.

இந்தக் கௌரவம் குறித்து கருத்துத் தெரிவித்த மக்கள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் பிரதம அதிகாரி ரவி ஜயசேகர, “Best Corporate Citizen Sustainability Awards 2025 விருது விழாவில் கிடைத்த கௌரவமானது, நோக்கமும் செயல் திறனும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளவை எனும் எமது நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ஹேமாஸ் ஆகிய நாம், நீடித்த பெறுமானத்தை உருவாக்குவதற்கும், சமூகங்களை வலுவூட்டுவதற்கும், சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தேசிய முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம். இந்த விருதானது எமது வணிகப் பிரிவுகளின் அளவிடக்கூடிய பெறுபேறுகளை அங்கீகரிக்கிறது. அத்துடன், இலங்கையின் பெருநிறுவனத் துறையில் நிலைபேறான விடயங்களில் ஒரு தலைவர் எனும் ஹேமாஸ் நிறுவனத்தின் நிலையை உறுதிப்படுத்துகிறது.” என்றார்.

இது குறித்து மேலும் விபரித்த குழுமத்தின் நிலைபேறான மற்றும் பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் இஷானி ரணசிங்க, “இந்த கௌரவமானது, வலுவான ஆளுகை, தெளிவான முன்னுரிமைகள் மற்றும் அளவிடக்கூடிய பெறுபேறுகளை மையமாகக் கொண்ட நிலைபேறான விடயங்களில் எமது ஒழுக்க நெறி கொண்ட மற்றும் மூலோபாய அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. சூழல் தொகுதியை மீளக்கட்டியமைத்தல், பிளாஸ்டிக் மீள்சுழற்சி, அத்தியாவசிய சேவைகளுக்கான சமமான அணுகல் போன்ற அம்சங்களில் முறையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்துகின்றோம். எமது நிலைபேறான செயல் திறனை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவதால், இலங்கையின் பொறுப்பான பெருநிறுவன தலைமைத்துவம் தொடர்பான உயர் தரங்களை அமைப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.” என்றார்.

நம்பகமான, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய நிலைபேறான தலைமைத்துவம் குறித்து பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ள இந்நேரத்தில் ஹேமாஸ் கௌரவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக சம்மேளனத்தின் இறுக்கமான மதிப்பீட்டின் மூலம் மதிப்பிடப்பட்ட ஆளுகை, சூழல் தொடர்பான பொறுப்பு, சமூகத் தாக்கம் மற்றும் நெறிமுறை ரீதியான நடத்தை ஆகியவற்றில் குழுமத்தின் செயல் திறன், மக்களின் வாழ்வை வளப்படுத்துதல், தேசிய அபிவிருத்தியை ஆதரித்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பூமியை பாதுகாத்தல் ஆகியவற்றில் ஹேமாஸ் நிறுவனம் கொண்டுள்ள நீண்ட கால அர்ப்பணிப்பை இது வலுப்படுத்துகிறது.

Hemas Holdings PLC பற்றி

1948 இல் நிறுவப்பட்ட ஹேமாஸ் நிறுவனம், குடும்பங்கள் சிறந்த எதிர்காலத்தை அடைய ஊக்குவிக்கும ஒரு எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டு, 75 ஆண்டுகளாக ஹேமாஸ், நுகர்வோர் வர்த்தகநாமங்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் புத்தாக்கமான தீர்வுகளின் மூலம் வாழ்க்கையை வலுவூட்டி வருகிறது. இலங்கையின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் பின்னிப் பிணைந்திருக்கும் ஹேமாஸ் நிறுவனம், பங்களாதேஷில் செயற்பாடுகளை ஆரம்பித்ததன் மூலம் பிராந்திய ரீதியாகவும் விரிவடைந்துள்ளது. எமது முன்னோக்கிய பயணத்தில், அனைத்துப் பங்குதாரர்களுக்கும் சாதகமான தாக்கத்தை உருவாக்க, பல்வேறு வகையான மற்றும் ஆர்வமுள்ள அணிகளுடன் தொடர்ச்சியாக முதலீடு செய்து, அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளைப் பேணுவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தை ஏற்படுத்துவோம்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *