நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS) மற்றும் Swinburne தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Swinburne University of Technology) ஆகியன, இலங்கை மாணவர்களுக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலான கல்விசார் விசேடத்துவத்தையும், பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கும் மற்றுமொரு வெற்றிகரமான கூட்டாண்மையின் வருடத்தை அண்மையில் கொண்டாடியிருந்தன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) 2025 ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற 2025 பட்டமளிப்பு விழாவில், Swinburne – NCHS வழிகாட்டலின் கீழ் பல்வேறு துறைகளில் தமது கற்கைகளை நிறைவு செய்த 300 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் சாதனைகள் இங்கு கௌரவிக்கப்பட்டன.
NCHS மற்றும் Swinburne இடையேயான ஒத்துழைப்பின் தொடர்ச்சியான வெற்றியை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது. இது இலங்கையின் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வியை தொடரவும், சர்வதேச தொழில் வாய்ப்புகளைப் பெறவும் வலுவூட்டுகின்றது. கொழும்பு மற்றும் கண்டி வளாகங்களைக் கொண்ட NCHS, உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட, உயர்தரமான கல்வியை, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வழங்க உறுதிபூண்டுள்ளது.
வளர்ச்சி, தூரநோக்கு மற்றும் உலகளாவிய தொடர்பின் கொண்டாட்டம்
இது குறித்து NCHS நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, பட்டதாரிகளின் சாதனைகள் குறித்து பெருமிதமளிப்பதாக தெரிவித்ததோடு, திறமையான, நெறிமுறையுள்ள, உலகளாவிய மனப்பாங்கை கொண்ட நபர்களை வளர்ப்பது தொடர்பில் தமது கல்லூரி கொண்டுள்ள நோக்கத்தை மீள வலியுறுத்தினார்.
“பட்டமளிப்பு விழா என்பது உங்களது தனிப்பட்ட சாதனையின் கொண்டாட்டம் மட்டுமல்ல. உங்களது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு செலுத்தப்படும் கௌரவமாகும். இலங்கை இந்த பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாற முயற்சிக்கின்ற நிலையில், நீங்கள் இந்த நோக்கில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறீர்கள். இங்கு பெற்றுக் கொண்ட திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் உலகளாவிய ரீதியான கண்ணோட்டத்துடன், நீங்கள் தற்போது உங்களது எதிர்காலத்திற்கு மட்டுமல்லாது, எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கத் தயாராக உள்ளீர்கள்.” என்றார்.
இந்த கருத்துகளுக்கு வலுச்சேர்த்த NCHS இன் பிரதித் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விக்டர் ரமணன், கல்விக்கு அப்பால் முழுமையாக மேம்படுவதன் (holistic growth) முக்கியத்துவத்தை இங்கு பட்டதாரிகளுக்கு நினைவுபடுத்தினார்.
அவர் குறிப்பிடுகையில், “உங்களது பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் தயாராகும் இவ்வேளையில், வெற்றி என்பது வெறுமனே கல்வி அறிவால் மாத்திரம் உருவாக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். திறம்பட தொடர்புகொள்ளும் திறன், குழு ஒன்றின் அங்கமாக இணைந்து பணியாற்றுதல், மாற்றத்திற்கு ஏற்ப மாறுதல் மற்றும் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் திறன் ஆகியன மின முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இந்த திறன்கள், கருணை மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய தலைமைத்துவத் திறனுடன் இணைந்து, பணியிடத்திலும் வாழ்க்கையிலும் உங்களை தனித்துவப்படுத்திக் காண்பிக்கும்.” என்றார்.
அவுஸ்திரேலியா – இலங்கை கல்விப் பங்காளித்துவத்தை வலுப்படுத்துதல்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு மெத்யூ டக்வொர்த், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த கல்விப் பங்காளித்துவத்தின் அவசியத்தை இங்கு எடுத்துக் கூறினார்.
“அவுஸ்திரேலியாவின் பிரதிநிதி எனும் வகையில், கல்வித் தொடர்பில் இலங்கையுடனான எமது பங்காளித்துவம் வலுவடைவதைக் காண்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலங்கை மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக சிறந்து விளங்கி, எமது இரு நாடுகளுக்கும் அவசியமான, எதிர்காலத்திற்கு ஏற்ற, உலகத் தரம் வாய்ந்த திறமையாளர்களாக மாறுகின்றனர். நீங்கள் உங்களது பயணத்தைத் முன்னெடுதுச் செல்லும் போது, உங்களது நாட்டிற்கு நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும், வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தின் ஊடாக பயணிக்கும் தற்போதைய இலங்கையின் எதிர்காலத்தை நீங்கள் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதையும் சிந்தியுங்கள்.” என்றார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் Swinburne தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கல்விப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அடம் பேக்கர், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரங்கிக்கா ஹல்வத்துர, NCHS இன் கற்கைகள் பீடாதிபதி கலாநிதி அலன் ரொபர்ட்சன் உள்ளிட்ட விசேட விருந்தினர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை பைசல் பொங்சோ சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்.
எதிர்காலத் தலைவர்களை வலுவூட்டல்


2025 பட்டமளிப்பு விழாவானது கல்விச் சாதனைகளை அங்கீகரிப்பதற்கு அப்பால், மாற்றமடைந்து வரும் உலகில் உயர்ச்சி அடைய அவசியமான திறமைகளையும் தன்னம்பிக்கையையும் கொண்ட எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவது தொடர்பான, NCHS மற்றும் Swinburne ஆகியவற்றின் ஒரே நோக்கத்தின் கொண்டாட்டமாகவும் அமைந்தது.
NCHS கல்லூரி தனது திட்டங்கள் மற்றும் பங்காளித்துவத்தை தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வருகின்றது. அந்த வகையில், இலங்கை மாணவர்கள் சர்வதேச கல்வியையும் அர்த்தமுள்ள உலகளாவிய ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவதற்கான வழிகளையும் வழங்குவதில் அது தொடர்ந்தும் தன்னை அர்ப்பணிப்பணித்துள்ளது. வலுவான அடித்தளம் மற்றும் நவீன புத்தாக்க திறனுடன், NCHS கல்லூரி பட்டதாரிகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமது தடத்தை தொடர்ந்தும் பதித்து வருகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு, 011 2 777 666 எனும் இலக்கத்திற்கு அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக எம்மைத் தொடர்பு கொள்ளவும். உற்சாகமான அறிவிப்புகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிந்து கொள்ள சமூக ஊடக பக்கங்கள் ஊடாக எம்மை பின்தொடர்வதுடன் www.nchs.edu.lk எனும் எமது இணையத்தளத்திற்கும் விஜயம் செய்யுங்கள்!
…………………………………………….
END