
இலங்கையில் Tata Motors இன் ஏக அங்கீகாரம் பெற்ற விநியோகத்தரான DIMO, தனது விரிவாக்க மூலோபாயத்தின் முக்கியமான அங்கமாக, தனது நவீன Tata பயணிகள் வாகன காட்சியறையை Altair Colombo இல் திறந்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Tata பயணிகள் வாகனத் தெரிவுகளுக்கு கிடைத்திருந்த பெருமளவான வரவேற்பைத் தொடர்ந்து, தனது காட்சியறை வலையமைப்பை விரிவாக்கம் செய்யும் DIMO இன் முயற்சிகளின் அங்கமாக இந்த உயர் தரம் வாய்ந்த வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பின் மையப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமாக அணுகக்கூடிய வசதியை ஏற்படுத்தும் வகையிலும் இந்தக் காட்சியறை அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், முழு Tata பயணிகள் வாகனத் தெரிவுகளையும் கொண்டு, சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதாக Altair Colombo இல் அமைந்துள்ள இந்தக் காட்சியறை, வர்த்தக நாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி, நகர்பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு Tata வாகனங்களை அதிகளவில் பார்வையிடக்கூடியதாக நிறுவியுள்ளது.
இந்த பிரதான காட்சியறையைத் தொடர்ந்து, குருநாகல், காலி மற்றும் மின்னேரிய ஆகிய பகுதிகளிலும் புதிய காட்சியறைகளை திறந்துள்ளது. அதனூடாக, முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சென்றடைவை மேம்படுத்தி, வாடிக்கையாளர் சௌகரியத்தையும் உறுதி செய்கிறது. அணுகல் மற்றும் சந்தை வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியும் இனங்காணப்பட்டிருந்ததுடன், கொழும்பு பிரதான மையப்பகுதியாக அமைந்துள்ளதுடன், குருநாகல், காலி போன்றன அவற்றை அண்மித்துக் காணப்படும் மாவட்டங்களிலிருந்து இலகுவாக அணுகக்கூடியதாக இருப்பதால் அந்த காட்சியறைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
DIMO இன் பயணிகள் வாகனங்கள் விற்பனை பொது முகாமையாளர் தரங்க குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் DIMO மற்றும் Tata ஆகியன தொடர்ந்தும் தமது பிரசன்னத்தை வலிமைப்படுத்தும் என்பதுடன், புதிய காட்சியறைகள் மட்டக்களப்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் காட்சியறைகள் நிறுவப்படும். இந்தப் பகுதிகளிலிருந்து பயணிகள் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. தொலைநோக்குடைய விரிவாக்கச் செயற்பாடுகளினூடாக Tata Motors இன் நீண்ட கால அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையர்களுக்கு நாடு முழுவதிலும் தனிப்பட்ட போக்குவரத்து தீர்வுகளை அதிகளவு அணுகக்கூடியதாக அமைந்திருக்கும்.” என்றார்.
விரிவாக்க பணிகளுக்கு அப்பால் Tata மற்றும் DIMO ஆகியன உரிமையாண்மை சௌகரியத்தில் கவனம் செலுத்துகின்றன. உரிமையாண்மையை இலகுபடுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அதில் சகல கிளைகளிலும் விற்பனைக்கு பிந்திய சேவை விரிவாக்கம், தொழினுட்ப ஊழியர்களுக்கான பயிற்சிகள், EV Charging அலகுகள் மற்றும் அசல் Tata உதிரிப்பாகங்களின் கிடைப்பனவு, எமது நிதிப் பங்காளர்களுடனான மூலோபாய பங்காண்மைகளினூடாக, நெகிழ்வான நிதி வசதியளிப்பு தெரிவுகள் போன்றன அடங்கியுள்ளன. மேலும், DIMO இனால் வாடிக்கையாளர்களுக்கு துரித பதிலளிப்புகள் மற்றும் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக விசேடமான ஹொட்லைன் இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஊக்கமளிக்கும் சந்தை பதிலளிப்புகளின் அடிப்படையில் விரிவாக்க பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சில மாதங்களின் முன்னர் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய பயணிகள் வாகனத் தெரிவுகளுக்கு காட்சியறைகளில் அதிகளவு கேள்வி மற்றும் விசாரிப்புகள் நிலவுகின்றன. சர்வதேச NCAP தரப்படுத்தல் பாதுகாப்பு அம்சங்கள், பிரத்தியேகமான அலங்காரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழினுட்பம் போன்றவற்றுடன், கிராமிய மற்றும் நகர் பகுதி நுகர்வோரிடையே இந்தத் தெரிவுகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
வாகன இறக்குமதிகளுக்கு இலங்கை மீண்டும் அனுமதியளித்துள்ள நிலையில், Tata பயணிகள் வாகன DIMO காட்சியறைகளின் விரிவாக்கம் என்பது வியாபார மைல்கல்லுக்கு அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. அதிகரித்துச் செல்லும் நுகர்வோர் கேள்வியை நிவர்த்தி செய்யும் முன்னேற்பாடான மூலோபாயத்தை இது பிரதிபலிப்பதுடன், அணுகலை மேம்படுத்துவது மற்றும் ஒப்பற்ற வர்த்தக நாம அனுபவத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. சந்தை அடிப்படையிலான விரிவாக்கத்துடன், நுகர்வோரை நோக்காகக் கொண்ட செயற்பாடுகளை இணைத்து, Tata மற்றும் DIMO ஆகியன இலங்கையில் பிரத்தியேக போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணமுள்ளன.