‘Net Zero Energy’ தொழிற்சாலையாக சான்றளிக்கப்பட்ட David Pieris உற்பத்தி மையம்; நிலைபேறான தன்மை குறிக்கோளில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது

கன்ட்ரோல் யூனியன் இலங்கையின் நிர்வாக இயக்குநர் திரு. ரோஷன் ரணவகே, டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ரோஹண திசாநாயக்கவிடம் நெட்ஜீரோ எரிசக்தி சான்றிதழை வழங்குகிறார். டேவிட் பீரிஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (தனியார்) லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ஜெயந்த ரத்நாயக்க, டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் (தனியார்) லிமிடெட் இயக்குநர் திரு. ஹேஷன குருப்பு, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (லங்கா) லிமிடெட் இயக்குநர் திரு. பண்டார ஹேரத், டேவிட் பீரிஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (தனியார்) லிமிடெட் தலைமை இயக்க அதிகாரி திரு. கீத் சமரநாயக்க, DPRE இன் நிதி, உத்தி மற்றும் செயல்பாடுகள் பொது மேலாளர் திரு. லஹிரு விதாரண, குழும நிலைத்தன்மை மேலாளர் திரு. அமில ஜெயவர்தன, கட்டுப்பாட்டு ஒன்றியத்தின் திட்ட மேலாளர் திரு. கயான் ரணசிங்க மற்றும் வணிகத் தலைவர் திரு. கவிந்து பண்டார குணதிலக ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நிலைபேறான தன்மையை நோக்கிய தமது பயணத்தில் முக்கியமான சாதனையை அடையாளப்படுத்தும் வகையில், David Pieris Motor Company (Lanka) Limited (DPMCL) நிறுவனம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரன்னவில் அமைந்துள்ள தமது உற்பத்தி மையத்திற்கு, Control Union நிறுவனத்தால் இலங்கையின் முதலாவது ‘Net Zero Energy’ வசதி கொண்டதாக உத்தியோகபூர்வமாக சான்றளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

David Pieris Motor Company (Private) Limited (DPMC) நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவாக செயற்படும் DPMCL ஆனது இலங்கையின் மிகப் பெரும் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது, வாகனங்களுக்கான உற்பத்திகள் மற்றும் சேவைகள், நிதிச் சேவைகள், லொஜிஸ்டிக் மற்றும் சேமிப்பு வசதி செயற்பாடுகள், வாகன பந்தயங்கள் மற்றும் பொழுதுபோக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு சொத்துகள், கப்பல் சேவைகள் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளிட்ட பல்துறை வர்த்தகங்களை கொண்டுள்ள, நாட்டின் மிகப்பெரிய பல்வகைத்துறை குழுமமான டேவிட் பீரிஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும்.

Control Union நிறுவனத்தால் வழங்கப்பட்ட இந்தச் சான்றிதழ், DPMCL நிறுவனத்தை Control Union Net Zero Energy Standard இன் சான்றளிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நிறுவனமாக அடையாளப்படுத்துகிறது. இது, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு, வலுசக்தித் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் குழுமத்தின் உறுதியான ஈடுபாட்டையம் முழுமையான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனையாகும்.

ரன்னவில் உள்ள டேவிட் பீரிஸ் உற்பத்தி வளாகம்

DPMC நிறுவனத்தின் ரன்ன உற்பத்தி மையமானது Net Zero Energy தொழிற்சாலையாக மாற்றப்பட்டமைக்கு, David Pieris Renewable Energy (Private) Limited நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட மேம்பட்ட சூரிய மின்கல கட்டமைப்பின் நிறுவல் மூலமே சாத்தியமாகியுள்ளது. இதன் மூலம், இவ்வசதியானது தற்போது மின்சாரம் மற்றும் எரிபொருள்கள் போன்ற மீள்புதுப்பிக்க முடியாத மூலங்களிலிருந்து பெறும் வலுசக்தியை விட அதிகமான தூய்மையான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை தொடர்ச்சியாக உற்பத்தி செய்கிறது. இந்த மாற்றமானது, இத்தொழிற்சாலையை வலுசக்தி சமனிலையுடனும் திறனுடன் செயற்பட வைக்கிறது.

இது குறித்து, David Pieris Motor Company (Lanka) Limited நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பண்டார ஹேரத் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் மாத்திரமன்றி இப்பிராந்தியத்திலேயே நிலைபேறான தொழில்துறை நடைமுறைகளுக்கான வழிகாட்டியாக திகழ வேண்டும் எனும் எமது அர்ப்பணிப்பை இந்தச் சான்றிதழ் பிரதிபலிக்கிறது.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இது, நாம் கொண்டுள்ள உள்ளக நிபுணத்துவத்தையும், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் புத்தாக்கத்தில் எமது குழுமம் கொண்டுள்ள ஒருங்கிணைந்த அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது.” என்றார்.

இது பற்றி Control Union Inspections (Pvt) Ltd., Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ரணவக கருத்துத் தெரிவிக்கையில், “மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் ஒருங்கிணைப்பு மற்றும் வலுசக்தித் திறன் மேம்படுத்தல்கள் மூலம் வணிக நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான குறிக்கோள்களை உண்மையாகவே அடைய முயற்சி செய்கின்றன என்பதை அடையாளப்படுத்தும் வகையில், Control Union நிறுவனத்தால் Net Zero Energy Certification Standard உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தச் சான்றிதழைப் பெற்ற முதலாவது நிறுவனமாக David Pieris Motor Company நிறுவனத்திற்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

ரன்ன தொழிற்சாலையின் Net Zero Energy தரநிலைப்படுத்தலானது, இலங்கையின் தொழில்துறை பிரிவில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை ஒருங்கிணைப்பதில் ஒரு முன்னோடியான வெற்றிக் கதையை வெளிப்படுத்துவதோடு, நிலைபேறான மாற்றத்திற்கான முன்னோடியான குழுமமாக டேவிட் பீரிஸ் குழுமத்தின் பாத்திரத்தையும் வலுப்படுத்துகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *