
இலங்கையில் Tata வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக செயற்படும், முன்னணி பல்துறை வணிகக் குழுமமான DIMO நிறுவனம், அண்மையில் யாழ்ப்பாணத்தில் DIMO Mega Fiesta 2025 நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. ஜூன் 24 முதல் 28 வரையில் இடம்பெற்ற இந்த Tata வர்த்தக வாகன சேவை முகாமானது, வட மாகாணத்தின் போக்குவரத்து நடவடிக்கையை வலுப்படுத்தும் DIMO நிறுவனத்தின் நோக்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுகிறது.
இந்நிகழ்வில், Tata வர்த்தக வாகனங்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், இதில் பாரிய அளவிலான வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். வாகனங்களின் செயற்றிறன் குறைவடைவதைத் தடுக்க முறையாக பராமரிப்பதன் முக்கியத்துவம், Tata ஜெனியூன் (அசல்) உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், அதன் மூலமான பயன்கள், ஏற்படக்கூடிய இயந்திரவியல் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியும் நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்களில் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, இதற்காக அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு Tata ஜெனியூன் உதிரிப் பாகங்களுக்கு 50% வரையான தள்ளுபடிகள் மற்றும் DIMO உற்பத்திகளுக்கு பல்வேறு விசேட சலுகைகளும் வழங்கப்பட்டன.
இது தொடர்பில், DIMO நிறுவனத்தின் Automotive Engineering Solutions பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன கருத்து வெளியிடுகையில், “வர்த்தக வாகன உரிமையாளர்கள் ஒரு பிராந்தியத்தின் பொருளாதார வாழ்வாதாரத்தின் முதுகெலும்பு என கூறலாம். அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் நம்பகத்தன்மை, அவர்களின் ஜீவனோபாயத்தை நிலைநிறுவத்துவதில் நேரடியாக மிகப் பாரிய பங்கு வகிக்கிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற DIMO Mega Fiesta 2025 நிகழ்வில், எமது வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப சேவைகளையும் வல்லுநர் அறிவையும் வழங்குவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் அடையும் பெறுபேறுகளின் மேம்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பிராந்திய போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் DIMO நிறுவனம் காண்பிக்கும் ஒப்பிட முடியாத அர்ப்பணிப்பு இதன் மூலம் வெளிப்படுகின்றது.” என்றார்.
இந்த நிகழ்வின் மூலம், DIMO Retail, DIMO Agri Machinery, Tata Passenger, Commercial Vehicles sales பிரிவுகள், வங்கிகள், லீசிங் நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே மேடையில் ஒன்றிணைந்தன. வாடிக்கையாளர்கள் தங்களது வாகனக் கொள்முதல் தேவைகளுக்கான பொருத்தமான நிதித் தீர்வுகள் மற்றும் அது தொடர்பான ஆலோசனை சேவைகளையும் அதே இடத்தில் இலகுவாக பெறுவதற்கும் இங்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
DIMO Mega Fiesta 2025 நிகழ்வு ஊடாக வாகன சேவைகள் மாத்திரமல்லாமல், இங்கு வருகை தந்த அனைவருக்கும் இலவச கண், பல் மற்றும் உடல்நல பரிசோதனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த, மஹேஷ் கருணாரத்ன, “எமது நோக்கமானது, வாகன சேவைகள் வழங்குவது மட்டுமல்ல. தொழில்முறை ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும், எமது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மதிப்பை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும். பாரம்பரியமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கும் முறைகளைக் கடந்து, வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளை கட்டியெழுப்ப இது போன்ற நிகழ்ச்சிகள் எமக்கு உதவியாக உள்ளன.” என்றார்.
Tata வர்த்தக வாகனங்களுக்கு அவசியமான ஒயில் மற்றும் கிரீஸ் இடல் சேவைகள், வாகன ஓட்டநிலை பழுது பாராமரிப்பு, எஞ்சின் மற்றும் அதன் பகுதிகளின் பழுதுபார்க்கும் சேவைகள், விபத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு முழுமையான டிங்கரிங் மற்றும் வண்ணப்பூச்சு இடல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், DIMO யாழ்ப்பாண கிளையின் மூலம் வழங்கப்படுகின்றன.
DIMO Mega Fiesta 2025 நிகழ்வுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து மாபெரும் வரவேற்பு கிடைத்ததோடு, இலவச வாகன பரிசோதனை, உரிய உதிரிப்பாகங்களைப் பெறும் வாய்ப்பு, நிபுணர் ஆலோசனைகள், சுகாதார பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடர்பில் அவர்களால் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பங்கேற்ற DIMO நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களால், வாகனங்களின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை பராமரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது. அத்துடன் தொழில்நுட்ப வழிகாட்டலும் செயல்திறன் மிக்க பராமரிப்பு ஆதரவின் மூலமாக வாடிக்கையாளர்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் இங்கு இடம்பெற்றன.
அனைத்து சேவைப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதியை வழங்கிய, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற DIMO Mega Fiesta 2025 நிகழ்வு, மக்களின் கனவுகள் மற்றும் அபிலாசைகளை வலுப்படுத்துவது தொடர்பான DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காண்பிக்கின்றது.