சுமார் 80 வருடங்களுக்கு மேலாக விசேடத்துவமான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் நம்பிக்கையை வென்ற முன்னோடியாகத் திகழும் Durdans Hospital, நவீன வசதிகள் படைத்த Urology சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, மேம்படுத்தப்பட்ட நோய் இனங்காணல் வசதிகள், குறைந்தளவு துளையிடலுடனான சத்திரசிகிச்சைகள் மற்றும் பரந்த சத்திரசிகிச்சையின் பின்னரான பராமரிப்புகள் போன்றவற்றை மேற்கொள்ளதவதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த நிலையத்தினூடாக, விசேடத்துவமான சிறுநீரகசார் சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், நோயாளர்களின் சௌகரியம், வினைத்திறன் மற்றும் சிறப்பாக மருத்துவ தீர்வுகள் போன்றன வழங்கப்படும்.

புதிய Urology சிகிச்சைப் பிரிவினூடாக, ஒரு பகுதியிலிருந்து பரந்தளவு சிகிச்சைசார் சேவைகள் வழங்கப்படுவதால், நோயாளர்களுக்கு வினைத்திறனான மற்றும் உயர் தரம் வாய்ந்த பராமரிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்தப் பிரிவு ஐந்து வைத்திய ஆலோசனை அறைகளை கொண்டுள்ளதுடன், சிகிச்சைகளை சீராக மேற்கொள்ளக்கூடிய வகையில் சகல வசதிகளையும் கொண்ட சிகிச்சை நிலையத்தையும் கொண்டுள்ளது. நவீன நோய் இனங்காணல் வசதிகள் மற்றும் சிகிச்சை தொழினுட்பங்கள் போன்றவற்றைக் கொண்டு சிறப்பான பராமரிப்பை உறுதி செய்கிறது.
சிறுநீரக பாதையுடன் தொடர்புடைய குறைபாடுகள் இனங்காணல் மற்றும் சிகிச்சைகளுக்காக குறைந்த துளையிடலுடனான சத்திர சிகிச்சை முறையான cystoscopy அடங்கலாக பரந்தளவு விசேடத்துவ சிகிச்சைகளை இந்த நிலையம் கொண்டுள்ளது. மேலும், இந்த நிலையத்தினால், நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பான முறையில் stents அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுநீர் நீக்கக் குழாய் (catheter) வைப்பை சௌகரியமான முறையிலும், துல்லியமான முறையிலும் பின்பற்றப்படும் மேம்படுத்தப்பட்ட catheterisation நுட்பங்களையும் கொண்டுள்ளது.
மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதில் Durdans Hospital தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முதலீடுகளின் அங்கமாக அமைந்திருக்கும் இந்த Urology நிலையம், ஒழுங்கமைக்கப்பட்ட, நோயாளர்களை மையப்படுத்திய பராமரிப்பை வழங்கி, நோயாளர்கள் உயர் தரம் வாய்ந்த, பிரத்தியேகமான சிகிச்சைகளை சகல வசதிகளையும் கொண்ட நவன வசதிப் பகுதியில் பெறுவதை உறுதி செய்கிறது. அனுபவம் வாய்ந்த வைத்திய நிபுணர்கள் மற்றும் நவீன தொழினுட்பம் ஆகியவற்றை அணுகும் வசதியை கொண்ட இந்த நிலையம், பரந்தளவு சிறுநீரக குறைபாடுகளுக்கு நுணுக்கமான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, சிறுநீரக சார் பராமரிப்பில், சுகாதார பராமரிப்பு நியமங்கள் மேம்படுத்தல், விசேடத்துவமான நிபுணத்துவத்தை வழங்கல், மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் உயர் சிகிச்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுப்பதற்கான Durdans Hospital இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உயர் தரம் வாய்ந்த மருத்துவ பராமரிப்பை அணுகலுக்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், 2025 மே 31 ஆம் திகதி வரை Urology சிகிச்சை நிலையத்துக்கான வைத்தியசாலை கட்டணங்கள் விலக்கழிக்கப்படும். இந்த நடவடிக்கையினூடாக, அதிகளவு நோயாளர்களுக்கு நவீன சிறுநீரகசார் சிகிச்சை வசதிகளை, நிதிசார் கவலையின்றி பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், ஆரம்ப நிலைகளில் பரிசோதனைகளை மேற்கொண்டு குறைகளை இனங்காணல் மற்றும் முன்னணி நிபுணர்களின் பராமரிப்பின் கீழ் மீண்டு வருவதற்கான மிருதுவான பாதையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.