Hemas Consumer Brands இன் முதன்மையான சலவை வர்த்தகநாமமான தீவா, சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, ‘தீவா கரத்திற்கு வலிமை பெண் தொழில்முனைவோருக்கான’ ஒன்லைன் சந்தையை அறிமுகப்படுத்தி, உலகத்தை அவர்களுக்குத் திறந்து வைத்துள்ளது. தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம், நாடு முழுவதுமுள்ள பெண் தொழில்முனைவோரை மேம்படுத்தி வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒன்லைன் சந்தையானது, ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த ஒன்லைன் சந்தையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் வகையில், இந்த ஒன்லைன் சந்தை மூலம் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ள, தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோரின் முக்கிய பயணத்தையும் அவர்களது வெற்றியையும் கௌரவிக்கும் வகையில் ஒரு விசேட நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வு, பெண் தொழில்முனைவோரின் ஈடுகொடுக்கும் தன்மை, வளர்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், பிராந்திய ரிதியிலிருந்து தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு அவர்களது வணிகங்களின் விரிவாக்கத்தை ஏற்படுத்த உதவுகின்றது.
தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, ஏற்கனவே வடக்கு, மத்திய, ஊவா, வடமேல், தென், வடமத்திய மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் ஆறு மாகாணங்களில் 400 இற்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. Women in Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விரிவான பயிற்சி அமர்வுகள் மூலம், இந்த பெண் தொழில்முனைவோருக்கு தொழில்முனைவு தொடர்பான அத்தியாவசிய திறன்கள், நிதி அறிவு, தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான தன்னம்பிக்கை ஆகிய விடயங்கள் அளிக்கப்பட்டன. இதில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் சிறப்பாகச் செயற்பட்ட தொழில்முனைவோருக்கு அவர்களின் மூலதனத்தை அதிகரிக்க பண உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த உதவியளிக்கப்பட்டது.
இந்த வெற்றியை கருத்தில் கொண்டு, தீவா தற்போது தீவா கரத்திற்கு வலிமை பெண் தொழில்முனைவோருக்கான ஒரு ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னணி இலத்திரனியல் வணிகத் தீர்வுகள் வழங்குநரான Daraz Sri Lanka உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளமானது, திறமையான இந்த பெண்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், பரந்த வாடிக்கையாளர்களுடன் இணைப்பை பெறவும், புதிய சந்தைகளுக்கான வாய்ப்பை அணுகவுமான ஒரு நுழைவாயிலை வழங்குகிறது. தடைகளை உடைத்து, உலகளாவிய அரங்கில் பெண்கள் மேம்பட்டு, வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான தீவாவின் அர்ப்பணிப்புக்கு இந்த தளம் ஒரு சான்றாகும்.
பரந்த சந்தையை தொழில்முனைவோர் அணுகக்கூடிய வகையிலான “தீவா கரத்திற்கு வலிமை ஒன்லைன் தளம்” அறிமுகப்படுத்தப்பட்டமை இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். அதனைத் தொடர்ந்து, பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக இணைந்த 3 தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் தீவா கரத்திற்கு வலிமை பெண் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகளை எடுத்துக்கூறும் குழும கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த குழும கலந்துரையாடலில், Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர, Women in Management (WIM) அமைப்பின் நிறுவுனரும் தலைவருமான டாக்டர் சுலோச்சனா சேகேர, Daraz Sri Lanka பிரதம வணிக அதிகாரி ஒஷான் ரணதுங்க மற்றும் தீவா கரத்திற்கு வலிமை 3 பெண் தொழில்முனைவோர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். தீவா கரத்திற்கு வலிமை திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவம், தீவாவின் வர்த்தக நோக்கத்துடன் அது ஒருங்கிணைந்துள்ள விதம் மற்றும் பெண்கள் தலைமையிலான வணிகங்களை ஆதரிப்பதற்கு அவசியமான கூட்டு முயற்சிகள் ஆகியன தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
பெண்களை வலுவூட்டுவதில் தீவாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை. வலியுறுத்திக் கூறிய ஷியான் ஜயவீர, “தீவா எனும் வகையில், பெண்களின் எல்லையற்ற ஆற்றல் தொடர்பில் நாம் நம்புகிறோம். தீவா கரத்திற்கு வலிமை ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், உலகெங்கிலும் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு உலகைத் திறப்பதோடு, உலகளாவிய அரங்கில் வெற்றிபெறுவற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்குகிறோம். இது வெறுமனே ஒரு தளத்தை திறந்து வைப்பதற்கு அப்பாற்பட்ட விடயமாகும். இது அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு இயக்கமாகும்” என்றார்.
இவ்விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட, GTS Products உற்பத்திகளின் உரிமையாளரான ஆர்.கே. லக்மாலி, “எனது தயாரிப்புகளை நாடு முழுவதும் மட்டுமல்லாது, ஏற்றுமதிச் சந்தைக்கும் கொண்டு செல்ல இந்த ஒன்லைன் தளம் எனக்கு உதவியுள்ளது. எனது வணிகம் இவ்வளவு குறுகிய காலத்தில் சர்வதேச சந்தையை எட்டுமென நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இது தொடர்பான அனைத்து ஆதரவிற்கும் தீவாவிற்கும் இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்” என்றார். Sufisen Grinding Mills உரிமையாளர் எச்.கே. ஷானிகா பிரபாஷினி தெரிவிக்கையில் “நான் எனது தயாரிப்புகளை தங்கொட்டுவ மற்றும் அதனை அண்டிய பகுதியிலும் மட்டுமே விநியோகித்து வந்தேன். ஆனால் புதிய ஒன்லைன் தளமானது எனது தயாரிப்புகளை நாடு முழுவதும் விநியோகிக்க வழி வகுத்துள்ளது. இது எனது வருமானத்தை முன்னரை விட அதிகரிக்க உதவியுள்ளது.” என்றார்.
குழும கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட, டாக்டர் சுலோச்சனா சேகேர, இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சி மற்றும் வழிகாட்டலின் மாற்றத்தக்க தாக்கத்தை எடுத்துரைத்தார். இது பெண்களின் மனநிலையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைக் காட்டுவதோடு, எதிர்கால சவால்களுக்கு அவர்களை எவ்வாறு தயார்படுத்தியுள்ளது என்பது பற்றிக் குறிப்பிட்டார். வணிக வளர்ச்சியில் டிஜிட்டல் தளங்களின் பங்கை கோடிட்டுக் காட்டிய Daraz Sri Lanka பிரதம வணிக அதிகாரி ஒஷான் ரணதுங்க தீவா கரத்திற்கு வலிமை உடனான ஒத்துழைப்பு, பெண் தொழில்முனைவோர் டிஜிட்டல் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், புதிய சந்தைகளை அணுகவும், தங்கள் வணிகங்களை திறம்பட அளவிடவும் எவ்வாறு உதவியது என்பதை விளக்கினார்.
இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, தீவா கரத்திற்கு வலிமை திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த பெண் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அவர்கள் தங்கள் தனிப்பட்ட பயணக் கதைகளை இதன்போது பகிர்ந்து கொண்டனர். அதில் தீவாவின் ஆதரவானது, எவ்வாறு சவால்களை சமாளிக்கவும் தங்கள் வணிகங்களை வளர்க்கவும் நிதிச் சுதந்திரத்தை அடையவும் உதவியது என்பது பற்றி குறிப்பிட்டனர். அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவதிலும் பெண்கள் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கு அதிகாரமளிப்பதிலுமான இத்திட்டத்தின் வெற்றியை அவர்களின் கதைகள் வெளிப்படுத்தின.
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், தீவா கரத்திற்கு வலிமை திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், பெண்களை மேம்படுத்துவதிலும் பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுப்பதிலும் அதன் பங்கை மேலும் வலுப்படுத்துவதற்குமான தனது உறுதிப்பாட்டை தீவா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Hemas Consumer Brands பற்றி
60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.