Mercantile G பிரிவு தொடரில் 2024 சம்பியனாகதெரிவான யூனிலீவர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணி

MCA மைதானத்தில் கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி பரபரப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில், Amazon Trading – English Tea Shop அணியை தோற்கடித்து, Unilever Sri Lanka அணி, Mercantile G பிரிவு கிரிக்கெட் தொடரில் தோற்கடிக்கப்படாத அணியாக சம்பியன் பட்டத்தை வென்றது. கடினமான லீக் சுற்றுகள் மற்றும் நொக் அவுட் சுற்றுகளின் விறுவிறுப்பான போட்டிகளுக்குப் பின்னர், யூனிலீவர் கிரிக்கெட் அணியின் ஒப்பிட முடியாத திறமை, குழுச் செயற்பாடு ஆகியவற்றின் மூலம், முதன் முறையாக இந்த சம்பியன் பட்டத்தை பெறுவதற்கான வாய்ப்பு உருவானது.

அனுஷ்க பண்டாரவின் தலைமையிலான, யூனிலீவர் ஸ்ரீ லங்கா அணியின் இத்தொடர் முழுவதுமான பயணமானது, அணியின் அனைத்து அம்சங்களிலும் ஈர்க்கும்படியான திறமையை காண்பித்தது. லீக் சுற்றில், Zillione Technologies, Synergen Health, Water’s Edge, HNB Assurance ஆகிய அணிகளை யூனிலீவர் அணி தோற்கடித்தது. ஆயினும் Wiley Global மற்றும் Kelani Cables அணிகளுக்கு எதிரான போட்டிகள் முடிவு ஏதுமின்றி நிறைவடைந்தன. நொக் அவுட் சுற்றில், Singer Sri Lanka, Star Garments, South Asian Technologies அணிகளை வீழ்த்திய யூனிலீவர் அணி, இறுதிப் போட்டியில், சச்சிர விஜேசிங்க (51 ஓட்டங்கள்) மற்றும் ஹரிஷாந்த் ராஜேந்திரன் (29 பந்துகளில் 75 ஓட்டங்கள்) ஆகியோருக்கு இடையேயான வெற்றிக்கு வழிவகுத்த இணப்பாட்டமானது, இரு வீரர்களினதும் அரைச் சதங்களின் மூலம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தொடர் முழுவதும் துலான் அபேநாயக்க மொத்தமாக 202 ஓட்டங்களுடன் துடுப்பாட்ட தரவரிசையில் முன்னிலை வகித்ததோடு, தசித நிர்மல பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகளை (15) கைப்பற்றி சிறந்து விளங்கினார்.

அணியின் சாதனை குறித்து பெருமையை வெளிப்படுத்திய, யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அலி தாரிக், “இந்த வெற்றியானது யூனிலீவர் ஸ்ரீ லங்காவுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். எமது கிரிக்கெட் அணியானது தொடர் முழுவதும் ஒப்பிட முடியாத திறமை, விளையாட்டுத்திறன், குழுச் செயற்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது. அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பே இந்த வெற்றிக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர்களின் சாதனை தொடர்பில் நாம் பெருமிதம் அடைகிறோம்.” என்றார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஷாந்த் ராஜேந்திரனுக்கு போட்டியின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. அணியின் வெற்றிக்கு அவர் ஆற்றிய ஒப்பிட முடியாத பங்களிப்பிற்கு அது ஒரு தகுதியான கௌரவமாகும்.

வெற்றிகள் மற்றும் சவால்கள் நிறைந்த 50 இற்கும் அதிக வருட பயணத்தின் உச்சத்தில் இவ்வெற்றி அடையப் பெற்றிருப்பதானது, யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்திற்கு விசேடத்துவம் வாய்ந்ததாகும். அணியின் நெகிழ்வுத் தன்மை, அர்ப்பணிப்பு, விளையாட்டின் மீதான ஆர்வத்திற்கு இந்த வெற்றி ஒரு சான்றாக விளங்குகிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *