இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனத்தினால் Alumex PLC நிறுவனத்திற்கு ‘நெறிமுறையான வணிக சான்றிதழ்’

Hayleys இன் துணை நிறுவனமும், இலங்கையில் அலுமினிய உற்பத்தியாளருமான Alumex PLC நிறுவனத்திற்கு உயர்ந்த ‘Certificate of Ethical Trading’(நெறிமுறை வர்த்தகச் சான்றிதழை), இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் (NCE) அண்மையில் வழங்கியிருந்தது. வணிகம், தொழிலாளர், நெறிமுறை நடத்தை, சூழல், சமூகம் தொடர்பான சிறந்த நடைமுறைகள் மூலம் மாற்றமடைந்துவரும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் மற்றும் நுகர்வோர் தெரிவுகளுக்கு இணங்குவதற்கான நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை, இந்த பெறுமதி வாய்ந்த சான்றிதழ் அங்கீகரிக்கிறது. தொழிலாளர்களை நியாயமான முறையில் நடத்துதல், பாதுகாப்பான பணிச் சூழல், சுற்றுச்சூழலை மதித்தல், உள்ளூர் சமூகங்களுடனான ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் NCE ஆனது விருது பெறத் தகுதியானோரை தெரிவு செய்கிறது. இச்சான்றிதழின் மூலம், ஏற்றுமதித் துறையில் நெறிமுறையான நடைமுறைகளை மேம்படுத்துவதை NCE நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், நிலைபேறான மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளை பின்பற்ற நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. இந்த சான்றிதழானது நிறுவனங்களுக்கு நன்மைகளை வழங்குவது மட்டுமன்றி, உலகளாவிய சந்தையில் ஒரு பொறுப்பான வர்த்தகப் பங்காளி எனும் இலங்கையின் நற்பெயரையும் மேம்படுத்துகிறது.

Alumex PLC முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெடிவால இது பற்றி தெரிவிக்கையில், “ஏற்றுமதிச் சந்தைகள் தொடர்பான நெறிமுறையான விநியோகஸ்தர் எனும் வகையில், அலுமினிய உற்பத்தித் தொழில்துறையை அதிநவீன தரங்களுக்கு இணங்க பேணுவதற்கான எமது அர்ப்பணிப்பானது, இத்தொழில்துறையின் தரத்தை உயர்த்தும் அதே வேளையில், பல்வேறு துறைகளில் முன்னோடியாக இருக்க எமக்கு உதவியுள்ளது. நிலைபேறான தயாரிப்புகளை வழங்குவதிலான எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்த சான்றிதழை எமக்கு பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. Hayleys குழுமத்தின் ESG அபிலாஷைகள் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்கான பாதை வரைபடத்தை பிரதிபலிக்கும் Hayleys Lifecode இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள பரந்த இலக்குகளுடன் ஒத்துச் செல்லும் வகையில் Alumex அதன் ESG பாதை வரைபடத்தை முன்னின்று உருவாக்கி வருகிறது. நெறிமுறை ரீதியான வணிகத்திற்கான இந்த முக்கிய சான்றிதழ் மூலம் எம்மை அங்கீகரித்து, சான்றளித்த இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

கடந்த வருடத்தில் 14 விருதுகளை Aluex PLC வென்றுள்ளது. இலங்கையின் ஏற்றுமதித் துறையை முக்கிய இடத்திற்கு கொண்டு செல்வதில் நிறுவனத்தின் தலைமைத்துவம், ஆளுகை, நிலைபேறானதன்மை மற்றும் வணிக விசேடத்துவத்திற்கான அர்ப்பணிப்பை இது உறுதிப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல், இலங்கையின் ஏற்றுமதி துறைக்குள் தனது உயர்தர அலுமினிய தயாரிப்புகளுடன் புதிய ஏற்றுமதி தயாரிப்பு வகைகளை அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் முன்னோடியாக இருந்துள்ளது. கனடா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கு கணிசமான உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய, நிறுவனத்தின் மூலோபாய தூரநோக்கு மற்றும் செயற்பாட்டு ரீதியான சாதுர்யம் ஆகியன வழிவகுத்துள்ளன. சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம், உயர்தர அலுமினிய தீர்வுகளைத் தேடும் தொழில்துறைகளுக்கு நம்பகமான பங்காளியாக நிறுவனம் தற்போது இடம்பிடித்துள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *