ரூ. 100 பில்லியன் பரிவர்த்தனைகளை கடந்து  சாதனை படைத்த PAYable 

இலங்கையின் முன்னணி டிஜிட்டல் கட்டணம் செலுத்தல் தீர்வு வழங்குநரான PAYable, ரூ. 100 பில்லியனுக்கும் அதிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டதை பெருமையுடன் கொண்டாடுகிறது. இது அந்நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல் மாத்திரமல்லாது, உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் டிஜிட்டல் கொடுப்பனவுகளை தழுவுவதற்கும், தங்களது வருமானத்தை அதிகரிக்கவும், நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் வலுவூட்டவும் PAYable கொண்டுள்ள பங்களிப்பிற்கான மற்றுமொரு சான்றாகும். 

PAYable நிறுவனத்தின் ஆரம்பத்தை அடுத்து, இலங்கை வணிக நிறுவனங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் விதம் மாற்றமடைவதில் அது செல்வாக்குச் செலுத்தியுள்ளது.  ஒரேயொரு வணிக நிறுவனத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 40,000 வணிகங்களின் வலையமைப்பாக மாறியுள்ள PAYable ஆனது, ஆயிரக்கணக்கான சிறு வணிகங்கள், தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு, அதிகரித்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் போட்டியிட அவசியமான கருவிகளை வழங்கியுள்ளது. இதன் இணை நிறுவுனர்களான மறைந்த சுஜித் சுபசிங்கே மற்றும் யொஹான் விஜேசிறிவர்தனவின் தொலைநோக்கு பார்வையானது, இந்த வெற்றியின் அடிநாதமாக உள்ளது. அவர்கள் டிஜிட்டல் கொடுப்பனவுகளை அனைத்து மட்டத்திலான வணிகர்களும் அணுகக்கூடியதாகவும், கட்டுப்படியான விலையிலும், பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தனர். அவர்களின் அர்ப்பணிப்பானது, PAYable ஐ ஒரு இலட்சிய ஆரம்பநிலை வணிக நிறுவனத்திலிருந்து நாட்டின் மிகப்பெரிய வங்கி சாரா கட்டணங்களை ஏற்கும் டிஜிட்டல் சேவை வழங்குநராக மாற்றும் பயணத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது. 

இந்த மைல்கல் குறித்து கருத்துத் தெரிவித்த PAYable நிறுவனத்தின் இணை நிறுவுனரும் நிறைவேற்றதிகாரமற்ற தலைவருமான ராஜேந்திர தியாகராஜா தெரிவிக்கையில்,  “PAYable என்பது வெறுமனே ஒரு கட்டணத்தை ஏற்கும் தளம் மாத்திரமல்ல. இது வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கான வழிகாட்டியாகவும் உள்ளது. தங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்த விரும்பும் சிறிய வணிக உரிமையாளர்கள் முதல் தொழில்முனைவோர் வரை அனைவரும் அவர்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பம், ஆதரவு மற்றும் அணுகுமுறை போன்ற விடயங்களை வழங்கி வணிக நிறுவனங்கள் தங்கள் வருமானம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்க PAYable உதவியுள்ளது. டிஜிட்டல் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான தடைகளை நீக்கி, முன்பு பணப் பரிவர்த்தனைகளை மாத்திரம் நம்பியிருந்த பல வணிக நிறுவனங்களுக்கு, டிஜிட்டல் கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், புதிய வருமான வாய்ப்புகளை பெற்று, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், தமது  வணிகத்தை எதிர்காலத்தை நோக்கி நிலைப்படுத்தவும் PAYable உதவியுள்ளது.  டிஜிட்டல்  கொடுப்பனவுகள் வாடிக்கையாளர்களின்  விருப்பத்திற்குரிய தெரிவாக மாறியுள்ளதால், PAYable வசதியை தழுவிய வணிகங்கள் அதிக  பரிவர்த்தனைகளை பெற்றுக் கொண்டுள்ளன.” என்றார். 

குறிப்பாக இளைய தலைமுறையினர் டிஜிட்டல் கட்டண முறைமையை அதிகம் விரும்புவதன் காரணமாக, அதிகரித்து வரும் வணிகங்கள், தொழில்நுட்ப ஆர்வமுள்ள வாடிக்கையாளர் தளத்தை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. இந்த PAYable தளத்தின் தடையற்ற, பாதுகாப்பான பரிவர்த்தனைகள் காரணமாக வணிக நிறுவனங்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் இடையே நம்பிக்கையும் நீடித்த உறவும் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. PAYable வழங்கும் சேவையானது, பரிவர்த்தனைகளுக்கு அப்பால், 24 மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு, வணிக உரிமையாளர்களுக்கு அவர்களின் டிஜிட்டல் பயணத்திலான வழிகாட்டல், வணிகங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறும் போது அவசியமான நிபுணர் தலைமையிலான தீர்வுகள் மற்றும் நேரடி உதவி ஆகியனவும் அடங்குகின்றன. 

PAYable இன் இணை நிறுவுனர் யொஹான் விஜேசிறிவர்தன இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோது, “PAYable இன் வருகைக்கு முன்னர், பல வணிகங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஓரங்கட்டப்பட்டதாக, டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை அணுக முடியாமல் தவித்திருந்தன. ஆனால் பொருத்தமான கருவிகள் மூலம் அவர்களை நாம் வலுவூட்ட உதவி, அவர்களின் வணிகங்களை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையை மாற்றவும் நாம் உதவியுள்ளோம். அது மாத்திரமன்றி ரூ. 100 பில்லியன் பரிவர்த்தனைகளை உருவாக்குவது ஒரு நிதி மைல்கல் என்பதற்கு அப்பால், அது எண்ணிலடங்காத கனவுகளின் சின்னமாகும். இந்த வணிகங்கள் வளர்ந்து, தங்கள் வணிகங்களை புதிய உயரத்தை அடைவதைப் பார்ப்பது PAYable இன் வெற்றியின் உண்மையான அளவுகோலாகும். இந்த ரூ. 100 பில்லியன் ஆனது, வருமானத்திற்கு அப்பாற்பட்டது என்பதோடு, ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரின் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கை, இலட்சியம் மற்றும் வாக்குறுதியாகும்” என்றார். 

கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி உள்ளிட்ட இலங்கையின் முன்னணி வங்கிகளுடனான மூலோபாய கூட்டாண்மைகள் மூலம் PAYable இன் வலுவூட்டல் பயணம் மேலோங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்புகள் யாவும், இலங்கையின் நிதிச் சூழல் கட்டமைப்புடன் நேரடியாக இணைக்கும் தடையற்ற கொடுப்பனவு செலுத்தும் தீர்வுகளை வணிகங்கள் பயன்படுத்த உதவியுள்ளன. 

Mastercard நிதி நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான நாட்டுக்கான முகாமையாளர் சந்துன் ஹபுகொட இது பற்றித் தெரிவிக்கையில், “இலங்கையின் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் ஒரு தசாப்த கால புத்தாக்ககத்துடன் PAYable இன் மைல்கல் சாதனை ஒத்துப்போகிறது. ஒரு மதிப்புமிக்க கூட்டாளராக PAYable ஐ கொண்டிருப்பதில் Mastercard மகிழ்ச்சியடைகிறது. நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடையே பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை இந்த இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்வதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன.” என்றார். 

இந்த மைல்கல் தொடர்பில் தெரிவித்த Visa நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் அவந்தி கொலம்பகே, “ரூ. 100 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயலாக்கி நம்பமுடியாத மைல்கல்லை எட்டியமைக்காக PAYable இனை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் கூட்டாளர்கள் எனும் வகையில் Visa ஆகிய எமக்கு இது ஒரு பெருமையான தருணமாகும். புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பில் PAYable செலுத்தும் கவனத்திற்கும், இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலில் அவர்களின் முக்கிய பங்கிற்கும் இது ஒரு சான்றாகும். ஏராளமான வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் கனவுகள் மற்றும் இலட்சியங்களை PAYable தூண்டியுள்ளது. அத்துடன் டிஜிட்டல் இலங்கைக்கு வழி வகுக்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார். 

PAYable அனைத்து அளவிலான வணிகங்களையும், வர்த்தக நிறுவனங்களையும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அவர்கள் நிலைத்திருப்பதற்கும், அவர்கள் அதில் வெற்றியடைவதையும் உறுதி செய்கிறது. PAYable தனது பயனர் நட்பான, பாதுகாப்பான, அணுகக்கூடிய தளத்தின் மூலம், சிறிய, நடுத்தர தொழில்முனைவோர் (SMEs) மற்றும் வணிகங்ள் மற்றும் நிறுவனங்களுக்கு நம்பகமான கூட்டாளியாகத் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. அவர்களது நீண்ட கால வெற்றிக்குத் தேவையான கருவிகளையும் உரிய ஆதரவையும் வழங்கி, நம்பகமான கூட்டாளியாக தொடர்ச்சியாக பணியாற்ற விரும்புகிறது. இலங்கையின் டிஜிட்டல் புரட்சியில் இணைய விரும்பும் வணிகங்களுக்கு, PAYable இன் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் ஆதரவு குழு +94 11 777 6 777 எனும் இலக்கத்தின் ஊடாக, எப்போதும் உதவத் தயாராக உள்ளது. PAYable இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் கொண்டாடும் இவ்வேளையில், வணிகங்களை வலுவூட்டி, பணமில்லா பரிவர்த்தனைகளுக்கான அதிக அணுகல் கொண்ட இலங்கையை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உள்ளது. 

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *