Hemas விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (Hemas FMCG) உற்பத்தி நிறுவனமானது, பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் இயற்கை சூழல் தொகுதிகளைப் பாதுகாப்பதில் தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், தனது ஊழியர்கள் மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டர்களின் உற்சாகமான பங்கேற்புடன், கடந்த ஜூலை 22ஆம் திகதி காக்கைதீவு கடற்கரையை தூய்மைப்படுத்துவதற்காக Clean Ocean Force உடன் கைகோர்த்தது. ஒரு நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் மொத்தமாக xx கிலோகிராம் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு, சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான பிளாஸ்டிக் அகற்றல் குறித்து தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் ஊழியர்களிடையே குழுக் கட்டமைப்பை வளர்ப்பதற்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை Hemas FMCG இற்கு ஏற்படுத்தியிருந்தது. கடற்கரையை தூய்மைப்படுத்தும் திட்டம், சமூக ரீதியிலான பாதுகாப்பின் மூலம் கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Clean Ocean Force உடனான இந்த கூட்டு முயற்சியானது, பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்பாக அகற்றுவதை உறுதி செய்வதற்காக, குழுமத்தால் திட்டமிடப்பட்ட பல்வேறு பாரிய அளவிலான சூழல் தொடர்பான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.