நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் (4WD) விற்பனையில் முன்னணியில் திகழும் Hayleys Agriculture

கடந்த ஏப்ரல் மாத்தில் (2023) அதிக எண்ணிக்கையிலான உழவு இயந்திர விற்பனையை  Hayleys Agriculture பதிவு செய்தது. இது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் (RMV) பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான பதிவாகும். அதற்கமைய 2023 ஏப்ரலில் நிறுவனம் சந்தையில் பாரிய ஆதிக்கத்தை செலுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் உச்சபட்ச சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது. குபோட்டா மற்றும் இ-குபோட்டா வர்த்தகநாமங்களில், மொத்த உழவு இயந்திர பதிவுகளில் 52% பங்கையும், நான்கு சக்கர (4WD) உழவு இயந்திர பிரிவு விற்பனையில் 70.4% பங்குகளையும் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, இவ்வாறான அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகள் மற்றும் சந்தைப் பங்கு வீதங்களை பதிவு செய்துள்ளமையானது, இலங்கையில் உள்ள விவசாயிகள் இத்தயாரிப்புகளுக்காக Hayleys Agriculture நிறுவனத்தை தங்களது விருப்பமான விநியோகஸ்தராக தெரிவு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. நிறுவனத்தின் முக்கிய வணிக கூட்டாளரான ஜப்பானின் Kubota Corporation, நம்பகமான தனது விற்பனைக்கு பிந்தைய சேவைகள், நிலைபேறான விவசாய நடைமுறைகளில் தனது அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், உயர்தர தயாரிப்புகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் நற்பெயரே இதற்கான முற்றிலுமான காரணங்களாக விளங்குகின்றன.

Hayleys Agriculture Holdings Limited நிறுவனம் மற்றும் ஜப்பானின் Kubota Corporation ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மை மூலம், இலங்கை விவசாயிகளுக்கு குபோட்டாவின் சமீபத்திய தொழில்நுட்பம், உயர்தர உழவு இயந்திரங்கள், கூட்டு நெல் அறுவடை இயந்திரங்கள் (Paddy Combine Harvesters), அரிசி மாற்று இயந்திரங்கள் (Rice Transplanters) போன்றன, விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியன வழங்கப்படுகின்றன. குபோட்டாவின் உழவு இயந்திரங்கள் மற்றும் ஏனைய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் Hayleys Agriculture ஆனது, விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுவதோடு, சிறந்த செயற்றிறனையும் உள்ளூர் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

Hayleys Agriculture Holdings Limited நிறுவனமானது, விவசாயத் தொழில் துறையில் சந்தையில் முன்னணியில் விளங்குகின்றது. விவசாய நடைமுறைகளை இயந்திரமயமாக்குவதன் மூலம் இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இலங்கையின் விவசாயத் துறையில் உற்பத்தித்திறனையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்காக, புத்தாக்கமான மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் முன்னணியில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *