சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) Partner2Connect டிஜிட்டல் கூட்டணியில் இணைவதற்கான உலகளாவிய உறுதிமொழியில் Huawei கைச்சாத்திட்டுள்ளது. இது 2025ஆம் ஆண்டுக்குள் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொலைதூர கஷ்டப் பகுதிகளில் உள்ள சுமார் 120 மில்லியன் மக்களுக்கு தொடர்பாடல் இணைப்பை வழங்குகிறது.
Huawei நிறுவனத்தின் 2022 Sustainability Forum, Connectivity+: Innovate for Impact (2022 நிலைபேறானதன்மை மன்றம், இணைப்பு+: தாக்கத்தை ஏற்படுத்த புத்தாக்கம்) நிகழ்வில், Huawei நிறுவனத்தின் தலைவர் Liang Hua இது தொடர்பான முடிவை அறிவித்தார். ICT புத்தாக்க கண்டுபிடிப்புகள் எவ்வாறு வணிகம் மற்றும் சமூக மதிப்பை இணைக்கிறது மற்றும் டிஜிட்டல் பொருளாதார சகாப்தத்தில் நிலைபேறானதன்மைக்கு உந்துசக்தி அளிக்கிறது என்பதை இம்மன்றம் ஆராய்ந்தது.
இந்நிகழ்வில் ITU மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட தலைவர்கள், கம்போடியா, நைஜீரியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்பு அமைச்சர்கள் மற்றும் ஒழுங்குபடுத்துனர்கள், சீனா, தென்னாபிரிக்கா, பெல்ஜியம், ஜேர்மனியைச் சேர்ந்த வணிக நிறுவனத் தலைவர்கள், கூட்டாளர்கள், நிபுணர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ITU பிரதிப் பொதுச் செயலாளர் நாயகம் மல்கம் ஜோன்சன் கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்பாடல் இணைப்பு மாத்திரம் போதாது என்பது தெளிவான உண்மையாகும். அது கட்டுப்படியான விலையில் இருக்க வேண்டும்; அதன் உள்ளடக்கம் பொருத்தமானதாக இருக்க வேண்டும்; அது உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும்; அதனை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான திறன்களை பயனர்கள் கொண்டிருக்க வேண்டும். Partner2Connect (P2C) டிஜிட்டல் கூட்டணிக்கான ஆதரவிற்காகவும், கிராமப்புற இணைப்பு மற்றும் டிஜிட்டல் திறன்களின் முக்கிய விடயங்களில் அறிவிக்கப்பட்ட P2C உறுதிமொழிகளுக்காகவும் Huawei நிறுவனத்திற்கு நன்றி.” என்றார்.
உலகளாவிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை விலக்கியதான டிஜிட்டல் பிளவுபடுத்தலின் “நிதானமான யதார்த்தத்தை” நிவர்த்தி செய்வதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், தனியார் துறை, கல்வியாளர்கள், சிவில் சமூகத்தினரை ‘பல-பங்குதாரர் கூட்டாண்மைக்கு’ சீனாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் சட்டர்ஜி அழைப்பு விடுத்தார்.
“புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நிதிச் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், பாலின இடைவெளியைக் குறைப்பதற்கும், பசுமையான மீட்சியை ஏற்படுத்துவதற்கும், வளமானதாகவும், உள்ளடக்கியதாகவும் இருக்கும் வகையில் எமது உலகத்தை மீள்வடிவமைப்பு செய்வதற்கும், தொழில்நுட்பத்தின் உருமாறும் திறனைப் பயன்படுத்திக் கொள்ள, நமது ஆற்றல்மிக்க உலகிற்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஒத்துழைப்பு அவசரமாகத் தேவைப்படுகிறது. இதுவே அதற்காக செயற்பட வேண்டிய தருணமாகும்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்
டாக்டர் லியாங் தனது சிறப்புரையில், நிலையான வலைமைப்பிற்கான அணுகல் ஒரு அடிப்படைத் தேவை என்றும் அது டிஜிட்டல் யுகத்தில் சரியானது என்றும் வலியுறுத்தினார். தொடர்பில்லாத பலருக்கு, நம்பகமான இணைப்புக்கான அணுகல் அவர்களது வாழ்க்கையை மாற்றுவதற்கான முதல் படியைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.