Huawei ஸ்ரீலங்கா ‘Asia Pacific Seeds for the Future 2022’ ஆரம்பம்

ICT பயிற்சிக்காக இலங்கையிலிருந்து சிறந்த பல்கலைக்கழக திறமையாளர்கள் தாய்லாந்து பயணம்

இலங்கையின் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன், தாய்லாந்தில் ICT பயிற்சி பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட இளம் பல்கலைக்கழக திறமையாளர்களுடன் Huawei Asia-Pacific Seeds for Future 2022 (எதிர்காலத்திற்கான ஆசிய பசுபிக் விதைகள் 2022) திட்டத்தின் அறிமுகம் தொடர்பில் Huawei அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இலங்கைக்கான Country Focal Point, UNESCO Cluster Office அதிகாரி ஹிமாலி ஜினதாச, Huawei Sri Lanka CEO – Tao Guangyao ஆகியோருடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் Huawei மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் இந்த வெளியீட்டு விழா கல்வி அமைச்சில் நடைபெற்றது.

Seeds for the Future (எதிர்காலத்திற்கான விதைகள்) என்பது Huawei நிறுவனத்தின் உலகளாவிய பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) தொடர்பான முதன்மையான திட்டமாகும். அத்துடன் உலகெங்கிலும் உள்ள CSR முயற்சிகளில் மிக நீண்ட கால முயற்சியாகவும் இது விளங்குகின்றது. திறமையான உள்ளூர் ICT திறமையாளர்களை உருவாக்குதல், அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல், தொலைத்தொடர்பு துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே புரிதலை மேலும் மேம்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியானது பிராந்தியத்தை கட்டியெழுப்புதல் மற்றும் டிஜிட்டல் சமூகத்தின் பங்கேற்பை ஊக்குவித்தல், நாடுகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்துகிறது.

Huawei இந்த 2022 ஆம் ஆண்டில், ASEAN அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக பிராந்திய திறமையாளர்களின் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக, Huawei Asia-Pacific Seeds for the Future 2022 எனும் CSR திட்டத்தின் நீடிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. இது தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த உலகத் தரம் வாய்ந்த இளங்கலை பட்டத்தை தொடரும் மாணவர்களை 8 நாட்கள் ICT பயிற்சி மற்றும் வழிகாட்டலுக்காக ஒன்றிணைக்கிறது. இது சமீபத்திய நாட்களில் முதல் முறையாக பெங்கொக்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியானது 2022 ஓகஸ்ட் 19 முதல் 28 வரை இடம்பெறவுள்ளதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு 2022 ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 04 வரை சிங்கப்பூரில் இதன் இரண்டாம் பகுதியும் இடம்பெறவுள்ளது.

இந்த அறிமுக விழாவில் உரையாற்றிய கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, “உலகில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில், நாடுகளுக்குள் உள்ள அறிவு மற்றும் டிஜிட்டல் ரீதியான பிளவுபாடு மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அந்நாடுகளின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களின் திறமைகள், திறன்களை பூர்த்தி செய்வதற்கான முன்கூட்டிய அழைப்பாக கருதலாம். கல்வியில் திறமை மேம்பாடு என்பது இலங்கை போன்ற நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாக அமைய வேண்டும்.” என்றார். எப்போதும் சவாலான உலகளாவிய திறமையாளர்களைக் கொண்ட சந்தைக்கு முகம் கொடுக்கும் போது அறிவு மற்றும் திறன் இடைவெளியை குறைப்பதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் ICT திறன்கள் மற்றும் திறமை மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றில் Huawei நிறுவனம் முழு மூச்சுடன் செயற்படுவதைக் கண்டு நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். “எதிர்காலத்திற்கான விதைகள்” திட்டத்தின் Huawei யின் தொடர்ச்சியானது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கும் மக்களுக்கும் இடையே கருத்து பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும் என்று நான் நம்புகிறேன். இது இலங்கையின் இளைஞர் தலைமுறைக்கு மிக அவசியமானதுமாகும். டிஜிட்டல் திறன்கள் மற்றும் பயன்பாடுகளை ஆராய்ந்து அவர்களின் கற்றலை ICT இன் உற்சாகமான புதிய பகுதிகளுக்குள் கொண்டு செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்றார்.

இந்நிகழ்வில் Huawei Sri Lanka Tao Guangyao கருத்து வெளியிடுகையில், “நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொருளாதார செழிப்புக்கான வெற்றிக்கான முக்கிய கூறுகளில் ICT திறமையும் ஒன்றாகும். இளம் திறமையாளர்களுக்கு சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதும், புதிய அறிவு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் முக்கியமாகுமென Huawei நம்புகிறது. எதிர்காலத்திற்கான விதைகள் திட்டத்தின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க உலகளாவிய திறமையாளர்களை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும். எனவே இன்று இங்கு அமர்ந்திருக்கும் உங்களைப் போன்ற திறமைசாலிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு உத்வேகத்தை அளித்து, உலகின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யுமென நான் நம்புகிறேன்.” என்றார்.

End

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *