Quickee.lk: இலங்கையின் இணைய வர்த்தக சந்தை துறையில் இணையற்ற சேவைகளுடன் புதியதோர் ஆரம்பம்

இலங்கையரின் விருப்பத்திற்குரிய டிஜிட்டல் சந்தையான Quickee.lk, தற்போது புதிய பரிணாமத்துடன், பன்முக பிரத்தியேக விநியோக சேவைகளை  விரிவுபடுத்தியுள்ளது. இது முற்றுமுழுதாக புதிய தோற்றத்துடன்,  மேம்படுத்தப்பட்ட வர்த்தகநாமமாக, குடும்பங்களுக்கு அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கும் நோக்குடன் மீளுருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகளை கொண்ட Quickee.lk ஆனது, துரித வேகத்தை தன் அடையாளமாக கொண்ட விலங்கான சிறுத்தையை, அதன் புதிய இலச்சினையாக வடிவமைத்துள்ளது. இன்றைய வாடிக்கையாளர்கள், செலவுகள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் அதிக செளகரியத்தையும் சேமிப்பையும் முதன்மையாக எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்குணர்ந்த இந்நிறுவனம், நாட்டிலுள்ள எந்தவொரு வீட்டிற்கும் அதன் சக்தி வாய்ந்த ‘Convenience Delivered’ (‘செளகரியம் உங்கள் கையில்’) எனும் வாக்குறுதியை Quickee.lk (குய்க்கீ.lk) எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை இப்புதிய மறுசீரமைப்பு உள்ளடக்கியுள்ளது.

Quickee.lk, இத்தகைய ஒப்பற்ற விநியோக சேவையை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய காரணம், இலங்கையில் சொந்த விநியோகப்படுத்தல் வலையமைப்பைக் கொண்ட ஒரே ஒன்லைன் சந்தை என்பதாலாகும். ஏனைய உள்நாட்டு ஒன்லைன் சந்தைகளிடம் இல்லாத, இறுக்கமான தொடர் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பைப் பெற்றதனால் ஒப்பற்ற நன்மையை Quickee.lk வழங்குகிறது. இதன் மூலம், பொருட்கள் சிறந்த முறையில் பாதுகாப்பாக கையாளப்படும் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. குளிர்சாதனப் பெட்டி போன்ற பாதுகாப்பான பொருட்கள் முதல்  துரித உணவுகளை கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்து வகையான தெரிவுகளையும் மற்றும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் Quickee.lk  ஒன்லைன் வணிக சந்தையானது விளங்குகிறது.

இன்றைய காலகட்டத்தில், வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே ஒன்லைன் வலைத்தளமாக Quickee.lk  மாறியுள்ளது. மீள் வடிவமைக்கப்பட்ட Quickee.lk வர்த்தகநாமம், அதன் வலைதளத்தின் மூலம், மின் உபகரணங்கள், கையடக்க தொலைபேசிகள், பலசரக்குப்பொருட்கள், மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்கள், இலத்திரனியல் சாதனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், கேக்குகள், பூங்கொத்து, குழந்தைகளுக்கான பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், உணவு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு வகையான விற்பனை பொருட்களை கணிசமான அளவில் தன்னகத்தே கொண்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனைகளை ஊக்குவிக்கும் வகையில், Quickee.lk வலைத்தளம், வாடிக்கையார்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் நம்பகத்தன்மையுடன் இரு தரப்பினருக்கும் லாபகரமான சந்தை வாய்ப்பை வழங்குகிறது. தன் வலைதளத்தில் தரமான விற்பனையாளர்களை கொண்டு வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யக்கூடிய திறனை கொண்டுள்ளது.

Quickee.lk தன் வலைதளத்தில், புதிய விற்பனை பொருட்களை உள்ளடக்கியதோடு, புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக சேவைகள், மருந்து பொருள் போன்ற தேவைக்கான உடனடி சேவைகள், கால வரையறையற்ற விநியோக வசதிகள் போன்ற சிறந்த, இணையற்ற சேவை வகைகளை வழங்குகின்றது.

Quickee.lk நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, திரு. சமி அக்பர் அவர்கள் இது தொடர்பில் குறிப்பிடுகையில், “Convenience Delivered (செளகரியம் உங்கள் கையில்) எனும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மிகவும் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்ற சவால்மிக்க நோக்குடன், ஒவ்வொரு இலங்கையருக்கும் பிரத்தியேக சேவைகளை வழங்கி ஒரே கூரையின் கீழ் அனைத்தையும் வழங்கும் ‘One Stop Shop’ வர்த்தக நாமமாக திகழ்கின்றோம். ‘Quickee Concierge’ என்பது இலங்கையில் மிகவும் வேலைப் பளுவுடன் பணிபுரிபவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு புத்தாக்கம் கொண்ட விநியோக சேவையாகும். ‘Quickee Concierge’ ஆனது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்களுக்கு தேவையான பொருட்களை நேரடியான ஷொப்பிங் உதவியாளர் சேவை மூலம் பெற்று கொள்ளலாம்.  இச்சேவையானது தினமும் அதிகாலை 3 மணி வரை வழங்கப்படுகின்றது. ஒரு Quickee.lk சேவை உதவியாளர், உங்கள் ஷொப்பிங் பட்டியலை பெற்று, உங்கள் சார்பில் பல்வேறு கடைகளுக்குச் சென்று, அவற்றை கொள்வனவு செய்வதுடன், அவற்றை ஒரே நேரத்தில் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார். இதன் மூலம் நீங்கள் உங்கள் நேரத்தை மீதப்படுத்தலாம் என்பதுடன், இதன்போது உங்களது முக்கியமான விடயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது. Quickee.lk மட்டுமே தற்போது இலங்கையில் இந்த சேவையை வழங்கும் ஒரேயொரு ஒன்லைன் சந்தையாகும்.” என்றார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “Quickee SoS  ஆனது, மற்றுமொரு புதிய சேவையாகும், உங்கள் ஷொப்பிங் அல்லது வீட்டுத் தேவைகளில் திடீரென்று அவசர நிலையை எதிர்கொள்ளும் போது இது உதவியளிக்கிறது. நள்ளிரவில் உங்கள் குழந்தைக்கு டயபர்கள் தீர்ந்துவிட்டாலோ, குடும்பத்தினதுக்குக்கு தேவையான மருந்து பொருட்கள் அல்லது ஏதேனும் அவசர தேவை ஏற்படின் உடன் வழங்கும் சேவையை Quickee.lk  வழங்குகிறது. உடனே Quickee Call Center இற்கு உங்கள் தேவையை அறிவிக்கவோ அல்லது Whatsapp செய்யவோ முடியும்.. எமது SoS சேவையானது, உங்கள் தேவையை உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கும். இத்தகைய பிரத்தியேக சேவைகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம், இலங்கையில் தற்போதுள்ள எந்தவொரு விநியோக சேவைகளுக்கும் இணையற்றது என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த புத்தாக்க சேவைகள் அனைத்தும் Quickee.lk இன் நோக்கமான, வாடிக்கையாளர்களின் முக்கியமான தருணத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் ‘One Stop Shop’ வர்த்தகநாமமாக அது மாறச் செய்யும்” என்றார்.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சைஃப் யூசுப் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ” இலத்திரனியல் வணிகம் என்பது மிகவும் போட்டித்தன்மை நிறைந்து காணப்பட்டாலும், எந்தவொரு தரமான விற்பனையாளர்களுக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் Quickee.lk திகழ்கிறது. எமது தனித்துவமான விநியோக சேவைகள் மூலம், பல்வேறுபட்ட பொருட்தெரிவுகள்; நுகர்வோரின் வீட்டு வாசலுக்கு, அவர்கள் விரும்பும் நேரத்தில், அவர்கள் விரும்பும் நாளில் வந்து சேரும் என்பதை நாம் உறுதியளிக்கிறோம்.” என்றார்.

வாடிக்கையாளர்களுக்கான துரித சேவைகளை வழங்கும் நோக்கில், மு.ப. 9.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.00 மணி வரை செயற்படுவதுடன், இது ஏனைய தொலைபேசி சேவைகளைப் போன்று தானியங்கி பதிலளிப்பு தொகுதியல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பயிற்சி பெற்ற தொலைபேசி வாடிக்கையாளர் முகவர்களை நாம் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். அவர்கள் அனைத்து வாடிக்கையாளர் அழைப்புகளுக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிப்பதோடு, விநியோக செயன்முறையின் ஆரம்பம் முதல் இறுதி வரை அழைப்பாளர்களுக்கு உதவுவார்கள். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிறந்த ஒரு அனுபவத்தை பெறுவார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். ‘Convenience Delivered’ என்பதன் அடிப்படையில் எந்நேரத்திலும் அவர்களின் தயாரிப்புகளை பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க நாம் தயாராக உள்ளோம். உள்நாட்டு வணிக நிறுவனம்  எனும் அடிப்படையில், புத்தாக்க நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், தங்கள் தயாரிப்புகளை, மிகப் பெரும் வாடிக்கையாளர் தளத்துடன் இணைப்பதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும் நாம் உதவியளிக்க விரும்புகிறோம்.” என்றார்.

வாடிக்கையாளர்கள் Google Play Store, Apple App Store மூலம் Quickee.lk கையடக்கத் தொலைபேசி செயலியை பதிவிறக்கலாம். அவர்களால் செயலியை பயன்படுத்த முடியாத நிலையிலும் கூட, Quickee.lk இணையத்தளம், Quickee.lk உடனடி தொலைபேசி அல்லது Whatsapp மூலம் அழைத்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்று கொள்ளலாம். மேலும் பணம் செலுத்துதவற்காக, பல்வேறு கொடுப்பனவு வழிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  அதுமட்டுமல்லாது பொருட்களை பெற்றுக்கொள்ளும் பொது பணமாகவோ அல்லது கடன் வரவு அட்டை மூலமாகவோ கட்டணங்களை செலுத்தலாம். மேலும்,  வங்கி பணப்பரிமாற்றம், ஒன்லைன் கட்டண செலுத்துகை, QR கட்டண செலுத்துகை போன்ற பல்வேறு தெரிவுகளைக் ​​Quickee.lk கொண்டுள்ளது.

Quickee.lk பற்றி

Quickee.lk ஆனது 2013 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து, இன்று Expolanka Holding PLC இற்கு முழுமையாக உரித்துடைய துணை நிறுவனமாகும். சௌகரியத்தை அடிப்படையாகக் கொண்ட இலத்திரனியல் வணிகத்துறை, விற்பனை மற்றும் விநியோக பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள Quickee.lk ஆனது, இலங்கையின் இணைய வர்த்தத்தில் ஒரு புதிய பரிணாமத்துடன் மாபெரும் நிறுவனமாக மாற்றமடைந்து, நாட்டில் உள்ள எந்தவொரு வடிக்கையாளருக்கும் சேவை வழங்க தயார் நிலையில் உள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *