உங்கள் சருமத்திற்கு அதிக ஊட்டத்துடனான புதிய சவர்க்காரத்தை அறிமுகப்படுத்தும் Velvet

ஒருவரின் சுகாதார நடைமுறைகளில் சருமப் பராமரிப்பு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. நாம் பயன்படுத்தும் சவர்க்காரம் நமது சருமத்தின் ஆரோக்கியம், போசாக்கு மற்றும் எமது உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே, இலங்கையின் முதல் இடத்திலுள்ள அழகு சவர்க்காரமான Velvet, சரும வரட்சி மற்றும் பொலிவற்ற தன்மையை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான ஊட்டத்தை வழங்கும் புதிய வகை சோப்பை அறிமுகப்படுத்தி, மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. Hemas Consumer Brands நிறுவனத்தின் தனித்துவமான அழகு சவர்க்கார வர்த்தகநாமமான Velvet, பல ஆண்டுகளாக அதன் புத்தாக்கமான தயாரிப்புகள், தொழில்துறையில் முன்னணி வாய்ந்த தொழில்நுட்பம், தொழில்துறை தரத்தில் அமைந்த, மாறாத தரத்துடன் வலுவான நிலைப்பாட்டின் மூலம் அழகுத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வர்த்தக நாமமானது, இலங்கை பாவனையாளர்களின் சருமப் பராமரிப்புத் தேவைகளுக்கு எப்போதும் முன்னுரிமையளித்து வருவதுடன், அதன் முக்கிய சவர்க்கார வகைகளுக்கு புத்துயிரளித்து அதன் அழகு சவர்க்கார தயாரிப்பு வகைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Velvet சவர்க்கார வகைகள், உங்கள் சருமத்திற்கு மேலதிக ஊக்கத்தை அளிக்கிறது. விற்றமின் B போன்ற சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பொருட்களால் செறிவூட்டப்பட்டுள்ள இது, உங்கள் சருமத்தை 6 மணி நேரம் வரை, புத்துணர்ச்சியுடனும் ஈரப்பதனுடனும் வைத்திருக்க உதவுகின்றது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த சவர்க்காரமானது விற்றமின்கள், கனியுப்புகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களால் செறிவூட்டப்பட்டு ஆரோக்கியமான, மென்மையான, மிருதுவான சருமத்தை வழங்குகிறது.

புதிய ‘Moistureboost’ மற்றும் விற்றமின் மூலப்பொருட்கள், ஈரப்பதன் மற்றும் மீள்தன்மை கொண்ட சருமத்தை அடைய உங்களுக்கு உதவுகின்றன. ஈரப்பதனை அதிகரிக்கும் செயற்படுத்திகள் ஈரப்பதனைக் கொண்ட சருமத்தை வழங்குகின்றன. இந்த இயல்பானது பெரும்பாலான சவர்க்காரங்களை விட மிக நீண்ட நேரத்திற்கு நீடிக்கின்றதோடு, இது ஒரு ஆரோக்கியமான சருமத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். Velvet ஆனது, இரட்டை மூலப்பொருட்களை அறிமுகப்படுத்திய முதலாவது வர்த்தகநாமமாக இருப்பதால், சருமத்தால் விரும்பப்படும் நன்மைகளை மேம்படுத்துவதற்காக அதன் மூலப்பொருட்கள் மிகக் கவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. Velvet இன் புதிய ‘Moringa and Rice Milk’ (முருங்கை மற்றும் அரிசிப் பால்) வகை சவர்க்காரமானது, இலங்கையில் முதன்முதலாக தயாரிக்கப்படுவதோடு, Velvet சவர்க்காரத்தில் பயன்படுத்தப்படும் இந்த மூலப்பொருட்கள் ஒவ்வொன்றும் 100% இயற்கையானதும் சருமத்திற்கு தேவையான ஈரப்பதன் மற்றும் போசணையை வழங்குகிறது.

கட்டுப்படியான விலை என்பது நுகர்வோருக்கு மிக முக்கியமான தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் இத்தருணத்தில், Velvet அழகு சவர்க்காரமானது, தனது ஆரம்பத்திற்கு உண்மையாக இருந்து, பெரும்பாலான உயர்வகை இறக்குமதி சவர்க்காரங்கள் மற்றும் சருமத்தை சுத்தப்படுத்தும் தீர்வுகள் மாத்திரம் கொண்டுள்ள அம்சத்தை வழங்குகிறது. இலங்கையின் நுகர்வோரின் தேவைகளைப் புரிந்து கொண்ட வர்த்தகநாமம் எனும் வகையில், தோல் வரட்சி மற்றும் பொலிவற்ற தன்மை போன்ற சருமப் பராமரிப்பு தொடர்பான பிரதான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அது தனது தயாரிப்புகளை வடிவமைத்துள்ளது.

Velvet, பல ஆண்டுகளாக சரும மருத்துவ அங்கீகாரம் பெற்ற இலங்கையின் ஒரேயொரு அழகு சவர்க்கார வர்த்தகநாமமாக அதன் அந்தஸ்தை பேணி வருவதோடு, சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தாது என மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் Velvet அதன் தரத்தில் மாறாமல், கொடுக்கும் பணத்திற்கான சிறந்த அழகு சவர்க்கார வர்த்தகநாமமாக தன்னை நிலைநிறுத்த உறுதி பூண்டுள்ளது. Velvet சவர்க்காரம், பொடி வொஷ், ஹேண்ட் வொஷ், பொடி லோஷன் உள்ளிட்ட பரந்த தயாரிப்பு வகைகளை கொண்டு வருகிறது. இவை யாவும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப மிக உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து Velvet தயாரிப்புகளும் NMRA, GMP, IFRA சான்றிதழ்களைக் கொண்டுள்ள அதே நேரத்தில், தனது தயாரிப்புகளில் மிருதுவான வாசனைத் திரவியங்களை கொண்டுள்ளது என Velvet பெயர் பெற்றுள்ளது. மேற்படி அனைத்து நன்மைகள் மற்றும் நற்சான்றிதழ்களை கொண்டுள்ள Velvet வர்த்தகநாமத்தின் பயணம் எப்போதும் நுகர்வோரின் இதயத்துடன் இணைந்தவாறு தொடர்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *