DIMO Lighting Solutions இலங்கையின் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒளியூட்டுகிறது

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், கட்டட முகாமைத்துவம், திரவ முகாமைத்துவம், பொது பொறியியல் தீர்வுகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த ஒரு முனையிலிருந்து மறு முனைக்கான இறுதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவதோடு, இத்துறையில் முன்னணியில் திகழ்கின்றது.

DIMO Lighting Solutions மூலம், பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை ஒளிரச்செய்வதற்கான அதிநவீன தீர்வுகளை வழங்குவதன் மூலம், DIMO நாட்டிலுள்ள லைட்டிங் தீர்வுகளின் முன்னணி வழங்குனராக வேகமாக வளர்ந்து வருகின்றது. விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், பார்வையாளர் அரங்குகள் அத்துடன் பெரிய அளவிலான வணிக கட்டடங்கள் போன்றன இதில் அடங்குகின்றன. DIMO Lighting Solutions ஆனது, மக்கள் வசிக்கின்ற, வேலை செய்கின்ற, பயணம் செய்கின்ற, விளையாடுகின்ற, ஓய்வெடுக்கின்ற இடங்களில் மனதுக்கு இதமான காட்சி விளைவுகளை உருவாக்கும் வகையிலான வணிக ரீதியான செயற்பாட்டை மேற்கொள்கிறது. இங்கு வணிகத் துறை, விருந்தோம்பல் துறை, தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்பு பயன்பாடுகளுக்கான ஒளி வழங்கல் தீர்வுகளை அது வழங்குகின்றது. அதில் வடிவமைப்பு, விநியோகித்தல், நிறுவுதல், சோதனை செய்தல், இயக்குதல் போன்ற விடயங்கள் உள்ளடங்குகின்றன. கட்டடக்கலை, வணிகம், தொழில்துறை, வீதிகள், அரங்கம், கட்டட முகப்பு விளக்கு தீர்வுகள், மின்விளக்கு கட்டுப்பாட்டு தொகுதிகள், சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்டுகள் ஆகியன அதன் தயாரிப்பு வகைகளில் உள்ளடங்குகின்றன. Jung, LEDVANCE (முன்னர் OSRAM), RZB, Trilux, Vossloh Schwabe போன்ற உலகப் புகழ்பெற்ற ஐரோப்பிய வர்த்தக நாமங்களுடன் கூட்டுசேர்ந்துள்ளதன் மூலம், அனைத்து ஜேர்மனிய வர்த்தகநாமங்கள் மட்டுமல்லாது இத்தாலியின் Disano தயாரிப்புகளுடன், சர்வதேச தரத்தில் மிக உயர்ந்த தீர்வுகளை இலங்கையின் DIMO Lighting Solutions வழங்குகின்றது.

தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ள பல DIMO லைட்டிங் திட்டங்களில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பெரிய அளவிலான விளக்கு உட்கட்டமைப்பு திட்டமும் உள்ளடங்குகின்றது. இங்கு விமான ஓடுபாதை தளத்தின் விளக்கு தொகுதியை விநியோகித்தல், நிறுவுதல், அதனை இயக்குதல் ஆகியன உள்ளடங்குகின்றன. இத்திட்டத்தில் புதிய apron floodlighting (ஓடுபாதை இரு மருங்கிலுள்ள மின்விளக்குகள்) தொகுதியை விநியோகித்தல், நிறுவுதல், செயற்படுத்துதல் ஆகியனவும் அடங்குகின்றன. விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டமான, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாரிய வெளிச்ச மின்விளக்குத் தொகுதி மற்றும் வீதி மின்விளக்கு, கட்டட முன்பகுதி மின்விளக்குகளை வழங்குதல், நிறுவுதல், இயக்குதல் ஆகிய பணிகளை, DIMO வின் லைட்டிங் பிரிவு ஆரம்பித்துள்ளது. விமான நிலைய மின்விளக்கு பிரிவில் தனது பணியை விரிவு செய்தவாறு, இரத்மலானை விமான நிலையத்தில் சூரிய சக்தியில் இயங்கும் எளிய வகையிலான LED விமான ஓடுபாதை மின்விளக்கு தொகுதி திட்டத்தின், வடிவமைப்பு, விநியோகம், நிறுவுதல், சோதனை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகள், இப்பிரிவினால் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச தரத்திற்கு அமைய, மிக உயர்ந்த வகையிலான தேசிய உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் மேலும் பங்களிக்கும் வகையில், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் மரைன் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு வீதிகளுக்கு மின்விளக்கு தீர்வுகளை வழங்குவதில் DIMO ஈடுபாட்டுடன் செயற்படுகின்றது. அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் டிஜிட்டல் திரைகளை நிறுவுதல் உள்ளிட்ட, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பல்வேறு திட்டங்களுக்கு, தனது நிபுணத்துவத்தையும் அது வழங்கியுள்ளது.

அதேபோன்று, ஆர். பிரேமதாஸ மைதானம் (முன்னர் கெத்தாராம மைதானம்) மற்றும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம், குதிரைப்பந்தய ரக்பி மைதானம் போன்ற இடங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் DIMO முன்னின்று செயற்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டில், இரவு நேர கிரிக்கெட் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், ஆசியாவில் இரவுநேர மின்விளக்குத் தொகுதி அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப மைதானங்களில் ஆர். பிரேமதாஸ மைதானமும் ஒன்றாகும். அந்நேரத்தில், DIMO இன் புகழ்பெற்ற சர்வதேச கூட்டாளர்களின் ஆதரவுடன் முழு மைதானத்திற்கும் இரவு நேர மின்ஒளி தொகுதியை நிறுவ DIMO வின் நிபுணத்துவம் பயன்படுத்தப்பட்டது.

பசுமை கட்டடக் கொள்கைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக வளாகமான NSBM ஆனது, 15,300 இற்கும் மேற்பட்ட மின்விளக்கு நிறுவலைக் கொண்ட, DIMO வின் அதிநவீன விளக்கு தீர்வுகள் மூலம் பயனடைந்த மற்றுமொரு குறிப்பிடும்படியான திட்டமாகும். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் Cinnamon Life திட்டத்திலும் DIMO ஈடுபட்டுள்ளதோடு, இது கொழும்பை பன்முக பொழுதுபோக்கு, கலைநிகழ்ச்சிகள், வணிக அனுபவங்களைக் கொண்ட பிராந்திய மையமாக மேம்பாடடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. Cinnamon Life இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலக வளாகங்களுக்கான உயர்தர விளக்கு நிறுவல்கள் மற்றும் முழுத் திட்டத்திற்குமான லைட்டிங் கட்டுப்பாட்டு தொகுதியுடன் கூடிய நேர்த்தியான சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்டுகளை இப்பிரிவு வழங்குகிறது. இது தவிர ஏனைய குறிப்பிடத்தக்க தனியார் துறை திட்டங்களாக Colombo City Centre, பார்க் வீதியில் உள்ள Parkland Building மற்றும் கெரவலப்பிட்டிய Hemas Logistics Centre ஆகியன அடங்குகின்றன.

DIMO Lighting Solutions தனது சேவைகளை இலங்கையின் எல்லைக்கு வெளியேயும் விரிவுபடுத்தியுள்ளது. மாலைதீவில் உள்ள 3 ஹோட்டல்களுக்கான மின்விளக்கு கட்டுப்பாட்டு தொகுதிகளை அது வழங்கியுள்ளதோடு, உட்புற மற்றும் வெளிப்புற மின்விளக்கு பொருத்துகைகள், கட்டடக்கலை சிறப்பு கொண்ட சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்டுகளையும் அது வழங்கியுள்ளது. ​​மாலைதீவில் உள்ள இரண்டு புதிய ஹோட்டல்களுக்கான மின்விளக்கு கட்டுப்பாட்டு தொகுதிகளை நிறுவும் நடவடிக்கையில் இப்பிரிவு தற்போது செயற்பட்டு வருகிறது.

குழுமத்தின் லைட்டிங் திட்ட வணிகத்தை மேற்பார்வையிடும் DIMO வின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அதிக மின்சார சிக்கன வினைத்திறன் கொண்ட மின்விளக்கு தீர்வுகள் தேவையாக உள்ளன. முன்மொழியப்பட்டுள்ள பல வணிக மற்றும் அடுக்குமாடி கட்டடங்களில், கட்டடக்கலை சிறப்பு கொண்டதும் மின்சக்தி வினைத்திறன் கொண்டதுமான மின்விளக்கு நிறுவல்களின் தேவையே காணப்படுகின்றது. உட்புற மற்றும் வெளிப்புறப் பிரிவுகளில் எமது  சந்தைப் பங்கை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். நாம் சேவைகளை வழங்கும் பிரிவினரின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஊக்கமளிக்கும் எமது நோக்கத்துடன், இலங்கையில் மேலும் பலத்துடனும் உறுதிப்பாட்டுடனும் எம்மால் பயணிக்க முடியும் என்பதுடன் பிராந்திய ரீதியில் எமது முக்கிய திறன்களான வடிவமைப்பு, விநியோகம், நிறுவல், சோதனை செய்தல் மற்றும் உலகப் புகழ்பெற்ற மின்விளக்கு நிறுவல் உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்து. நவீன லைட்டிங் தீர்வுகளை செயற்படுத்தல் ஆகிய எம்மிடம் உள்ள திறன்கள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *