மொரட்டுவை பல்கலைக்கழகம் (UoM) மற்றும் Dhammika & Priscilla Perera அறக்கட்டளை (DP Foundation) இணைந்து கடந்த ஜனவரி 04ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கையெழுத்திட்டதன் மூலம் இலங்கையின் ICT கல்வியில் ஒரு முக்கிய மைல்கல்லான, திறந்த ஒன்லைன் ICT பாடநெறியான development and delivery (வளர்ச்சி மற்றும் விநியோகம்) இனை கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள ICT ஆர்வலர்களுக்கு இலவச கற்றல் மற்றும் ICT அறிவிற்கான வரையறையற்ற அணுகலுக்கான வாய்ப்புகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். DP அறக்கட்டளையானது, அதன் DP Education பிரிவின் ஊடாக, மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியுதவி, உட்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை ஒன்லைன் பாடநெறிக்கு வழங்குவதன் மூலம் இந்த புதிய முயற்சிக்கு உதவும்.
தற்போது, ’University of Moratuwa – BIT Online’ எனும் YouTube சேனலானது, Mathematics for IT, Web Programming, Database Management Systems, ICT Applications போன்ற பாடங்களை கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக செயற்பாட்டில் உள்ளது.
தம்மிக மற்றும் பிரிசில்லா பெரேராவின் ஒரு பரோபகார முயற்சியான DP அறக்கட்டளையானது, அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கும், ஒவ்வொரு இலங்கையரினதும் திறன்களை மேம்படுத்துவதற்குமாக, இலங்கையின் மிகப்பெரிய இலவச ஒன்லைன் கற்றல் தளமான DP Education இனை உருவாக்கியுள்ளது.
DP Education பற்றிய மேலதிக விபரங்களுக்கு: https://www.dpeducation.lk