Pelwatte Dairy 2021 வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் ஊழியர்களுக்கு கௌரவம்

இலங்கையின் மாபெரும் பால் உற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited (PDIL), 2020/2021 இற்கான அதன் ஊழியர்களின் செயல்திறன் சிறப்பை கௌரவிக்கும் ‘PDIL Award Ceremony 2021’ (‘PDIL விருது விழா 2021’) விழாவை அண்மையில் கொண்டாடியது. இந்த மாபெரும் நிகழ்வில் 2020/2021 இல் வலுவான செயல்திறனை காண்பித்த, அர்ப்பணிப்பான 120 பணியாளர்கள் பாராட்டி பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிறுவனத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் செயல்பாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் இக்கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வெற்றிகரமான விருது வழங்கும் விழாவில், கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியில், 2020/2021 இல் பெல்வத்தவிற்கு உயர் பெறுபேறுகளைக் கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்பாக செயற்பட்டமை தொடர்பான ஊழியர்களின் செயல்திறன் பிரிவில், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் வெளிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டன.

Pelwatte Dairy, மனித வள முகாமையாளர் ஹர்ஷன் ஜீவகுமார இது தொடர்பில் தெரிவிக்கையில், “எம்மைப் பொறுத்தவரையில் எமது மனித வளம் முதன்மையானது. இவ்விழாவில், கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் எமக்கு உத்வேகம் அளித்து எம்மை முன்னோக்கிக் கொண்டு சென்ற எமது ஊழியர்களுக்கு நாம் விருதுகளை வழங்கினோம். தொற்றுநோய்க்கு மத்தியிலும், எமது ஊழியர்கள் காண்பித்த அர்ப்பணிப்புக்கு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். 2020/21 இல், எமது பல்வேறு தயாரிப்பு வரிசைகள் விற்பனை இலாபத்தில் அதிகரிப்பைக் காண்பித்தன. இதன் விளைவாக, நிறுவனத்தின் மொத்த இலாபம் 2019/2020 உடன் ஒப்பிடுகையில் 180% வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதே காலகட்டத்தில், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 148% ஆக அதிகரித்துள்ளது. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நிறுவனத்தின் மொத்த பால் பண்ணை விவசாயிகளின் எண்ணிக்கையை முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 16% ஆக அதிகரித்து, 6,500 ஆக உயர்த்தியுள்ளது. இவ்வாறாக இந்த ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஊழியர்களை வாழ்த்துவதோடு, வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முன்மாதிரியான செயல்திறன் மற்றும் அதன் மூலமான ஒளியானது, 2020/2021 இல் எமக்கு மிக பிரகாசத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

சிறந்த தொழிற்சாலை இயக்குபவர், சிறந்த பால்வள அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறந்த விற்பனைப் பிரதிநிதி, சிறந்த தர உறுதி ஆய்வாளர், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர், சிறந்த சாரதி, சிறந்த பால் சேகரிப்பு மைய பொறுப்பாளர், சிறந்த விற்பனை நிலைய பொறுப்பாளர், சிறந்த விற்பனை பிரதேச முகாமையாளர் ஆகிய செயல்திறன்களுக்கான விருதுகள் இதன்போது வழங்கப்பட்டன.

‘மனித வளம் முதன்மையானது’ எனும் புரிதலுடன், பெல்வத்த நிறுவனம் அதன் ஊழியர்களின் முன்னேற்றம், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. பெல்வத்தவின் கொவிட்-19 தடுப்பூசி செயற்பாட்டின் முன்னெடுப்பும் இதில் அடங்குகின்றது. அனைத்து ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பால் பண்ணை விவசாயிகள், பங்குதாரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, கொவிட் தொற்றின் ஆரம்பத்தில் இருந்தே நிறுவனம் கடினமான சுகாதார வழிகாட்டல்களை செயல்படுத்தி வந்துள்ளது. அவ்வப்போது வாராந்த ரெபிட் அன்டிஜென் சோதனைகளும் நடத்தப்பட்டன. ஊழியர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது போட்டுள்ளதுடன், அவர்கள் பெல்வத்த வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் COVID-19 சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடித்தனர். அவர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், ஊழியர்கள் மன அமைதியுடன் பணிக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

பெல்வத்த, இதுவரை தேசிய பால் விநியோகச் சங்கிலியில் பங்களிக்கும், 10,000 பால் பண்ணை விவசாயிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய குடும்பங்களுக்கு உதவி வருகின்றது. உண்மையில், கொவிட் தொற்றுநோய் காரணமான பாதிப்பை எதிர்கொண்ட 2020/2021 காலப்பகுதியில், பெல்வத்த விவசாயிகளின் வருமானம் 70% அதிகமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிச்சயமற்ற காலகட்டங்களில் நிறுவனத்தின் மீளெழுச்சியானது, அதன் உற்பத்திச் செயன்முறையை எவ்வித குறுக்கீடுகளும் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்தது. ஒரு சில பிரிவுகளில் அதன் உற்பத்தி வெளியீடானது இரட்டிப்பாகவும் மாற்றியுள்ளதுடன், இதன் மூலம் 2020/2021 ஆனது பெல்வத்தவிற்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *