மாலேயின் வெலேனா சர்வதேச விமான நிலையத்தின் எலவேட்டர், எஸ்கலேட்டர் மற்றும் மூவிங் வோக் செயற்திட்டத்தை தனதாக்கி மேலுமொரு முக்கிய மைல்கல்லை அடைந்த DIMO

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, மாலேவின் வெலேனா சர்வதேச விமான நிலையத்தில் எலவேட்டர்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் மூவிங் வோக்ஸ் போன்றவற்றை விநியோகம் செய்யும், பொருத்தும் மற்றும் பராமரிப்புக்கான செயற்திட்டத்தை தனதாக்கியதன் மூலம் சர்வதேச அரங்கில் மேலுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களுக்கான உலகின் முன்னணி நிறுவனமான ஜேர்மனியின் TK Elevator ( thyssenkrupp என அறியப்படும்) இன் தனித்துவமான தயாரிப்பு வரிசைகளுடன் இந்த செயற்திட்டத்தில் DIMO  ஈடுபட்டுள்ளது. TK Elevator உடனான DIMOவின் பங்குடைமையானது, 2018 இல் இந்த உலகத்தரம் வாய்ந்த மொபிலிட்டி தீர்வுகள் வழங்குநருக்காக இலங்கை மற்றும் மாலைத்தீவில் DIMO ஏக விநியோகஸ்தராகவும், பொருத்துதலுக்காகவும் மற்றும் சேவை வழங்குநராகவும் நியமிக்கப்பட்ட போது ஆரம்பமாகியது. இந்த பங்குடமையானது இலங்கை மற்றும் மாலைத்தீவு சந்தைகளில் நகர்ப்புற பெயர்ச்சியில் சிறந்ததை அடையாளப்படுத்துகிறது. அன்றிலிருந்து, DIMOவினால் அன்றாட பெயர்ச்சி தேவைகளை ஊக்குவிக்கும் நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு நாளும் மக்களின் வாழ்க்கையை வெற்றிகரமாக மேம்படுத்த முடிந்துள்ளது. தொழில்துறையில் சிறந்த திறமைகளை ஈர்ப்பதன் மூலமும், அவர்களுக்கு TKE வளாகத்தில் பயிற்சியளிப்பதன் மூலமும் திறமையான குழுவை DIMOவினால் உருவாக்க முடிந்தது. இந்த நிபுணர்கள் குழுவானது நகர்ப்புற பெயர்ச்சி பரப்பில் உள்ள எந்தவொரு சிக்கலான திட்டத்தையும் பூர்த்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த மிகக் குறுகிய காலத்தில் இலங்கையின் TKE சந்தைப் பங்கை கணிசமாக அதிகரிக்க முடிந்தமை ஒரு பெரிய முன்னேற்றமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், வெலேனா சர்வதேச விமான நிலையத்திற்கு 23 எலவேட்டார்கள், 14 எஸ்கலேட்டர்கள் மற்றும் 04 ஹொரிசொண்டல் மூவிங் வோல்க்ஸ் ஆகியவற்றை DIMO வழங்கும். இந்த செயற்திட்டமானது மாலைத்தீவின் மிகப்பெரிய பெயர்ச்சி தொடர்பான செயற்திட்டங்களில் ஒன்றாகும். மேலும் மாலைத்தீவில் உள்ள மூன்று செயற்திட்டங்களில் இதுவும் ஒன்றாகும், இதில் மூன்று வகையான போக்குவரத்து முறைகள் உள்ளன – எலவேட்டர்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் மூவிங் வோக்ஸ் என்பனவாகும்.

DIMO வின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர், ரஞ்சித் பண்டிதகே, “இலங்கையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் DIMO முன்னணியில் உள்ளதுடன், அண்மையில் நாங்கள் கரையை தாண்டி எங்கள் சேவைகளை விரிவுபடுத்தி முன்னேறுகின்றோம். வெலேனா சர்வதேச விமான நிலைய செயற்திட்டமானது இலங்கைக்கு வெளியே எங்கள் அண்மைய திட்டமாகும்.”

“இலங்கைச் சந்தையில் இருந்து சிறந்த பொறியியல் திறமைகளை ஈர்க்கும் அதே வேளையில், திட்டப் பணிகள் சுமூகமாகவும், திறமையாகவும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, DIMO ஆனது மாலேவில் அலுவலகத்தில் ஒரு திட்ட அலுவலகத்தை அமைக்கவுள்ளது. மாலேயில் இந்த புதிய திட்ட அலுவலகத்தை நிறுவுவதன் மூலம், மாலைத்தீவில் சந்தை வாய்ப்புகளைப் பெறவும் விற்பனை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் DIMO எதிர்பார்க்கின்றது”, என  DIMOவின் பணிப்பாளர் விஜித் புஷ்பாவெல தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் முக்கிய ஒப்பந்ததாரர் சவுதி பின்லாடின் குழுமமாகும், இது சவுதி அரேபியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பல்தேசிய கட்டுமான நிறுவனமாகும். இதன் துணை ஒப்பந்ததாரர் சீனா துறைமுக பொறியியல் நிறுவனம் (CHEC) ஆகும். “கட்டுமான சேவைகள்” பரப்பில் மேற்கொண்டுள்ள செயற்திட்டங்கள் மற்றும் DIMOவின் தொழில்நுட்ப நிபுணத்துவம், உலகளாவிய விமான நிலைய திட்டங்களில் பெயர்ச்சி தொடர்பான தீர்வுகளை வழங்குவதில் TK Elevator நிறுவனம் கொண்டுள்ள சந்தையில் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்து போன்றன இந்த பாரிய செயற்திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான காரணியாக அமைந்தது. விற்பனைக்கு முன்னரான காலப்பகுதி, ஒப்பந்தம் மற்றும் செயல்படுத்தும் படிநிலைகள் முழுவதும் அதன் முதன்மை நிறுவனமான TK Elevator  நிறுவனத்திடமிருந்து DIMOவுக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்பட்டது.

மாலைத்தீவில் சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரேயொரு நுழைவாயிலாக விளங்கும் வெலேனா சர்வதேச விமான நிலையம் Maldives Airports Company Limited (MACL) எனப்படும் ஒரு சுயாதீன நிறுவனத்தால் நிதி மற்றும் நிர்வாக ரீதியாக நிர்வகிக்கப்படுகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *