V21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்

vivo தனது பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த வி சீரிஸ் தொகுதியின் ஒரு பகுதியாக, செல்பிக்களை மறுவரையறை செய்வதில் பரவலாக அறியப்படும் இரவு செல்பி சென்ட்ரிக் வி 21 சீரிஸை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறுபட்ட மக்கள் குழுக்கள் மற்றும் அவர்களது தேவையை பூர்த்திசெய்யும் வகையில், V21 சீரிஸ் பிரமிக்கவைக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் வருகின்றது. V21 5G என்பது நவநாகரீக தோற்றங்கள் மற்றும் அம்சங்களை விரும்பும் பயனர்களுக்கான ஒரு அதிநவீன சாதனமாகும். அத்தோடு, காலத்தோடு ஒன்றித்து செல்லும் வகையில் அவர்களது தேவையை பூர்த்திசெய்கின்றது. குறிப்பாக, V21e என்பது புதுமையான, ஆற்றல்மிக்க மற்றும் இயல்பானதாகும்.

தொலைபேசி  தொழிநுட்பத்தின் பரிணாம வளர்ச்சிக்கு vivo பெரும்  பங்களிப்பு செய்கிறது. இதனுள்ளேயே அமையப்பெற்ற செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு (AI), இரவு நேரத்தில் புகைப்படம் எடுக்கும் போது ஏற்படும் சிக்கல்களை விவோவின் V21 5G தொழில்நுட்பம் மிகவும் துல்லியமாக கையாள்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் OIS என அழைக்கப்படும் ஒளி மூலம் புகைப்படத்தை உறுதிப்படுத்தும் தொழிநுட்பமும் முன்பக்க கெமராவில் பொருத்தப்பட்டுள்ளது. தொலைபேசி வரலாற்றில் இந்த தொழிநுட்பத்தை தன்னகத்தே கொண்ட பெருமை vivoவையே சாரும். புகைப்படம் எடுக்கும் போது ஏற்படும் தெளிவற்ற மற்றும் மங்கலான தன்மை இந்த OIS வன்பொருள் தொழிநுட்பத்தின் மூலம் தவிர்க்கப்படுகின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள gyroscope அமைப்பு,  அசைவுகளை கண்டறியும் அதேவேளை இதில் உள்ள Micro-Electro-Mechanical System (MEMS) அமைப்பானது புகைப்படம் பிடிக்கும் போது கைகள் அசைவதால் ஏற்படக்கூடிய தெளிவின்மையை தவிர்க்க உதவி புரிவதோடு குறித்த பதிவு கட்டமைப்புக்குள் இருப்பதையும் உறுதி செய்கின்றது.

அத்துடன் விவோ V21 5Gயின் 44MP OIS அமைப்பு, செல்பி ஸ்பொட்லைட் மற்றும் AI Night Portrait ஆகியவற்றுடன் இரவு நேரத்தில் தெளிவான செல்பி எடுப்பதற்கு ஏற்ற வகையிலான மூலோபாயத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை இதன் மிக முக்கிய அம்சமாக காணப்படுகின்றது. ஏனெனில், இதன் முன்பக்க கமராவில் உள்ள 44 MP OIS தொழிநுட்பமானது ஸ்பொட்லைட் ஒளியின் துணைகொண்டு பின்னணியில் காணப்படும் தெளிவற்ற தன்மையை குறைத்து, ஒளியற்ற இடங்களில் நேர்த்தியான புகைப்படங்களை எடுக்க உதவுகின்றது. Vivoவின் மிகமுக்கிய மற்றும் திறன்வாய்ந்த பண்பாக இந்த ஸ்பொட்லைட் விளங்குகிறது. காரணம், இதன் முன்பக்க பெனலில் உள்ள இரண்டு OLED மின்விளக்குகள் இரவு நேரங்களில் தெளிவான மற்றும் நேர்த்தியான புகைப்படங்களை எடுப்பதற்கு பேருதவி புரிகின்றன .

V21 5Gஇல் காணப்படும் தனித்துவமான கெமரா தொழிநுட்பம் காரணமாக அதன் பயனர்கள் இரவுநேரத்தில் சிறந்தமுறையில் செல்பி எடுத்து மகிழ்வர். AI Night Portraitஆனது, multi-frame noise reduction algorithm முறையை பயன்படுத்தி இரவுநேர புகைப்படத்தை மேம்படுத்துகின்றது. ஸ்மார்ட்போனின் இருபுறமும் வீடியோக்களைப் பதிவுசெய்யும் Dual-View வீடியோ, குழந்தையை அடையாளப்படுத்தும் வழிமுறையை பயன்படுத்தும் Child Face Beauty அம்சம் மற்றும் பயனர்களுக்கு அவர்களது தனித்துவமான தோல் பண்புகளை வெளிப்படுத்த உதவும் Personal Facial அம்சம் உள்ளிட்ட விடயங்களுடன் V21 5G அறிமுகமாகின்றது. Head Slimming அம்சமானது, பின்னணியை மேம்படுத்துவதோடு புகைப்படம் எடுக்கப்படுபவரின் தலைக்கும் உடலுக்குமான விகிதத்தை திறனாக கையாள்கின்றது. V21 5Gஇன் முன்பக்க கெமரா கட்டமைப்பின் செயற்திறன்மிக்க நுட்பங்கள் இந்த கைப்பேசி சாதனத்தை முன்னணியில் திகழ வைக்கின்றது.

படம் 3: Child Face Beauty

V சீரஸ்களில் மிக அண்மையில் V21e சேர்த்துகொள்ளப்பட்டது. 44MP Eye Autofocus கெமரா, தெளிவான மற்றும் பிரகாசமான புகைப்படங்களை எடுக்க உதவும் தனித்துவம் நிறைந்த முன்பக்க கெமரா ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. கெமரா கட்டமைப்பை சீர்படுத்தும் சந்தர்ப்பத்தில் முக்கியமான ஒருசில விநாடிகளை தவறவிட்டு, புகைப்படம் எடுப்பதற்கு உகந்த தருணத்தை முழுவதுமாக இழக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகலாம். இந்நிலையில், vivo V21eஇன் 44MP Eye Autofocus, AFஐ பயன்படுத்தி சரியான நேரத்தில் புகைப்படங்களை எடுக்கக்கூடிய மனிதனின் கண்பார்வை கவனம் செலுத்தும் வழிமுறையுடன், பார்க்கும் தூரத்தை இயல்பாகவே சரிப்படுத்தும் உன்னதமான செயற்பாட்டை நிகழ்த்துகின்றது. இதன் தொழிநுட்பமானது, பயனர்கள் நகரும்போதும் அதன் வேகத்தையும் கவனத்தையும் பராமரிக்கின்றது.  

முன்பக்க கெமரா கட்டமைப்பிற்கு ஊடகங்களில் சிறந்த வரவேற்பு காணப்பட்ட நிலையில்,  தனது வடிவமைப்பு மற்றும் செயற்திறன் மூலம் V21 சீரிஸ் நிபுணர்களை கவரக்கூடியதாக உள்ளது. எளிமையான, நெகிழ்வான, திறன்மிக்க ஸ்மார்ட்போன்களுடன் V சீரிஸின் சகல எதிர்பார்ப்புகளையும் சிறந்த முறையில் பூர்த்திசெய்துள்ளது. அதிசிறந்த தரம், அதிகப்படியான அம்சங்கள் நிறைந்து அழகிய தோற்றத்துடன் காணப்படுவதால், நீண்டகாலம் நின்று நிலைக்கும் வகையில் V சீரிஸ் பாவனைக்கு வந்துள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *