Dell Partner Business Conference FY22 மாநாட்டில் Asia Emerging Markets விருதுகளை வென்ற சிங்கர்

குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு வழிவகுத்த Singer Sri Lanka PLC நாட்டின் முதன்மையான நுகர்வோர் பொருட்களின் சில்லறை விற்பனையாளராக திகழ்ந்து,  Dell Partner Business Conference FY22 இல் ஆசியாவில் வளர்ந்து வரும் சந்தை விருதுகளை வென்றுள்ளது (Asia Emerging Markets awards). சில்லறை விற்பனையாளர் விநியோகஸ்தர் பிரிவில் வணிக மற்றும் நுகர்வோர் பிரிவுகளிலும் சிறந்த செயல்திறன் கொண்டதற்காக முடிசூட்டப்பட்டுள்ளது. நாட்டின் முதல்தர கணினிகள் மற்றும் பாகங்கள் வழங்குநராக அதன் எழுச்சியை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Dell Technologies Asia Emerging Markets இன் துணைத் தலைவர் அன்தோய் வெட்டாயகோர்ன், அலைவசரிகள் சிரேஷ்ட பணிப்பாளர் சீ வை சூ,  அலைவரிசை பணிப்பாளர் சரிஸ் பபா.  ஆகியோரின் பங்கேற்புடன் சமீபத்தில் நடைபெற்ற இணைய வழி விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகளை டெல் பிராந்திய அலுவலகம் வழங்கியது.


புதுமையான சந்ததைப்படுத்தல் அணுகுமுறைகள், நாடு தழுவிய ரீதியிலான காட்சியறைகளை கொண்டிருப்பதும் சிங்கர் நிறுவனத்தினால் பேணப்பட்டுவரும் விற்பனைக்கு பின்னரான சேவைகளுக்கான சிறப்பைக் கொண்டுள்ளமைக்காகவும் இந்த விருதுகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு வர்த்தக பிரிவில் சிறந்த செயல்திறன் மிக்க  முன்னோடியான சிங்கர்  நாடு பூராகவும் கொண்டுள்ள தனது விநியோக கட்டமைப்பின் ஊடாக அதன் தயாரிப்புக்களை விற்பனைக்காக காட்சியப்படுத்தப்படுவதும் முக்கியத்துவமானதாக  கருதப்படுகின்றது.


Dell Partner Business Conference FY22 மாநாடு என்பது ஒரு வருடாந்திர விருது வழங்கும் நிகழ்வாகும். இது அதன் கூட்டாளர் சுற்றுச்சூழல் அமைப்பில் சிறந்து விளங்குவதையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது. முந்தைய ஆண்டுகளிலிருந்தும் Dell Partner விருதுகளை வென்ற நிறுவனங்களில் சிங்கர் முதன்மையானது.


இலங்கையில் Dell இன் வர்த்தக நாம பிரபலத்தை அதிகரிக்கும் அதே வேளையில், சிங்கர் 2020 ஆம் ஆண்டில் கணிசமான சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது. சந்தைப் பங்கின் உயர்வானது இந்த தொற்றுநோய் காலத்திலான வீட்டிலிருந்து வேலை மற்றும் வீட்டிலிருந்து கல்வி போன்ற நடவடிக்கைகளால் ஏற்றம் கண்டது.
அதிநவீன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் இளைஞர்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தும் ஒரு வர்த்தக நாமமாக சிங்கர், SLIM மக்கள் விருதுகளில் ஆண்டின் சிறந்த இளைஞர் வர்த்த நாமத்திற்கான விருதையும் வென்றது.
இந்த விருதுகள் குறித்து Singer Sri Lanka PLC இன் சந்தைப்படுத்தல் இயக்குனர் ஷனில் பெரேரா கருத்து தெரிவிக்கையில், Dell Partner Business Conference மாநாட்டில் வணிக மற்றும் நுகர்வோர் பிரிவுகளுக்கு இரண்டு விருதுகள் பெற்றதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த விருதுகள் டெல் தயாரிப்புகளை இலங்கையின் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும்.


டெல் நிறுவனத்துடன் எங்களுக்கு நீண்டகால கூட்டாண்மை உள்ளது. இது பல ஆண்டுகளாக மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. இன்று நாங்கள் இலங்கையில் டெல் தயாரிப்புகளின் முன்னணி விநியோகஸ்தர்களாக இருக்கிறோம். சிங்கரின் நாடு தழுவிய ரீதியிலான காட்சியறைகளில் மடிக்கணினிகளில் இருந்து Desktops, PC பாகங்கள், மற்றும் முழு டெல் தயாரிப்பு வரிசையையும் காட்சிப்படுத்துகின்றன. மேலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தயாரிப்புகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் அணுகுவதை நாம் உறுதிசெய்கின்றோம்.
தொற்றுநோயால் கட்டாயப்படுத்தப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், சிங்கர் நாடு முழுவதும் விநியோகஸ்தர்கள், காட்சியறைகள் மற்றும் அதன் வலைத்தளம் singer.lk வழியாக அதன் செயல்பாடுகளில் நெகிழ்ச்சியடைந்துள்ளது. டெல் உடனான சிங்கரின் கூட்டாண்மை 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. மேலும் இது சில ஆண்டுகளில் விரைவான வளர்ச்சியைக் தன்னகத்தே கொண்டுவந்தது. இது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சிங்கர் மெகா மற்றும் சிங்கர் ப்ளஸ் காட்சியறையூடாக நாடு பூராகவும் டெல்லின் பலவிதமான தயாரிப்புகளைப் பெற உதவுகின்றது. டெல்லுடனான சிங்கரின் கூட்டாண்மை இலங்கையில் டெல் இன் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.


Singer Sri Lanka PLC  இலங்கையின் நுகர்வோர் நீடித்த சந்தையில் முன்னணியில் உள்ள அததேவேளை மற்றும் நாடு முழுவதும் வளர்ந்து வரும் நுகர்வோருக்கு பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களை வழங்குவதில் புகழ் பெற்று நிற்கின்றது.


சிங்கர் தனது விரிவான இணைப்பாளர்கள் மூலமான கட்டமைப்பு மற்றும் சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் காட்சியறைகள் மற்றும் ஈ-கொமர்ஸ் இயங்குதளம் (www.singer.lk) ஆகியவற்றைக் கொண்ட 432 சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக தனது வாடிக்கையாளர் தளத்தை தொடர்கிறது.
சிங்கரானது 600 இற்கும் மேற்பட்ட மின்னணு பொருட்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிலான சாதனங்களைக் கொண்டுள்ளது. கொள்முதல் செய்யும்போது நுகர்வோருக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காக, சிங்கர் தனது நுகர்வோருக்கு வட்டி இல்லாத இலகு தவணைத் திட்டங்கள், சிறப்பு விலைக்கழிவுகள், இலவச சலுகைகள் மற்றும்

கடனட்டைச் சலுகைகளையும் வழங்குகின்றது

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *