2020 ஆம் ஆண்டில் 136.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பதிவு செய்த Huawei

Huawei தனது 2020 இற்கான ஆண்டறிக்கையை இன்று வெளியிட்டது. வளர்ச்சி வேகம் குறைந்த போதிலும், நிறுவனத்தின் வணிக செயல்திறன் பெரும்பாலும் எதிர்வுகூறலுக்கு ஏற்பவே இருந்தது. 2020 ஆம் ஆண்டில் Huawei நிறுவனத்தின் விற்பனை வருமானம் 136.7 பில்லியன் அமெரிக்க  டொலராக (CNY 891.4 பில்லியன்) பதிவானதுடன், இது முன்னைய ஆண்டை விட 3.8% இனால் அதிகரித்து  மட்டுமன்றி அதன் நிகர லாபம் 9.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 64.6 பில்லியன்) எட்டியது. இது கடந்த ஆண்டை விட 3.2% இனால் அதிகரித்துள்ளது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கத் தடைகளால் ஏற்பட்ட செயல்பாட்டு சிக்கல்களையும் மீறி எங்கள் நிதிக் கூற்றுகளை சுயாதீனமாகவும் பாரபட்சமின்றியும் தணிக்கை செய்ய Huawei, கே.பி.எம்.ஜி.க்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தது. கே.பி.எம்.ஜி தயாரித்த ஆவணமானது ஒரு நியம, மாற்றமில்லாத தணிக்கை மதிப்பீடாகும். சூழ்நிலைகள் எதுவாகினும், அரசாங்கங்கள், வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் பங்களார்களுக்கு செயற்பாட்டுத் தரவை வெளியிடுவதன் மூலம் வெளிப்படைத்தன்மையைத் தொடர்ந்து கடைபிடிப்போம்.

2020 ஆம் ஆண்டில், 170 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 1,500 க்கும் மேற்பட்ட வலையமைப்புகளின் நிலையான செயல்பாடுகளை Huawei நிறுவனத்தின் கேரியர் வணிகம் தொடர்ந்து உறுதிப்படுத்தியதன் மூலம் கோவிட் 19 முடக்கல் காலப்பகுதி முழுவதும் டெலிவேர்க், ஒன்லைன் கற்றல் மற்றும் ஒன்லைன் ஷொப்பிங் ஆகியவற்றை ஆதரிக்க உதவியது. உலகெங்கிலும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய இந்நிறுவனம் ஒரு சிறந்த இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்க உதவியதுடன், நிலக்கரிச் சுரங்கம், உருக்கு உற்பத்தி, துறைமுகங்கள் மற்றும் உற்பத்தித்துறை போன்ற 20க்கும் மேற்பட்ட தொழில்களில் 3,000 க்கும் மேற்பட்ட 5 ஜி கண்டுபிடிப்புத் திட்டங்களுடன் முன்னேறியது.

கடந்த ஆண்டில், Huawei நிறுவனத்தின் வணிக வர்த்தகம் பல்வேறு தொழில்களுக்கான புதுமையான சூழ்நிலை அடிப்படையிலான தீர்வுகள், கூட்டு உருவாக்கம் மற்றும் வெற்றியைப் பகிர்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் சூழலியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை முன்னெடுத்தது. தொற்றுநோய்களின் போது, ​​வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் தீர்வுகளையும் Huawei வழங்கியது. இதற்கான உதாரணம், HUAWEI CLOUD ஐ அடிப்படையாகக் கொண்ட AI உதவியுடனான கண்டறியும் தீர்வாகும். இது உலக மருத்துவமனைகளுக்கு அவர்களின் மருத்துவ உட்கட்டமைப்பு  மீதான சுமையைக் குறைக்க உதவியது. 50 மில்லியனுக்கும் அதிகமான தொடக்க மற்றும் இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கு மேகக்கணி சார்ந்த ஒன்லைன் கற்றல் தளங்களைத் தொடங்க பங்காளர்களுடன் Huawei பணியாற்றியது.

“கடந்த வருடத்தில் நாங்கள் இடர்களை உறுதியாக எதிர்கொண்டோம்” என்று Huawei இன் Rotating Chairman, கென் ஹு தெரிவித்தார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை உருவாக்குவதற்கும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், உலகெங்கிலும் பொருளாதார மீட்பு மற்றும் சமூக முன்னேற்றம் இரண்டையும் ஆதரிப்பதற்கும் நாங்கள் புத்தாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எங்கள் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்த இந்த வாய்ப்பையும் நாங்கள் பயன்படுத்தினோம். இது பெரும்பாலும் எதிர்வுகூறலுக்கு ஏற்றவாறான செயற்திறனுக்கும் வழிவகுத்தது.”

ஒட்டுமொத்தமாக சமுதாயத்திற்கான பகிரப்பட்ட பெறுமதியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஹவாய் அங்கீகரிக்கிறது. மேலும், பகிரப்பட்ட முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பரந்த பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை ஆதரிக்க பங்காளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

பொருளாதார மீட்சியை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும், தொழில்நுட்ப தொடக்கங்கள், தொழில்நுட்ப தொடக்கங்களுக்கான தொழில்நுட்ப ஆதரவு, நிதி, ஆலோசனை மற்றும் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதற்காகவும் Huawei 2020 இல் சிங்கப்பூரில் ஸ்பார்க் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Huawei ஆதரிக்கும் தாய்லாந்தில் உள்ள 5G சூழல் புத்தாக்க நிலையம், ஆசியானில் 5G கண்டுபிடிப்புகளுக்கான சோதனைக் களமாக திகழ்கின்றது.

தொழிலாளர் சவால்களைச் சமாளிக்க, கற்றல் வளங்களை வழங்குவதற்கும் டிஜிட்டல் திறமைகளைப் பயிற்றுவிப்பதற்கும் Huawei ஆசியான் அகடமி, டிஜிட்டல் பயிற்சி பஸ் மற்றும் எதிர்கால திட்டத்திற்கான விதைகள் உள்ளிட்ட பல முயற்சிகளை Huawei APAC இல் தொடங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப நிறுவனம்  APAC இல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 300,000 ICT திறமையாளர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2020 ஆண்டு அறிக்கையில் உள்ள அனைத்து நிதி அறிக்கைகளும் சர்வதேச பிக் ஃபோர் கணக்கியல் நிறுவனமான கே.பி.எம்.ஜி இனால் சுயாதீனமாக தணிக்கைக்குட்படுத்தப்பட்டன.

2020 ஆண்டு அறிக்கையைப் தரவிறக்கம் செய்ய, விஜயம் செய்க

https://www.huawei.com/en/annual-report/2020

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *