சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடைக் கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கான தையல் இயந்திரங்களை அறிமுகப்படுத்தும் சிங்கர்

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராகவும், வர்த்தக ரீதியில் உலகின் முதல் தையல் இயந்திரத்தினை அறிமுகப்படுத்திய சிங்கர் நிறுவனமானது, இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடைக் கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல புதிய தையல் இயந்திர மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் புகழ்பூத்த தையல் இயந்திர வர்த்தகநாமமாகத் திகழும் சிங்கர், லொக்ஸ்டிச் தையல் இயந்திரத்திலிருந்து ஓவர்லொக் தையல் இயந்திரம் வரை ஏற்றுமதி மற்றும் சிறு கைத்தொழில் துறை உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அனைத்து விதமான தையல் இயந்திர மாடல்களையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கர் நிறுவனமானது ஆடைக் கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களது முன்னேற்றத்துக்கும் நீண்டகாலமாக ஆதரவு வழங்கி வருகின்றது.

1877 ஆம் ஆண்டு முதன்முதலாக இலங்கையில் தையல் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை நாடெங்கிலுமுள்ள காட்சியறைகள் வாயிலாக சிங்கர் நிறுவனமானது தனது விற்பனை நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. சிங்கர் வர்த்தகநாமத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கையே இந்த வரலாற்று சாதனைக்குப் பக்கபலமாக அமைகின்றது. இன்றளவில் சிங்கர் வர்த்தகநாமம் மட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற பல முன்னணி தையல் இயந்திர வர்த்தகநாமங்களை நியாயமான விலையில், இணையற்ற விற்பனைக்குப் பின்னரான சேவையுடன் சிங்கர் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

உலகில் அதிகம் விற்பனையாகும் ZOJE வர்த்தகநாமமானது, ஏற்றுமதி ஆடைக் கைத்தொழில் துறையில் பரவலாகப் பாவனையில் உள்ள அதிவேக தையல் இயந்திர மாடலாகும். இந்தப் புதிய தையல் இயந்திர மாடலை இலங்கைக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடைக் கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவிலான நன்மைகளை வழங்குவதற்கு சிங்கர் நிறுவனம் எதிர்பார்க்கின்றது. சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனமானது ஆடைக் கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் விற்பனை செய்த தையல் இயந்திரங்களில் பெரும்பாலானவை ZOJE அதிவேக தையல் இயந்திர மாடல்களாக அமைவதுடன், அதன் முன்னோடிப் பங்காளராக MEGASEW திகழ்கின்றது. பல்வேறு தையல் இயந்திர மாடல்களைக் கொண்ட குறித்த வர்த்தகநாமமானது தாய்வானில் தயாரிக்கப்படுகின்றது. இதுதவிர ´சிங்கள்ஹெட்´ மற்றும் ´மல்டிஹெட்´ போன்ற விசேடமான எம்ராயிடர் தொழில்நுட்பத்துடன் கூடிய தையல் இயந்திர மாடல்களும் சிங்கர் காட்சியறைகளில் கிடைக்கப்பெறுகின்றன. சிங்கர் தயாரிப்பான SDY எம்ராயிடர் தையல் இயந்திரமானது, ஆடைக் கைத்தொழில் உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரையில் சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. இந்த தையல் இயந்திரத்தின் மூலம் சீக்வின்ஸ் மற்றும் கோடிங் போன்ற எம்ராயிடர் துறையுடன் தொடர்புடைய தையல் வேலைகளை இலகுவாக மேற்கொள்ள முடிகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *