‘One Galle Face’ வணிக வளாகத்தில் இரண்டாவது கிளையின் பிரமாண்ட திறப்புடன் இலங்கையில் தனது தடத்தை விரிவுபடுத்தும் Fabindia

காலத்தால் அழியாத கைவினைத்திறன், நிலைபேறான பேஷன் மற்றும் வளமான கைவினைப் பாரம்பரியத்திற்குப் பெயர்பெற்ற இந்தியாவின் புகழ்பெற்ற வாழ்வியல் வர்த்தகநாமமான Fabindia (பெப்இந்தியா), கொழும்பில் உள்ள புகழ் பெற்ற ‘One Galle Face’ வணிக வளாகத்தில் தனது இரண்டாவது கிளையைப் பிரமாண்டமாகத் திறந்து வைத்ததன் மூலம், அதன் இலங்கைப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுதேசி இண்டஸ்ட்ரியல் வொர்க்ஸ் பிஎல்சி (Swadeshi Industrial Works PLC) நிறுவனத்துடனான கூட்டணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விரிவாக்கமானது, இலங்கையில் இவ்வர்த்தகநாமத்தின் வளர்ந்து வரும் இருப்பையும், இரசனைமிக்க இலங்கை நுகர்வோருக்கு உண்மையான கைவினைத்திறன், நவீன, நேர்த்தியான, பொறுப்புணர்வு கொண்ட வாழ்க்கை முறையை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

2025 ஓகஸ்ட் மாதம் ‘Havelock City Mall’ வணிக வளாகத்தில் தனது முதலாவது முதன்மையான கிளையை வெற்றிகரமாகத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, இயற்கையான துணிகள், கைவினைப் பொருட்கள், நிலைபேறான பேஷன் மற்றும் காலத்தால் அழியாத வடிவமைப்புகளைப் பாராட்டும் இலங்கை வாடிக்கையாளர்களுடனான தனது உறவை Fabindia தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இலங்கைச் சந்தையில் நுழைந்து ஒரு வருடத்திற்கு சற்று அதிகமான காலப்பகுதியிலேயே தனது இரண்டாவது கிளையை திறந்திருப்பதானது, இவ்வர்த்தகநாமத்தின் விரிவாக்க மூலோபாயத் திட்டத்தில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதுடன், நாட்டின் வளர்ந்து வரும் வர்த்தகச் சூழல் மீது நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

One Galle Face வணிக வளாகத்தில் இடம்பெற்ற இந்தப் பிரமாண்ட திறப்பு விழாவானது இந்திய கைவினைத்திறன், கலாசாரம், பாரம்பரியம், நவீன வாழ்க்கை முறையின் கொண்டாட்டமாக அமைந்ததுடன், தனித்துவமான பேஷன் மற்றும் வாழ்க்கை முறைத் தொகுப்புகளைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு உற்சாகமான ஷொப்பிங் இலக்கையும் அறிமுகப்படுத்தியது. கொழும்பின் முதன்மையான ஷொப்பிங் மையங்களில் ஒன்றில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளையானது, பாரம்பரியக் கலைத்திறனையும் நவீன நேர்த்தியையும் ஒன்றிணைக்கும் வகையில் சிந்தனையுடன் தொகுக்கப்பட்ட சில்லறை வர்த்தக அனுபவத்தை வழங்குகிறது.

Fabindia நிறுவனத்தின் புதிய கிளையானது, மகளிர் மற்றும் ஆடவருக்கான நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் நவீன மேற்கத்திய ஆடைகளின் விரிவான தெரிவுகளைக் காட்சிப்படுத்துகிறது. இவற்றுடன் நேர்த்தியான அணிகலன்கள், ஆபரணங்கள், கைப்பைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வாழ்க்கை முறை தயாரிப்புகள் மற்றும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட பரிசுப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தொகுப்பும் பாரம்பரிய கைவினைத்திறனைக் கொண்டாடும் அதே வேளையில், இன்றைய நுகர்வோரின் விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் Fabindia நிறுவனத்தின் தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

பாரம்பரிய இந்தியத் துணிகள், இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் கைவினை நுட்பங்களை, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் நவீன வாழ்க்கை முறை தயாரிப்புகளாக மாற்றியமைக்கும் திறனிலேயே இவ்வர்த்தகநாமத்தின் தனித்துவமான ஈர்ப்பு அடங்கியுள்ளது. அழகாக நெய்யப்பட்ட துணிகள் மற்றும் நேர்த்தியான ஆடை வடிவமைப்புகள் முதல் கைவினைத் திறன் மூலம் தயாரிக்கப்பட்ட வீட்டு அலங்காரப் பொருட்கள் வரை, பாரம்பரியம், நம்பகத்தன்மை, பொறுப்பான நுகர்வு ஆகியவற்றுடனான அர்த்தமுள்ள தொடர்பை வாடிக்கையாளர்களுக்கு Fabindia தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த இரண்டாவது கிளையின் திறப்பானது Fabindia மற்றும் சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி ஆகியவற்றுக்கு இடையிலான வெற்றிகரமான கூட்டணியை மேலும் வலுப்படுத்துகிறது. இது பாரம்பரியம், தரம், நிலைபேறான தன்மை மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகள் ஆகியவற்றில் ஆழமான மதிப்பைக் கொண்ட இரு நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது.

இலங்கையில் இவ்வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான விரிவாக்கம் குறித்து சுதேசி நிறுவனத்தின் பிரதித் தலைவியும் முகாமைத்துவ பணிப்பாளருமான சுலோதரா சமரசிங்க, இந்த மைல்கல்லின் முக்கியத்துவத்தையும், இலங்கை நுகர்வோர் மத்தியில் Fabindia நிறுவனத்தின் தனித்துவமான வாழ்க்கை முறைத் தெரிவுகள் தொடர்பில் அதிகரித்து வரும் வரவேற்பையும் சுட்டிக்காட்டினார்.

கைவினைத்திறனைக் கொண்டாடுகின்ற, பாரம்பரியத் திறன்களைப் பாதுகாக்கின்ற, பொறுப்புணர்வு கொண்ட நுகர்வோர் தெரிவுகளை ஊக்குவிக்கின்ற தயாரிப்புகளை மேம்படுத்தும் அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த வர்த்தக அனுபவங்களை அறிமுகப்படுத்தும் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை இந்த விரிவாக்கம் பிரதிபலிக்கிறது.

இலங்கையில் இதன் அறிமுகத்தை தொடர்ந்து, உண்மைத் தன்மை, தரம், கைவினைப் பொருட்களின் அழகை மதிக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு தனித்துவமான வாழ்க்கை முறை இலக்காக Fabindia தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இவ்வர்த்தகநாமத்தின் அதிகரித்து வரும் புகழானது, பாரம்பரியக் கலைத்திறனையும் நவீன வடிவமைப்பையும் ஒன்றிணைக்கும் நிலைபேறான பேஷன் மற்றும் வாழ்வியல் தெரிவுகளுக்கான அதிகரித்து வரும் வரவேற்பைப் பிரதிபலிக்கிறது.

1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Fabindia ஆனது, இந்தியாவின் வளமான கலாசாரம் மற்றும் கைவினைப் பாரம்பரியங்களைக் கொண்டாடும் ஒரு முக்கிய மரபைக் கட்டியெழுப்பியுள்ளது. இந்தியாவின் முன்னணி வாழ்வியல் வர்த்தகநாமங்களில் ஒன்றான Fabindia, 55,000 இற்கும் மேற்பட்ட கைவினைஞர்களை நவீன சந்தைகளுடன் இணைத்து, பாரம்பரியத் திறன்கள், கிராமிய வாழ்வாதாரங்கள் மற்றும் நிலைபேறான நடைமுறைகளுக்கு ஆதரவளிக்கிறது. இதன் தொகுப்புகள் பாரம்பரிய கைவினைத்திறன், இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் நவீன அழகியல் ஆகியவற்றின் இணைந்த கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

One Galle Face வணிக வளாக கிளையின் திறப்பானது Fabindia நிறுவனத்தின் இலங்கைப் பயணத்தில் மற்றுமொரு உற்சாகமான அத்தியாயத்தைக் குறிப்பதுடன், உள்ளூர் நுகர்வோருக்கு உண்மையான, கைவினை முறையில் தயாரிக்கப்பட்ட பேஷன் மற்றும் வாழ்க்கை முறை தயாரிப்புகளை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது.

தற்போது Havelock City Mall மற்றும் One Galle Face வணிக வளாகங்களில் இரண்டு கிளைகளுடன், கொழும்பில் தனது இருப்பைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வரும் Fabindia, காலத்தால் அழியாத கைவினைத்திறனின் அழகைக் கண்டறியவும், கலாசாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடவும், உண்மைத் தன்மை, நேர்த்தி, பொறுப்புணர்வு கொண்ட வாழ்க்கை முறை மூலம் ஈர்க்கப்பட்ட வாழ்வியலைத் தழுவுமாறு இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

Fabindia – Celebrate India (இந்தியாவைக் கொண்டாடுங்கள்)

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *