சுமதி ஹோல்டிங்ஸ், சுமதி நிறுவனத்தின் பாரம்பரியத்தின் 70 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது

1956 ஆம் ஆண்டில் மெலிபன் தெருவில் ஒரு சிறிய பந்தய நிலையத்திலிருந்து, இன்று 11 பிரதான வணிக நிறுவனங்களுடனும் 2,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடனும் வளர்ச்சி அடைந்துள்ளது

கொழும்பு, ஒக்டோபர் மாதம் 09 – இலங்கையின் வணிகம், அரசாங்கம், நிதி மற்றும் ஊடகத் துறைகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றின் மூலம், சுமதி ஹோல்டிங்ஸ் தனது 70 ஆண்டு நிறைவைக் கடந்த வெள்ளிக்கிழமை, மாதம் 09 ஆம் திகதி, கொழும்பு ஐடிசி ரத்னதீபா ஹோட்டலின் சங்கம் போல்ரூமில் கொண்டாடியது. “சுமதி பாரம்பரியத்தின் 70 ஆண்டுகள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, 1956 ஆம் ஆண்டில் நிறுவனர் யு. டபிள்யு. சுமதிபால, அவர்களால் கொழும்பு புறககோட்டையிலுள்ள மெலிபன் தெருவில் ஸ்போர்டிங் ஸ்டார் நிறுவனத்தின் முதலாவது பந்தய நிலையத்தைத் திறந்துவைத்த காலத்தை நினைவுகூர்ந்தது. அந்த வணிக முயற்சியிலிருந்தே இக்குழுமம் வளர்ச்சியடைந்தது.

காலி முகத்திடலுக்கு மேலாக நடத்தப்பட்ட ட்ரோன் காட்சியுடனும் வானவேடிக்கைகளுடனும் இந்நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி நிரலில், தலைவர் அவர்களின் உரையும் வாழ்த்துக் கிண்ணம் உயர்த்தும் நிகழ்வும், 70 ஆவது ஆண்டு நிறைவு இலச்சினை வெளியீடும், பணிப்பாளர்களான சாது மற்றும் சதுல சுமதிபால ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. அத்துடன், நேரடி இசைக்குழு நிகழ்ச்சியும், பாடகி உமாரா சிங்ஹவன்ச, பியானோ கலைஞரும் இசைப் இயக்குனருமான சௌந்தரீ டேவிட் ரொட்ரிகோ, இசையமைப்பாளரும் பாடகருமான நதீக்க குருகே ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜகத் சுமதிபால அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “70 ஆண்டுகளை எட்டியிருப்பது சுமதி ஹோல்டிங்ஸுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். அத்துடன், எமது பயணத்தை வடிவமைத்தது விழுமியங்களை மீளாய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைகிறது. எனது தந்தையான யு. டபிள்யு. சுமதிபால அவர்கள், குறைந்த வளங்களுடன், ஆனால் நேர்மை மற்றும் நியாயமான முறையில் வணிகம் செய்வதில் வலுவான நம்பிக்கையுடன், மெலிபன் தெருவில் ஸ்போர்டிங் ஸ்டார் நிறுவனத்தின் ஊடாகத் தனது பயணத்தை ஆரம்பித்தார். எனது தாயாரின் உறுதியுடனும், எமது பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் அர்ப்பணிப்புடனும், இன்று பதினொரு பிரதான வணிகத் துறைகளில் இயங்குவதுடன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட குழுமமாக நாம் வளர்ச்சியடைந்துள்ளோம். மூன்றாவது தலைமுறையினர் முன்னோக்கி வரும் இவ்வேளையில், புதிய வாய்ப்புகளைத் தழுவிக்கொண்டு, நாட்டிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும் அதேவேளை, இந்த விழுமியங்களைப் பாதுகாப்பதே எமது நோக்கமாகும்.”

யு. டபிள்யு. சுமதிபால அவர்கள், இலங்கை முழுவதும் முகவர்கள் ஊடாகவும், 1978 ஆம் ஆண்டு முதல் நான்கு பிராந்திய மையங்கள் ஊடாகவும் செயற்பட்டு, ஸ்போர்டிங் ஸ்டார் நிறுவனத்தை நாட்டின் முன்னணி பந்தயத் தரகர்களில் ஒன்றாகக் கட்டியெழுப்பினார். அவர் 1979 ஆம் ஆண்டு மறைந்த பின்னர், இந்நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் தனது முதலாவது ‘ரேஸ் பை ரேஸ்’ மையத்தைத் திறந்தது. 1992 ஆம் ஆண்டில் பந்தயங்களை ஒளிபரப்பத் தொடங்கியதுடன், 1998 ஆம் ஆண்டளவில் அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஒவ்வொரு பந்தயத்தையும் நேரடியாக ஒளிபரப்பியது. இன்று, ஸ்போர்டிங் ஸ்டார் நிறுவனம் தனது இணையவழித் தளமான  நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை இயக்கி வருகிறது.

யு. டபிள்யு. சுமதிபால மறைந்த பின்னர், அவரது மனைவியான கலாநிதி மிலினா சுமதிபால தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் 2016 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். அதேவேளை, அப்போது 19 வயதான அவரது மகன் ஜகத், வணிகத்தை நிர்வகித்து அதன் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். அவரது செல்வாக்கு வணிகத் துறையைத் தாண்டியும் பரந்திருந்தது. 1980 ஆம் ஆண்டில் வெளியான தனது கங்கா அதர திரைப்படத்தின் முழு இலாபத்தையும் கொழும்பு பொது வைத்தியசாலையில்—தற்போதைய தேசிய வைத்தியசாலையில்—நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்காக அவர் வழங்கினார். 1981 ஆம் ஆண்டில் குழுமத்தின் இரத்ததான நிகழ்ச்சிகளையும் புற்றுநோய் வைத்தியசாலைக்கான ஆதரவையும் ஆரம்பித்தார். அதன் பின்னர், இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பைன்ட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2001 ஆம் ஆண்டில் அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் முதலாவது பெண் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார்.

இன்றைய குழுமத்தின் பெரும்பாலான வணிகங்கள், ஸ்போர்டிங் ஸ்டார் நிறுவனத்திற்குத் தேவைப்பட்ட தீர்வுகளாகவே ஆரம்பிக்கப்பட்டன. அதன் விற்பனை நிலையங்களுக்கான பாதுகாப்புத் தேவைகள் டுழமஒ ளுநஉரசவைல ளுநசஎைஉநள நிறுவனமாகவும், பந்தயச் செய்தித்தாள்களுக்கான அச்சிடும் தேவைகள் ஐெீசைவெ ளுழடரவழைளெ நிறுவனமாகவும் வளர்ச்சியடைந்தன. அதேவேளை, அதன் பந்தய முறைமைகளுக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பம் தற்போது ஆயைகெசயஅந நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சுமதி ஹோல்டிங்ஸ், இன்று 2,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட பதினொரு பிரதான வணிக நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமமாகத் திகழ்கிறது. பந்தயம் மற்றும் விளையாட்டுகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், உணவகங்கள், பாதுகாப்பு, அச்சிடுதல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, முதலீடுகள் மற்றும் திரைப்படத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இக்குழுமம் செயற்பட்டு வருகிறது.

இவ்வாண்டு, குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் தத்தமது முக்கிய மைல்கற்களைக் கொண்டாடுகின்றன:

• ‘கிரேட் வோல் ரெஸ்டுரன்ட்ஸ் தனது 35 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. கொழும்பு மக்களுக்கு உண்மையான சீன உணவுகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், ஜகத் சுமதிபால அவர்கள் 1991 ஆம் ஆண்டு செத்தாம் வீதியில் இதனை ஆரம்பித்தார்.

• சுமதி ஐடி தனது 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இலங்கை முழுவதும் வலைய உள்கட்டமைப்பு, தரவுத் தொடர்பாடல் மற்றும் புவிசார் பொறியியல் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம், னுதுஐ நிறுவனத்தின் வர்த்தகப் பயன்பாட்டுக்கான ட்ரோன்களையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது.

• லைஃப்ெஸர்வ் தனது 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இச்சுகாதாரப் பொருட்கள் விநியோக நிறுவனம், கடந்த இரண்டு தசாப்தங்களாக மருந்து வெளியிடும் ஸ்டென்ட் சந்தையில் முன்னணி வகித்து வருவதுடன், 2025 ஆம் ஆண்டில் புற்றுநோயியல் பிரிவையும் ஆரம்பித்தது.

இந்தக் கொண்டாட்டங்கள், வணிகத்தின் பின்னணியில் உள்ள பணியாளர்களையும் சென்றடைந்தன. ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி, ஸ்போர்டிங் ஸ்டார் நிறுவனத்தின் தலைமையகத்தில் பணியாளர்களுடன் இணைந்து கொண்டாட்டம் நடைபெற்றதுடன், பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக்காலத்தைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நீண்டகால சேவை விருதுகளும் வழங்கப்பட்டன. அவர்களில் 31 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஆர்.வி. கணசேன, 40 ஆண்டுகளாக ஸ்போர்டிங் ஸ்டார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மிக நீண்டகால சேவையாளர் ஆவார். ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி, நாடு முழுவதும் உள்ள ஸ்போர்டிங் ஸ்டார் விற்பனை நிலையங்களிலும் தனித்தனியான கொண்டாட்டங்கள் eilngw;wd. இதன்போது, கிரேட் வோல் ரெஸ்டுரன்ட்ஸ் நிறுவனத்திலிருந்து பணியாளர்களுக்காக ஆண்டு நிறைவுக் கேக்குகளும் உணவுகளும் வழங்கப்பட்டதுடன், வாடிக்கையாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தற்போது, மூன்றாவது தலைமுறையினர் தலைவருடன் இணைந்து குழுமத்தை வழிநடத்துகின்றனர். பணிப்பாளர் திரு. சாது சுமதிபால, குழுமத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தலைமை தாங்குகிறார். அவர் ஆயைகெசயஅந நிறுவனத்தை நிறுவியதுடன், குழுமத்தின் முக்கிய முறைமைகளை உள்நாட்டிலேயே உருவாக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டார். மேலும், டீநவளுளு.உழஅ தளத்தை உருவாக்கி, சுமதி ஐவு நிறுவனத்தின் ட்ரோன் பிரிவையும் அதன் முதலாவது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தையும் நிறுவினார். பணிப்பாளர் திரு. சதுல சுமதிபால, குழுமத்தின் சேவைகள் பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார். அவர் சுமதி எனர்ஜி நிறுவனத்தை உருவாக்கினார். அதன் திட்டங்களில் 5 மெகாவாட் திறன் கொண்ட வெவிலா சூரிய மின்சக்தி நிலையமும், மொனராகலை மற்றும் வெவிலா ஆகிய இடங்களில் அமைந்துள்ள மின்கல மின்சக்தி சேமிப்புத் திட்டங்களும் அடங்குகின்றன.

சுமதி ஹோல்டிங்ஸ் தனது எட்டாவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில், நிறுவனர்களால் நிலைநாட்டப்பட்ட விழுமியங்களைத் தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதுடன், அடுத்த எழுபது ஆண்டுகளை வரையறுக்கவுள்ள வணிகங்களை உருவாக்கி வளர்ப்பதற்கும் குழுமம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

(முடிவு)

சுமதி ஹோல்டிங்ஸ் பற்றிய விபரம்

1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுமதி ஹோல்டிங்ஸ், 1956 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்போர்டிங் ஸ்டார் நிறுவனத்தின் வரலாற்று வேர்களைக் கொண்ட, பல்வேறு துறைகளில் செயற்படும் இலங்கை வணிகக் குழுமமாகும். இதன் பதினொரு பிரதான வணிக நிறுவனங்கள் பந்தயம் மற்றும் விளையாட்டுகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், உணவகங்கள், பாதுகாப்பு, அச்சிடுதல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, முதலீடுகள் மற்றும் திரைப்படத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்படுவதுடன், 2,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகின்றன. ஸ்போர்டிங் ஸ்டார், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், பொறுப்புணர்வுடன் பந்தயம் கட்டும் நடைமுறைக்கு உறுதிபூண்டுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *