தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்களிடையே இணக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்தும் டேவிட் பீரிஸ் குழுமம்

இலங்கையின் முன்னணி பல்துறை வணிகங்களைக் கொண்ட குழுமங்களில் ஒன்றான David Pieris Group (DPG), தமது முக்கிய தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வில் முதலீடு செய்வதன் மூலம் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. இந்தத் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பான பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 70 வெளித்தரப்பு சேவை வழங்குநர்களுக்காக ‘Awareness, Compliance & DPG Good Practices’ எனும் வேலைத்திட்டத்தை இக்குழுமம் ஏற்பாடு செய்திருந்தது.

பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள DPG, தனது செயற்பாடுகள் முழுவதும் உயர் தரத்தைப் பேணுவதற்காக, தமது தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகப் பங்காளர்களுடன் வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலுவாக நம்புகிறது. விழிப்புணர்வை அதிகரித்தல், பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் மற்றும் இணக்கப்பாடு, தரம், பாதுகாப்பு, நிலைபேறான தன்மை ஆகியன தொடர்பில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மிக்க கலாசாரத்தை ஊக்குவிப்பதன் மூலம், தமது தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்களின் உறவுகளையும் செயற்பாட்டுத் தர நிலைகளையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் DPG நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

DPG நிறுவனத்திற்கு சேவைகளை வழங்குவதுடன், அதனுடன் தொடர்புடைய சட்டபூர்வ விடயங்கள், விதிமுறைகள், ஒப்பந்தம் மற்றும் செயற்பாட்டுப் பொறுப்புகள் குறித்து பங்கேற்பாளர்களின் புரிதலை வலுப்படுத்துவதிலும் இத்திட்டம் கவனம் செலுத்தியது. இணக்கப்பாடு, தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, சூழல் முகாமைத்துவம், மனிதவளம், பாதுகாப்பு, நிதி மற்றும் நிர்வாகம், நிலைபேறான தன்மை உள்ளிட்ட ஏனைய பணியிடத் தேவைகள் தொடர்பான DPG நிறுவனத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பான விடயங்களை தொடர்பு கொண்டு அறிவதற்கான ஒரு பொதுவான தளத்தையும் இது ஏற்படுத்தியிருந்தது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் போது உள்ளடக்கப்பட்ட முக்கிய துறைகளில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் வேதனச் சபை தேவைகள், ஒப்பந்தக்காரர்களின் சட்டப் பொறுப்புகள், சூழல் மற்றும் கழிவு முகாமைத்துவம், மனிதவள நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, பாதுகாப்புத் தேவைகள், தொழிலாளர் இழப்பீட்டுக் காப்புறுதி (WCI), நிலைபேறான தன்மை, நிதி மற்றும் நிர்வாகத் தேவைகள் ஆகியனவும் உள்ளடங்குகின்றன.

இங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் அமர்வானது, முக்கிய பிரச்சினைகளை தெளிவுபடுத்தவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், நடைமுறை ரீதியான பணிடத் தேவைகள் குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதன் மூலம் இந்நிகழ்வை மேலும் ஒரு படி முன்னே கொண்டு சென்றது.

இந்த திட்டமானது, டேவிட் பீரிஸ் குழுமத்தின் தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்களின் கூட்டணியை மேம்படுத்தவும், அதன் சூழல் முழுவதும் இணக்கப்பாடு, தரம், பாதுகாப்பு, நிலைபேறான தன்மை, பொறுப்பான வணிக நடைமுறைகள் ஆகியவற்றின் வலுவான பாரம்பரியத்தை கட்டியெழுப்பவும், முன்னெடுத்து வருகின்ற தொடர்ச்சியான பயணத்தில் மற்றொரு படியை குறிக்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *