ஹெவ்லொக் சிட்டியின் ஐந்தாவதும் இறுதிக் கட்டமுமான ‘Havelock City Residences’  இனை அறிமுகப்படுத்துகிறது Overseas Realty

Overseas Realty (Ceylon) PLC நிறுவனம், ஹெவ்லொக் சிட்டியின் (Havelock City) ஐந்தாவதும் இறுதிக் கட்டமுமான ‘Havelock City Residences’ திட்டத்தின் அறிமுகத்தை அறிவித்துள்ளது. இது கொழும்பின் தொலைநோக்குப் பார்வையை, மிகவும் மதிப்புமிக்க ஒருங்கிணைந்த கலப்பு – பயன்பாட்டு அபிவிருத்தித் திட்டமாக அமைவதோடு, தற்போது அது நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

‘Havelock City Residences’ இன் உத்தியோகபூர்வ அறிமுகமானது, 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பு ஹில்டனில், அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்களின் பிரத்தியேக பங்கேற்புடன் மிக விமர்சையாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

இது தனது உத்தியோகபூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே வலுவான சந்தை நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில், 50% ஆன அடுக்குமாடி குடியிருப்புகள் முன்னதாகவே விற்பனை செய்யப்பட்ட சாதனையை பதிவு செய்துள்ளது. இது இடம், பசுமை, தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்க்கை முறையை ஒன்றிணைக்கும் ஒரு உயர் மட்ட குடியிருப்புச் சூழல் எனும் ஹெவ்லொக் சிட்டியின் தனித்துவமான முன்மொழிவின் தொடர்ச்சியான ஈர்ப்பைப் பிரதிபலிக்கிறது.

18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹெவ்லொக் சிட்டி, இலங்கையின் மிகப்பெரிய தனிப்பட்ட, மூடிய பசுமை தளமாக, 7 ஏக்கரில் அழகாக வடிவமைக்கப்பட்ட முற்றத்தின் மூலம் தனித்து விளங்குகிறது. சிங்கப்பூரின் விருது பெற்ற உலகளாவிய வடிவமைப்பு நிறுவனமான ‘P&T Group’ மூலம் வடிவமைக்கப்பட்ட ‘Havelock City Residences’, இயற்கை வெளிச்சம், காற்றோட்டம், தனியுரிமை மற்றும் தோற்ற வெளிப்பாடுகளை அதிகப்படுத்தும் வகையிலான சிந்தனையுடன் திட்டமிடப்பட்ட விசாலமான இரண்டு, மூன்று, நான்கு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடன், விலையுயர்ந்த வான்வெளி (penthouses) பகுதிகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.

நடைபயிற்சி மற்றும் ஓடுவதற்கான பாதைகள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்குவாஷ் மைதானங்கள், விருந்தினர் மண்டபங்களுடன், சமூக தொடர்புகள் மற்றும் ஓய்வுக்கான பிரத்தியேக பகுதிகள் உள்ளிட்ட பரந்துபட்ட பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் வாழ்க்கை முறை வசதிகள் மூலம் குடியிருப்பாளர்கள் சிறந்த பயனை பெற முடியும். இதிலுள்ள உதவியுடனான வாழ்க்கைமுறை கருத்தாக்கமானது இலகுவான அணுகல், சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியான வாழ்க்கையினை, ஒவ்வொரு அம்சத்திலும் மேம்படுத்துகிறது.

இது, Havelock City Mall மற்றும் Mireka Office Tower ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்துள்ளதால், குடியிருப்பாளர்கள் உடனுக்குடன் ஷொப்பிங் செய்யவும், உணவகங்கள், பொழுதுபோக்கு மற்றும் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை எளிதாக அணுகவும் முடியும். குடியிருப்பு மற்றும் வர்த்தகம், வாழ்க்கை முறை அனுபவங்களுக்கான இந்த தடையற்ற ஒருங்கிணைப்பானது, இடத்தையும், அமைதியையும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்க விரும்பாத நகர வாழ்க்கையின் வசதியை விரும்பும் நபர்களுக்கு, ஒரு தனித்துவமான முகவரியாக ஹெவ்லொக் சிட்டியை மாற்றுகிறது.

இதன் அறிமுகம் குறித்து Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் பணிப்பாளரும் அக்குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரவீர் சமரசிங்க கருத்து வெளியிடுகையில், “Havelock City Residences இன் அறிமுகமானது, கொழும்பின் மிகவும் விரும்பப்படும் ஒருங்கிணைந்த குடியிருப்பு மையமாக ஹெவ்லொக் சிட்டியைக் கட்டியெழுப்பும் எமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐந்தாவதும் இறுதி கட்டமுமாக, Havelock City Residences இந்தத் தொலைநோக்குப் பார்வையை அதன் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. இது வீட்டின் உரிமையாளர்களுக்கு இடம், பசுமை, தொடர்பு, நவீன ஆடம்பரம் ஆகியவற்றை ஒரு நிறுவப்பட்ட சமூகத்திற்குள் பெறக்கூடிய ஒரு அரிதான பல்வேறு அம்சங்களை கலவையாக வழங்குகிறது. இந்த இறுதி அத்தியாயத்தை சந்தைக்குக் கொண்டுவருவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அத்துடன் பல உயர் மட்ட குடியிருப்பாளர்களை ஹெவ்லொக் சிட்டி சமூகத்திற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

ஹெவ்லொக் சிட்டி மற்றும் கொழும்பு உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள நிறுவனமான Overseas Realty Ceylon PLC இனால் உருவாக்கப்படும் ‘Havelock City Residences’, இலங்கையில் முக்கிய ரியல் எஸ்டேட் திட்டங்களை உருவாக்கிய பாரம்பரியத்தை கொண்டதாகும். இத்திட்டமானது தமக்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான ‘Realty Management Services’ நிறுவனத்தால் தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்ச்சியான சொத்து முகாமைத்துவத்தை வழங்குவதோடு, தொந்தரவின்றிய வாடகை முறை மற்றும் மீள்விற்பனை ஆகியவற்றிற்கான ஆதரவு சேவைகளையும் வழங்குகிறது.

ஹெவ்லொக் சிட்டியின் இறுதிக் கட்டத்திலுள்ள இந்த அபிவிருத்தித் திட்டமானது, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு, ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையின் நன்மைகளுடன் ஒரு தனித்துவமான வாழ்விட சமூகத்தின் ஒரு அங்கமாக மாறுவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பையும் அதற்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் வழங்குகிறது.

இத்திட்டம் 2030 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Havelock City Residences பற்றிய மேலதிக தகவல்களுக்கு, 070 350 5100 எனும் இலக்கத்தை அழைக்கவும் அல்லது www.havelockcity.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

Overseas Realty (Ceylon) PLC பற்றி
Overseas Realty (Ceylon) PLC ஆனது, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முன்னணி சொத்து மேம்பாடு, முதலீடு மற்றும் முகாமைத்துவ நிறுவனமாகும். இதன் வரலாற்றுச் சிறப்புமிக்க நிர்மாணங்களில் கொழும்பு உலக வர்த்தக மையம் முக்கிய இடத்தை வகிப்பதோடு, உயர்மட்ட குடியிருப்பு, வணிக, சில்லறை வர்த்தக அனுபவங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கலப்பு – பயன்பாட்டு அபிவிருத்தித் திட்டமான ஹெவ்லொக் சிட்டியும் இதில் உள்ளடங்குகின்றது. இந்நிறுவனம், தனது திட்டங்கள் மூலம், தரம், புத்தாக்கம், நீண்டகால மதிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இலங்கையின் வளர்ந்து வரும் நகர்ப்புற தோற்ற அமைப்பிற்கு தொடர்ச்சியாக பங்களித்து வருகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *