இலங்கையில் மருந்து உற்பத்திக்கான இலட்சியத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் Premium International Injectable

இலங்கையில் தமது மருந்து உற்பத்தி தொழிற்சாலையின் நிறுவலை Premium International Injectable (Private) Limited நிறுவனம் விரைவுபடுத்தி வருகிறது. இது உள்ளூர் உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் மருந்துத் துறையில் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதற்குமான நிறுவனத்தின் அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய நகர்வைக் குறிக்கிறது.

இலங்கை முதலீட்டு வலயத்திற்குள் (BOI) ஐரோப்பிய தரநிலைகளுக்கு அமைய உருவாக்கப்பட்டு வரும் இந்த அதிநவீன தொழிற்சாலையானது, உயிரியல் தொழில்நுட்ப (biotechnology) அடிப்படையிலான இன்சுலின் மற்றும் பொதுவான சிறிய அளவிலான ஊசி மருந்துகளை (SVP) தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்குள் உள்ள தேசிய இணக்கப்பாட்டு அதிகாரசபைகளால் (NCAs) வழங்கப்படும் EU GMP சான்றிதழைப் பெறுவதற்கும் தயாராக உள்ளது. சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப தனது உற்பத்தித் திறன்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயும் அதே வேளையில், உற்பத்தி தொடர்பான நீண்டகால இருப்பை இலங்கையில் நிறுவுவதற்கான நிறுவனத்தின் இலட்சியத்தை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது.

தற்போதைய நிலைலயில் ரூ. 13 பில்லியன் மதிப்பிலான இத்தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் குறித்து கள ஆய்விற்காக, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கொண்ட விஜயமானது, கட்டுமான பணிகளை மதிப்பாய்வு செய்யவும், இலங்கையில் மருந்து உற்பத்திக்கான இந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னிலைப்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பையும் வழங்கியது. உள்ளூர் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதிலும் நாட்டின் மருந்துத் துறையை வலுப்படுத்துவதிலும் தனியார் துறை முதலீட்டின் பங்கு குறித்து கலந்துரையாடவும் இது ஒரு வாய்ப்பை வழங்கியது.

இது குறித்து, Premium International Injectable நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துஷிர ரத்தல்ல தெரிவிக்கையில், “இந்த தொழிற்சாலை தொடர்பான எமது முதலீடானது, இலங்கைக்கான எமது நீண்டகால அர்ப்பணிப்பையும், நாட்டின் மருந்து உற்பத்தித் துறையில் உள்ள வாய்ப்புகள் மீதான எமது நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இத்திட்டத்தை அதன் நிறைவை நோக்கி நகர்த்துவதிலும் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போதைய தொழிற்சாலைக்கு அப்பால், சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப மேலதிக தயாரிப்பிற்கான பலம், அளவுகள் (doses) மற்றும் உற்பத்திச் சூத்திரங்கள் (formulations) தொடர்பிலும் நாம் ஆராய்ந்து வருகிறோம். அதே நேரம், எமது வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய மூலோபாய உறவுகளையும் நாம் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

உயிரியல் தொழில்நுட்ப அடிப்படையிலான இன்சுலின் மற்றும் பொதுவான SVP தயாரிப்புகள் தொடர்பில் நிறுவனத்தின் கவனம் அமைந்துள்ளதோடு, நிபுணத்துவம் பெற்ற மருந்து உற்பத்தித் திறன்களை உள்நாட்டில் மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இது காட்டுகிறது. இன்சுலின் உற்பத்தியானது உரிய உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் தேவைகளை உள்ளடக்கிய அதே நேரத்தில், SVP தயாரிப்புகள் ஒப்பீட்டளவில் சிறிய அளவில் நிர்வகிக்கப்படும் ஊசி மருந்துகளை உள்ளடக்கியதாகும். இந்த இரண்டு துறைகளுக்கும் பொருத்தமான உற்பத்தி உட்கட்டமைப்பு, வலுவான தரக் கட்டமைப்புகள் மற்றும் உரிய ஒழுங்குபடுத்தல் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைப்பது அவசியமாகும்.

உள்ளூர் மருந்து உற்பத்தித் திறன்களின் வளர்ச்சியானது, மருந்து விநியோகச் சங்கிலிகளின் ஈடுகொடுக்கும் தன்மைக்கு பங்களிக்கவும், நாட்டின் தொழில்துறைத் திறன்களை விரிவுபடுத்தவும், சுகாதார மற்றும் மருந்துத் துறைகளில் திறன் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்கவுமான ஆற்றலை வழங்குகின்றது.

சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்து கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் மருந்து உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவது மருந்து விநியோகத்திற்கான ஈடுகொடுக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இத்தகைய முயற்சிகள் வலுவான தரமான தரநிலைகள், ஒழுங்குமுறை தொடர்பான இணக்கம் மற்றும் அர – தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் ஆதரிக்கப்பட வேண்டும்.” என்றார்.

Premium International Injectable நிறுவனம் தனது உற்பத்தித் திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் வேளையில், அரச மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத்தாபனம் (SPMC) உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. இத்தகைய ஈடுபாடானது பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களை ஆராயவும், இலங்கையின் மருந்து உற்பத்தித் துறையில் உள்ள தேவைகள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

நிறுவனத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையானது, தற்போதைய தொழிற்சாலைக்கு அப்பாற்பட்ட தூர நோக்கை கொண்டதாக அமைகிறது. சந்தையின் கேள்வி, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு, மேலதிக தயாரிப்பிற்கான வலிமை, டோஸ்கள் மற்றும் உற்பத்திச் சூத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய நிறுவனம் உத்தேசித்துள்ளது. இந்த அணுகுமுறையானது, அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகள் மற்றும் உள்ளூர் சந்தையின் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப எதிர்கால உற்பத்திக்கான வாய்ப்புகளை மதிப்பீடு செய்ய நிறுவனத்திற்கு உதவும்.

இத்திட்டமானது, நிறைவை நோக்கி நகர்ந்து வரும் இவ்வேளையில், Premium International Injectable நிறுவனம், இலங்கையில் மருந்து உற்பத்தியின் மேம்பாட்டிற்குப் பங்களிக்க ஆர்வமுள்ள சாத்தியமான முதலீட்டாளர்கள், மூலோபாய பங்காளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஏனைய வணிக நிறுவனங்களுடனான கலந்தாய்வு செய்வதற்கான வாய்ப்புகளுக்கும் தமது கதவுகளைத் திறந்துள்ளது. இந்த வாய்ப்புகள் எதிர்கால விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கவும், வணிக உறவுகளை வலுப்படுத்தவும், இத்துறைக்குள் ஒத்துழைப்பிற்கான பரந்த தளத்தை உருவாக்கவுமான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

Premium International Injectable நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த தொழிற்சாலையானது இலங்கைக்கான நீண்டகால அர்ப்பணிப்பின் அடித்தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தனது உற்பத்திக்கான இலட்சியங்களை முன்னேற்றமடையச் செய்வதன் மூலமும், எதிர்கால மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஆராய்வதன் மூலமும், உள்ளூர் தொழிற்சாலை உற்பத்தித் திறன்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், நாட்டின் மருந்துத் துறையில் ஒரு நம்பகமான பங்கேற்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவுமான இலக்கை நிறுவனம் கொண்டுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *