இலங்கையின் முதலாவது உறைவிக்கப்பட்டு, செறிவூட்டப்பட்ட தேங்காய் நீர் உற்பத்தி தொழிற்சாலை Hayleys Agriculture நிறுவனத்தால் திறப்பு

Hayleys Agriculture Holdings Limited நிறுவனம், இலங்கையின் முதலாவது உறைவிக்கப்பட்டு, செறிவூட்டப்பட்ட தேங்காய் நீர் உற்பத்தி தொழிற்சாலையான, Hayleys Nature Nest (Pvt) Ltd நிறுவனத்தை திறந்து வைத்துள்ளதன் மூலம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த அதிநவீன தொழிற்சாலையானது இலங்கையின் வளமான விவசாய வளங்களிலிருந்து மேலதிக மதிப்பை உருவாக்குவதற்கான எமது பயணத்தில் மற்றுமொரு முக்கிய படியைக் குறிக்கிறது. உள்ளூரிலிருந்து பெறப்படும் தேங்காய் நீரை ஏற்றுமதிச் சந்தைகளுக்கான, உயர் ரகத்தில் செறிவூட்டப்பட்ட தேங்காய் நீராக மாற்றுவதன் மூலம், Hayleys Nature Nest நிறுவனம் புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட விவசாய ஏற்றுமதிகளுக்கான எமது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த முதலீடானது எமது உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதற்கு அப்பால், உள்ளூர் தெங்குச் செய்கையாளர்கள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும், இலங்கையின் விவசாயத் துறையின் நீண்டகால வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கிறது.

இந்த முக்கிய தருணத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், எமது பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்கவும், இலங்கையின் மிகச்சிறந்த தயாரிப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும் நிலைபேறான, உயர்தர விவசாயத் தீர்வுகளை வழங்க நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *