தமது தொடர்ச்சியான குணப்படுத்தும் திறனின் (‘Art of Healing’) ஒரு அங்கமாக, பாதுகாப்பான தாய்மை மற்றும் சாதகமான பிரசவ பெறுபேறுகளுக்கு ஆதரவளிக்கும் தமது நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட மருத்துவ உட்கட்டமைப்பை ஜோசப் பிரேசர் ஹொஸ்பிடல் (Joseph Fraser Hospital) வெளிப்படுத்துகிறது.
முழுமையான வசதிகள் கொண்ட பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (Neonatal Intensive Care Unit – NICU), உயர் சார்புநிலை பிரிவு (High Dependency Unit – HDU), நவீன பிரசவ அறைகள், மேம்படுத்தப்பட்ட அறுவைசிகிச்சைக் கூடங்கள், இரத்த வங்கி மற்றும் ஆய்வுகூட சேவைகளுடன், தாய் மற்றும் சேய் சார்ந்த அவசரநிலை கொண்ட மற்றும் சிக்கலான மருத்துவ சூழ்நிலைகளை கையாள்வதற்கு இந்த மருத்துவமனை அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
உயர் ஆபத்து மற்றும் சிக்கலான கர்ப்ப காலங்களைக் கையாள்வதில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட முன்னணி மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணரான (Consultant Obstetrician and Gynaecologist) டாக்டர் றமீஸ் புருகான், இந்த விசேட பராமரிப்பு பிரிவிற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்.
தாயின் ஆரோக்கியம் மற்றும் கருவின் வளர்ச்சி ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணிப்பதன் மூலமும், சரியான நேரத்தில் மருத்துவத் தலையீடுகளை மேற்கொள்வதன் ஊடாகவும், சவாலான கர்ப்ப காலங்களைக் கொண்ட எண்ணற்ற குடும்பங்கள் நம்பிக்கையுடன் பிரசவத்தை எதிர்கொள்ள அவர் உதவியுள்ளார்.
மலட்டுத்தன்மை (subfertility) முகாமைத்துவம் மூலமாகவும் தம்பதியருக்கு ஆதரவளித்து, பலர் தங்களது பெற்றோர் நிலையை அடைவதற்கான முதல் அடியை எடுத்து வைக்க டாக்டர் றமீஸ் உதவி வருகிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது, சவால்கள் எழக்கூடும் ஆயினும், ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிதல், நெருக்கமான கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்திலான தலையீடு ஆகியன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அத்துடன், சரியான பராமரிப்பு மற்றும் நிபுணத்துவத்துடன், அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள் கூட ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஆரம்பத்திற்கு வழிவகுக்கும்.” என்றார்.
தனது மருத்துவ பயிற்சிக்கு மேலதிகமாக, ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் கராப்பிட்டி போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் ஊடாக விசேட மருத்துவ பயிற்சிகளுக்கு டாக்டர் றமீஸ் பாரிய பங்களிப்பை மேற்கொண்டுள்ளார். பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பில் ஒரு மரியாதைக்குரிய தலைவராக அவரது நற்பெயரை இது மேலும் வலுப்படுத்தியுள்ளது.
‘Art of Healing’ மூலம், வாழ்க்கையின் மிக முக்கியமான பயணங்களில் ஒன்றின் ஊடாக குடும்பங்களை வழிநடத்தும் நிபுணத்துவம், இரக்கம், அர்ப்பணிப்பை ஜோசப் பிரேசர் வைத்தியசாலை கொண்டாடுகிறது. அத்துடன் ஒவ்வொரு தாயும் சேயும் மிக உயர்ந்த தரத்திலான பராமரிப்பை பெறுவதை இது உறுதி செய்கிறது.